Wednesday, May 5, 2010

ஒரு பெரிய்ய்ய்ய்ய விஷயம் - ஒரு குட்டி கதையில்!!

இந்த நாளை கொண்டாடுங்கள்!!
அந்த துறவிகள் கூடத்தில் புதிதாக சேர்ந்திருந்தார் அந்த இளம் துறவி.
மாலை நேரத்தில் அந்த ஆசிரமத்தில் இருக்கும் மூத்த துறவியிடம் சென்று ஆசிப்பெற்றுவிட்டு
தன் அறைக்கு திரும்பினார் துறவி. விடிகாலை தியானத்திற்காக சீக்கிரம் எழுந்தார் அந்த இளம் துறவி.
வெளியே வந்து பார்த்தவருக்கு ஒரே ஆச்சரியம்..அந்த மூத்த துறவி மகிழ்ச்சியாக நடனமாடிக்கொண்டிருந்தார்.
இந்த இளம்துறவிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. “என்னடா இந்த மனிதர் இப்படி குதிக்கிறார்..ஆடுகிறார்..பாடுகிறார்?..ஒருவேளை இவருக்கு
பைத்தியமோ” என்று நினைத்துகொண்டார்.

பிறகு அடுத்த கட்ட வேலைகள் வந்து சேர..இந்த விஷயத்தை மறந்து போனார்.
இரவு படுக்க போகும் போதும் இதே போல மூத்த துறவி குதித்தாடி கொண்டே தன் அறைக்கு செல்வதை இந்த இளம்துறவி பார்த்துவிட்டார்.

“என்ன இந்த மனிதர் இப்படி செய்கிறாரே..குழந்தைதனமாக அல்லவா இருக்கிறது” என்று நினைத்தபடியே தூங்கிப்போனார்.

அடுத்த நாள் காலையும் அதே போல் மூத்த துறவி குதியாட்டம் போட..
இந்த இளம்துறவிக்கு ஆர்வம் தாங்கவில்லை.. நேரடியாக கேட்டே விடுவது என்று முடிவு செய்து அவரை நெருங்கினார்.

மூத்த துறவி இவரை பார்த்து புன்னகைக்க..
இவர் தன் சந்தேகத்தை கேட்டார் : “அய்யா, கடந்த இரண்டு நாட்களாக நானும் கவனித்து வருகிறேன்..நீங்கள் தினசரி காலையும்
இரவு தூங்க செல்வதற்கு முன்னும் இப்படி மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறீர்கள்..இது ஏன்? அப்படி என்ன விஷயத்தை சாதித்ததால்
இந்த மகிழ்ச்சி? எனக்கும் சொல்லுங்களேன் “ என கேட்கிறார்.

அந்த கேள்வி மூத்த துறவியை இன்னும் சிரிப்பு மூட்டியது. விழுந்து விழுந்து சிரித்தார்.
இப்போது அந்த இளம்துறவியை பார்த்து கேட்டார் : “எதாவது சாதித்தால் தான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா என்ன?”என்று.

இவரும் ”ஆமாம், அதுதானே மகிழ்ச்சி”என்று சொல்ல..

மூத்த துறவி “அப்படி பார்த்தால் நான் இங்கே உன்னோடு பேசிக்கொண்டிருப்பதே சாதனை தான்” என்றார்.

இளம்துறவிக்கு இன்னும் புரியவில்லை. “எப்படி வெறுமனே பேசுவதே சாதனையாகும் ?” என்று கேட்டார்.

துறவி கொஞ்சம் நிதானித்து விளக்கினார் “ இன்று நீ என்னிடம் பேச, இந்த கேள்வியை கேட்க இறைவன் அல்லது இயற்கை உன்னை
இன்னும் உயிரோடு வைத்திருக்கிறதே..அது சாதனை தான். இன்று காலை நீ மரணத்தை வென்று விழிந்தெழுந்துவிட்டாய். இதோ
என் பேச்சை கவனிக்கும் இந்த கணம் நீ மரணமடையவில்லை..எனவே நீ மரணத்தை வென்று வாழ்கிறாய்....இப்படி உலகையே அச்சுறுத்தும்
மரணத்தை சர்வ சாதரணமாக வெற்றிகொள்வது சாதனை இல்லையா..இதற்கு நீ மகிழ்ச்சி கொள்ள வேண்டாமா?” என்று கேட்கிறார்.இளம்துறவியின் கண்கள் பனித்தன. மகிழ்ச்சி அவரையும் தொற்றிகொள்ள..அவரும் எழுந்து நடனமாட துவங்கி விட்டார்.

.....

இந்த கதையை படித்து முடிக்கும் வரை எல்லாமே சரியாக நிகழ்ந்திருக்கிறது. உங்கள் கணினி சரியாக இயங்குகிறது. உங்களுக்கு கண் பார்வை
தெரிகிறது. நீங்கள் அழகாக மூச்சு விடுகிறீர்கள். சொல்லப்போனால் இன்னும் உயிரோடு தான் இருக்கிறீர்கள்..எனவே மகிழ்ச்சி கொள்ளுங்கள்.
சோதனைகளை எல்லாம் சாதனையாக்குங்கள்.

(பி.கு)இது முழுக்கதையும் எங்கிருந்தும் எடுக்கபடவில்லை. என் எண்ணங்களில் உதித்தது தான். :)

18 comments:

ரோகிணிசிவா said...

superb message ,
"atleast to complain u r alive ,there are many who are not there even to complain",
cherish ur life, count ur blessings.
thanks for sharing

சிட்டுக்குருவி said...

கதை நல்லாருக்கே

Anonymous said...

ரங்கானந்தா ஸ்வாமி, தங்கள் கருத்து நன்றாக உள்ளது. ஆசிரமம் எப்போது ஆரம்பம்? :))

அன்னபூரணி said...

உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்.

இதை கதையாய் படித்தால் சிரிப்பு மட்டும் வரும்....உணர்ந்து படித்தால் ஆழம் புரியும்
தோழமைகளே உணர்ந்து படியுங்கள்.

☀நான் ஆதவன்☀ said...

நல்ல கதை ரங்கா

சுசி said...

கதை நல்லாருக்கு ரங்கன்.

//நீங்கள் அழகாக மூச்சு விடுகிறீர்கள். //
ஆவ்வ்வ்வ்..

ரங்கன் said...

@ரோகிணிசிவா,

நன்றி டாக்டர். வருகைக்கு நன்றி!

ரங்கன் said...

@சிட்டுகுருவி,

நல்லாயிருக்கா..!! மிக்க மகிழ்ச்சி..!!

வருகைக்கு நன்றி...!!

ரங்கன் said...

@மயில்,

ஆ..அது சிரமம்..!! நோ ஆசிரரம்..!!

நான் வரலை இந்த விளையாட்டுக்கு!!

ரங்கன் said...

@அன்னபூரணி,

உண்மைதான் அன்னபூரணி, உணர்ந்து படிக்கும் போது கிடைக்கும் தெளிவு அலாதியானது..!!

வருகைக்கு நன்றி!!

ரங்கன் said...

@சுசி,

அந்த ஆவ்வ்வ்வ் எதை குறிக்கிறது?

தூக்கமா? அழுகையா?

cheena (சீனா) said...

அன்பின் ரங்கா

இருக்கிறாயா - உயிருடன் இருக்கிறாயா - சாதனைதான்

இதனைப் படிக்கிறாயா - அதுவும் சாதனைதான்

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

*இயற்கை ராஜி* said...

mm.. nalla thinking.. nalla story.. keep it up

மங்களூர் சிவா said...

nice!

Anonymous said...

un karpanai theran paratta thakkathu ranga...

முனைவர்.இரா.குணசீலன் said...

அருமை..

நிறைவு செய்தவிதம் பாராட்டத்தக்கது..

ப்ரின்ஸ் said...

பதிவுகள் எல்லாம் படித்து பார்த்தேன் நல்லா எழுதிருக்கிறாய் தெளிவான சிந்தனைகள் , உள்ளத்தில் இருப்பதை விவரித்திருக்கை நல்லது தொடரட்டும் உம்பணி ... மலரட்டும் மனித நேயம் ........

cheena (சீனா) said...

அன்பின் ரங்கா - மூச்சு விடுவதில் என்ன அழகினைக் கண்டாய் ரங்கா - சாதனைகள் தான் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.