Friday, August 27, 2010

"நல்லவர்"- ஒரு மோசமான கெட்ட வார்த்தை!



என்னடா இவன், நல்லவர்னு சொல்றதை கெட்ட வார்த்தை ஆக்கிட்டானேன்னு
யோசிக்கிறீங்களா.. காரணம் இருக்கு..

முதல் காரணம். நம் மனது. அதென்ன.. நன்மை தீமை, நல்லவர், கெட்டவர்..
இந்த இரண்டு விஷயங்களும் எப்படி நம் மனித சமுதாயத்தை எப்படி ஆக்ரமிக்க
ஆரம்பித்தன..?

நல்ல- என்பது என்னை பொறுத்தவரை சாதகமான என்கிற வார்த்தையின் திரிபுச் சொல்.
அதாவது நமக்கு சாதகமான எல்லாமே நமக்கு நல்லவை. நம் பேச்சை கேட்டு வளரும் பிள்ளைகள்
நல்ல பிள்ளைகள். நம் தேவைக்கேற்ற சம்பளம் வழங்கும் நிறுவனம் நல்ல நிறுவனம். இப்படி
நமக்கும், நம் சூழ்நிலைகளுக்கும் சாதகமாக எவரோ, எவைகளோ இருந்தால் அவைகள், அவர்கள்
நல்லவர்களாகிவிடுகிறார்கள்.

இந்த நல்ல , தீய என்கிற வார்த்தைகள் வெகு சீக்கிரமாக நம் மனதை  ஆக்ரமித்து நம் அறிவுக்கு
வேலை இல்லாமல் செய்து நம்மை முடமாக்கிவிடுகின்றன. அதுவும் நம்மை பார்த்தே நான்கு பேர்
நல்லவன் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டால்.. முட்டாளாக முதல் வகுப்பு ஆரம்பித்துவிட்டது என்றே அர்த்தம்..!!

நல்லவர் பட்டம்: அதென்ன நல்லவர் என்கிற முத்திரை குத்துவது? ஏன் இந்த வழக்கம்?
அதாவது ஒருவர் உங்களுக்கு சாதகமாக செயல்படவோ, செயல்பட்டிருந்தாலோ அவரை உங்கள்
அருகில் வைத்துகொள்ள இந்த நல்லவர் பட்டத்தை அவருக்கு கொடுத்து நீங்களும் அவரும் சேர்ந்தே
நல்லவராகிவிடுகிறீர்கள்.

நல்லவன் ஒரு மனநோயாளி: என்னது நல்லவன் மனநோயாளியா? ஆமாம். இல்லாத ஒரு கற்பனையான
ஒரு பதவியை, முத்திரையை  தன்மீது சுமந்துகொண்டு, அதனால் ஒரு பலனும் இல்லாமல் படாதபாடுபடும்
பரிதாப மனநோயாளி. அவனுக்கு இந்த முத்திரையை குத்தியதும் சில மனநோயாளிகள்தான்.
இந்த மனநோயால் பாதிக்கப்படுவது, அவனுடைய சொந்த வாழ்க்கையும், அவனை  சுற்றியுள்ளோரின் வாழ்க்கையும்தான்.
இதை புரிந்துகொண்டாலுமே இதில் இருந்து வெளிவர பெரும்பாடு படவேண்டும்.

கடவுள் நல்லவரா? : என்னை கேட்டால் நிச்சயமாக இல்லை. நமக்கு சாதகமான விஷயங்களை , சூழ்நிலைகளை மட்டுமே  அமைத்துதரும் கடவுள் நிச்சயம் கடவுளாகக்கூட இருக்க முடியாது.
காரணம், சிறப்பான வாழ்க்கைக்கு, மேம்படும் வாழ்க்கைக்கு அன்பு எப்படி முக்கியமோ அதே போல்
சில அடிகளும் முக்கியம். இரண்டுமே நம்மை மேம்படுத்தும். நம்மை வலிமைமிக்கவராக ஆக்கும் ஒரு ஜிம் ட்ரெயினர் , அல்லது பி.டி. மாஸ்டரை போலத்தான்
கடவுள் இருக்கமுடியுமே தவிர.. நம் காதுக்கும், கண்ணுக்கும் இனிமை  அளிக்கும் கவர்ச்சி நடிகையாக இருக்க முடியாது.

இப்போ  என்னதான் செய்யட்டும்? : வெகு எளிய வழி ஒன்று இருக்கிறது. பட்டத்தை  தூக்கி எறி, அதுக்காக பத்துபேர் பல்லை உடைக்க சொல்லவில்லை.
சூழ்நிலைகளை  அப்படியே  ஏற்றுகொள்ளுங்கள். இந்த சூழ்நிலைக்கு நீங்கள் கெட்டவராகியே தீரவேண்டுமென்றால், போய்ட்டு போகுது பதவி. கெட்டவராகுங்கள்.
நமக்கு End Result தான் முக்கியமே தவிர..பட்டம் முக்கியமில்லை. கையில் கத்தியோடு எதிரி முன்னால் நிற்கும் போது, நல்லவன் வேஷம் பலிக்காது.
அவனுக்கு நீங்கள் கெட்டவனானால்தான்..உங்கள் குடும்பம் உங்களை  போற்றும். இல்லைன்னா எமதூதர்கள்கூட கேவலமாக சிரிப்பார்கள்.

மொத்தத்தில், இனிமேல் யாராவது உங்களை நல்லவர் என்று சொன்னால் எச்சரிக்கையாக இருங்கள். அது உங்களை அரவணைக்க அல்ல. ஆப்பு வைக்க.!!

 டிஸ்கி: அதே  போல் உங்களை நன்கு புரிந்துகொண்டவர்கள் உங்களை நல்லவர் என்றும் போற்றி புகழமாட்டார், கெட்டவர் என்றும் தூற்றி இகழவும் மாட்டார்.

20 comments:

cheena (சீனா) said...

அன்பின் ரங்கா

படித்து விட்டேன் - சிந்தித்து மறு மொழி பிறகு இடுகிறேன் - சரியா

நல்வாழ்த்துகள் ரங்கா
நட்புடன் சீனா

Ungalranga said...

சீனா ஸார்,

யோசிச்சு சொல்லுங்க சீனா சார்..!!

வெயிட்டிங். :)

dondu(#11168674346665545885) said...

எப்போதுமே டைப்காஸ்ட் ஆகாமல் தவிர்க்கவும். நீங்கள் நல்ல முறைகளைப் பிரயோகிப்பது உங்கள் நலனுக்கு உட்பட்டே இருக்க வேண்டும். மற்றவருக்கு தீமை செய்யலாகாது என்று இருப்பதன் முக்கிய நோக்கமே தனக்கும் அதே நிகழாலாம் என்ற பயமேயாகும்.

முக்கிய நோக்கம் இறுதி வெற்றி. அது வரும் வரைக்கும் நீங்கள் திசை திரும்பலாகாது. நாலு பேர் என்ன கூறுவார்களோ என யோசித்து கொண்டிருந்தால் அதோகதிதான். ஏனெனில் எதிரி அவ்வாறெல்லாம் யோசித்து நேரம் வீணாக்க மாட்டான்.

இதைச் சொன்னதும் நான் படித்த ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது. டாமும் ஹாரியும் நண்பர்கள். அவர்களது மனைவியரும் தோழிகள். நால்வருமாகச் சேர்ந்து உல்லாசப் பயணம் செல்கின்றனர். ஹோட்டலில் இரண்டு அறைகள் ஒவ்வொரு தம்பதிக்கும் புக் செய்துள்ளனர். போன இடத்தில் மழை. நால்வரும் ஹோட்டலுக்கு ஓடி வருகின்றனர். மின்சாரம் வேறு ஃபெயில் ஆக, எங்கும் இருட்டு. தட்டுத் தடுமாறி தத்தம் மனைவியருடன் டாமும் ஹாரியும் அறைகளுக்கு திரும்புகின்றனர். டாம் படுக்கப் போகுமுன் இறைவனை பிரார்த்தனை செய்வது வழக்கம். ஐந்து நிமிடம் அதில் செல்ல, பிரார்த்தனை முடியவும் மின்சாரம் திரும்ப வரவும் நேரம் சரியாக உள்ளது. இப்போதுதான் டாமுக்கு தெரிகிறது தன்னுடன் தன்னறையில் வந்தது ஹாரியின் மனைவி என்று. துடிப்பாக கதவை நோக்கி அவன் ஓட ஹாரியின் மனைவி கூறுகிறாள். "டூ லேட் டாம். ஹாரி பிரார்த்தனையெல்லாம் செய்வதில்லை".

அன்புடன்,
டோண்டு ராகவன்

Ungalranga said...

@dondu,

உண்மை தான் ஸார்.!!
ஜோக் சூப்பர்..!!

வருகைக்கு நன்றி!!

vinu said...

neeeeeeeeeeeeeeeeenga roamba nallavarungoooooooooooooooooooooo


kaassa panamaaaaaaaaaaaaaa
oru Dr. pattamthaanea vachukkkoooonga

neeenga roamba nallavarungooooooooooooo

நாமக்கல் சிபி said...

Maappi, nee rooooooooomba nallavanda!

settaikkaran said...

நீங்க நல்லவரா கெட்டவரா?
டொண்..ட..டொண்..ட..டொண்ட..டாய்ங்...டொண்டடாய்ங்க்...!(நாயகன் ரீ-ரிகார்டிங்)

Anonymous said...

ranga.. நீ ரொம்ப நல்லவன்....நல்லவன்..நல்லவன்..

கேபிள் சங்கர்

Anonymous said...

சரிங்க நல்லவரே :)



- எம்.எம்.அப்துல்லா

Anonymous said...

சத்தியமா நான் படிக்கலை ஏன்னா நான் ரொம்ப நல்லவா என்ற பட்டத்தை தூக்கி எறிய தயாரில்லை

Ungalranga said...

@vinu,

Why this Murder veri...?!

karthickeyan said...

ஆமா ரங்கா....
நானும் அப்புடித்தான்...

நமக்கு பிடிக்கலனா? ரெண்டுல ஒண்ணு பாக்க வேண்டியது தான்...

prince said...

உண்மைதான் ரங்கா!! நல்ல சிந்தனை!

வால்பையன் said...

//பி.டி. மாஸ்டரை போலத்தான்
கடவுள் இருக்கமுடியுமே தவிர.. நம் காதுக்கும், கண்ணுக்கும் இனிமை அளிக்கும் கவர்ச்சி நடிகையாக இருக்க முடியாது.//


கடவுள் கவர்ச்சி நடிகையா?
நினைச்சு பார்க்கவே குஜாலா இருக்கே!

Ungalranga said...

@cable shankar,
@N.R. Shibi,
@சேட்டைக்காரன்,
@அப்துல்லாண்ணா,

ஏங்க..ஏன்..ஏன் இப்படி?

Ungalranga said...

@தமிழரசி,

மா, நீ ரொம்ப நல்லவம்மா..ரொம்ப நல்லவ!!

:)

Ungalranga said...

@karthikeyan,
@prince,

thank u guys...

@ வால்பையன்,

ஏங்க.. நினைப்பு இப்படி போகுது.. ஆனா..இருந்தா நல்லா இருக்கும்ல..(இது கமல் சொன்னது)..

கனிமொழி said...

There is nothing called good or bad in this world...
yellam nama create pannikittathu than ranga...

cheena (சீனா) said...

அன்பின் ரங்கா

நல்லவனென்பதும் கெட்டவன் என்பதும் ஒப்பு நோக்கும் சொற்களே ( ரிலேடிவ் வேர்ட் ) - தீர்க்கமான சொற்கள்( அப்சொலூட் வேர்ட் ) அல்ல - ஆகவே நாம் அதனைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம்.

நம்மை ஒருவன் அழிக்க வருகிறான் எனில் - அவனிடன் சண்டை போட்டு அவனை அழிப்பது தவறல்ல. அதே நேரம் அவனது கண்ணோட்டத்தில் நாம் கெட்டவர்களாக இருப்பின் அவன் கெட்டவன் அல்ல

சரி சரி - பைத்தியம் பிடிக்கும் முன் பை சொல்லிடறேன்

RVS said...

யாராவது ஆட்டோ வச்சு கூட்டிகிட்டு போய்... நல்லவன்னு சொல்லி..... அப்படி எதுவும் ஆகிடலையே... சும்மா தமாசு... நல்ல இருந்துச்சு உங்க சிந்தனைகள்...
அதோட டோண்டு சாரின் ஜோக் அற்புதம்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.