Tuesday, October 19, 2010

நீங்க அறிவாளியா ? நல்லவரா?


இந்த உலகமே இரண்டு முக்கியமான அம்சங்களில் இயங்குகிறது.
ஒன்று.. அறிவு. இன்னொன்று அன்பு.

சொல்லபோனால்.. இரண்டுமே எல்லாவகையிலும் ஒன்றுகொன்று எதிரானவை.
ஆனால் இந்த இயற்கையை , மொத்த பிரபஞ்சத்தை எடுத்து பார்த்தால்..
வாய்பிளக்கவைக்கும் அறிவியலும், நெஞ்சை பிழியும் அன்பும் சரிசமமாய் இணைந்திருக்கிறது.

ஏன் வானம் வரை போய்கொண்டு... ஒரு மரத்தை எடுத்துகொள்ளுங்கள்.
அதன் வேர்கள்.. அதன் கிளைகளை விட நீளமானவை.. ஆழமானவையும் கூட.
அதன் நடுமரம். அதாவது தண்டுபகுதி.. அது கடினமானதே என்றாலும்..அதன் வழியாகத்தான்
நீர் புகுந்து செல்கிறது. இது கிளைகளின் பரவி..இலைகளை தளைக்க செய்கிறது.
சூரியகாந்தி பூவை எடுத்துகொள்ளுங்கள். அதன் நடுவில் மகரந்த அடுக்கு.. அது ஒரு
Fibonacci numberக்கு சரியான குறியீடு.

இப்படி மனிதன் தன்னை சுற்றி உள்ள எல்லா விஷயங்களில் அறிவியல் ஒளிந்திருப்பதை
காண்கிறான். அதை கணிதத்திலும், கணினியிலும் கணக்கிட்டு புதிய பல மேம்பாடுகளை
அவன் வாழ்க்கைக்கு ஏற்படுத்தி கொள்கிறான்.

இப்படி, வாழ்க்கையின் எல்லா விஷயங்களிலும் அறிவியலை திணித்து திணித்து..
அதாவது..மூளையை கொண்டு மட்டுமே யோசித்து யோசித்து..இன்று மனிதன்
இதயமில்லாதவன் என்ற பெரும்பேறு பெற்றிருக்கிறான்.

ஒரு மரத்தின் இத்தனை விஷயங்களை கவனித்து கணித்த நாம், அதன்
சலசலப்பில் என்றாவது மனம் மயங்கி நின்று..நாமும் மரமும் ஒன்றாகி நின்றிருப்போமா?

இப்போது அறிவியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் வாழ்வில் நடத்த சம்பவத்தை
சொல்கிறேன் கேளுங்கள்.

ஒருமுறை  அவரை சந்திக்க சில விஞ்ஞானிகள் வந்திருக்கிறார்கள்.
என்ன விஷயம் என்று கேட்டால், புகழ்பெற்ற பீத்தோவனின் சிம்பனிகளை
ஆராய்ந்ததில் சில புதிய ஒலிமாறுபாடுகளை கண்டுபிடித்திருப்பதாகவும்,
அவைகளை ஐன்ஸ்டீனும் ஆராய்ந்து ஒரு ஒப்புகை சான்று வழங்கவேண்டும்
எனக் கேட்க வந்திருந்தனர்.
ஐன்ஸ்டீனுக்கோ வெகு கோபம், ஒழுங்காக ஓடிவிடுங்கள்.
அந்த மாமனிதரின் இசையை, அதன் தெய்வீகத்தை  ரசித்து மகிழ்வதை
விட்டுவிட்டு.. அதை கூறுபோட்டு அசிங்கப்படுத்த பார்க்கிறீர்களா?
கிளம்புங்கள் முதலில்.. என்று அவர்களை விரட்டிவிட்டார்.

 அறிவு.. என்ற ஒன்றை மட்டுமே கொண்டு
எந்த வகையிலும் வாழ்க்கையை நடத்திவிட முடியாது என்று இயற்கைக்கே
தெரிந்ததால்தான் நமக்கு இதயத்தையும் சேர்த்து வைத்து படைத்திருக்கிறது.

அதை சுத்தமாய் மறந்துவிட்டு... அறிவியலை கண்ட உலகில் அன்பை
பறிகொடுத்துவிட்டு நிற்கிறோம்.

இதற்கு ஒரு மாற்று உண்டு.
நீங்கள் உங்களை பிடிக்காதவரோடு பேசவும் பழகவும் வேண்டி உள்ளதா?
3:1 என்கிற அளவில் , 3 பங்கு அறிவு, ஒரு பங்கு அன்போடு இருங்கள்.
உங்கள் குழந்தைகளிடம்... 1:3, அதாவது ஒரு பங்கு அறிவு..மூன்று பங்கு
அன்போடு இருங்கள். இப்படி சரியான அளவுகளில் மூளையையும், இதயத்தையும்,
பயன்படுத்த பழகிகொண்டால், வாழ்வில் நாம் எந்த தடைகளையும்
முறியடித்து வாழலாம்..!!

6 comments:

vaarththai said...

1:3

Anonymous said...

ரங்கா எப்படி இப்படி தெளிவா யோசிக்கிற..சிறந்த பதிவு..

ரங்கன் said...

@vaarththai,

சரியா போச்சு..!! மொத்த பதிவுல..இத மட்டும்தான் படிச்சீங்களா?

ஹாஹாஹா!!

ரங்கன் said...

@தமிழரசி,

ஆச்சரியபட ஒன்றுமில்லை, எல்லாம் உன்னோட ஆசி!! ;)

cheena (சீனா) said...

அன்பின் ரங்கா - சும்மா சொல்லக் கூடாது - இந்த வயசுல மத்தவனெல்லாம் என்ன பண்றான் - அவன் சிந்தனை என்ன - நீ எப்படி இப்படி எல்லாம் சிந்திக்கறே ! நீ ஒரு வித்தியாசமானவன் ரங்கா ! நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

V.Radhakrishnan said...

மிகவும் சிறப்பாக இருக்கிறது. சம பங்குதான் சரிபட்டு வரும்.

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.