Friday, October 29, 2010

என் கேள்விக்கென்ன பதில்?நாம் நம்முடைய இந்திய கல்வியின்படி சிறப்பாக பதில் சொல்லவே கற்றுதரப்படுகிறோம்.
அதே 40 வருட பழமையான கேள்விகள். பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கிற்து.

என்னை எப்போதும் வாட்டுவது..
ஒரு குழந்தையிடம் ¨நீ வருங்காலத்தில் என்னவாக போகிறாய்?¨ என்ற முட்டாள்தனமான
கேள்வி.
ரேடியோக்களில், டி.வியில், ஏன் நம் வீடுகளிலும் சகஜமாய் இந்த கேள்வி குழந்தைகளிடம்
கேட்கப்படுகிறது. இது ஒரு அர்த்தமற்ற கேள்வி.
அதே கேள்வியை குழந்தை உங்களிடம் திருப்பிகேட்டால்..
¨நீங்க என்னவா  ஆகி இருக்கீங்க அங்கிள்/ஆண்டி? சின்னவயசில் நீங்க சொன்னதை அடைஞ்சுட்டீங்களா?¨ என்று தன் பிஞ்சு மொழியில் கேட்டாலும்..நெஞ்சில் நஞ்சை பாய்ச்சியதுபோல
இருக்கும். காரணம். நமக்கே தெரியும்.
நாம் நம்மை இலக்கை இன்னும் அடையவே இல்லை. நம் இலக்கை இன்னும் தீர்மானிக்கக்கூட இல்லை என்பது.
குழந்தைகள் கலெக்டர்களாவதற்கு பிறக்கவில்லை, டாக்டராகவும் பிறக்கவில்லை, என்ஜினியராகவும்
பிறக்கவில்லை. அவர்கள் வாழப் பிறக்கிறார்கள்.  அவர்கள் நம்மைப்போல் கேள்விகளுக்கு பதில்
சொல்லும் கிளிப்பிள்ளைகள் இல்லை. பிரபஞ்சத்தின் மிச்சங்கள் அவர்கள். அவர்களுக்கு சிறப்பாக
பதில் சொல்ல கற்றுதருவதை விட சிறப்பாக கேள்விகேட்க கற்றுகொடுக்க வேண்டும்.

இனி பிள்ளைகளிடம் நீ என்னவாக போகிறாய் என்று கேட்காதீர்கள்..
அவர்கள் எப்படியும் நீங்கள் சொல்லிகொடுத்ததை தான் சொல்வார்கள்.
அவர்களுக்கு முதலில் வாழ கற்றுகொடுங்கள். கேள்வி கேட்கும் பிள்ளைகளால்தான் உலகம் இந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறதே தவிர..
டேப்ரிக்காடர்களாலோ, கிளிப்பிள்ளைகளாலோ..இந்த உலகுக்கு ஒரு புண்ணியமும் இல்லை.

ஏன் ஆப்பிள் கீழே விழவேண்டும்? என்று ஒரு இந்தியன் யோசிக்கவில்லை.
ஒருவேளை  பூமி சூரியனை சுற்றுகிறதோ? என்று இந்தியன் யோசிக்கவில்லை. தீக்குளித்தானே முத்துகுமார்.. உண்மையில் அவன் ஈழத்துக்காகத்தான் இறந்தானா? என்று
எத்தனை பேர் யோசித்து இருப்போம்..??

3000 ஆண்டுகளாக மண்ணையும், பெண்ணையும் தின்றே வாழ்ந்த சமூகம் நம் சமூகம்.
இல்லை..இல்லை..ஆர்யபட்டருக்கு புவியீர்ப்பு தெரியும், கோள்களை பற்றியும் தெரியும் என்று சொன்னாலும்..
அவைகள் மதக்கலாச்சாரத்தில் மக்கிபோய்விட்டன.

தெரியும் என்று சொல்வதை விட..தெரிவிக்க என்ன செய்யலாம் என்று யோசிப்பவனை தான் உலகம்
தேடிக்கொண்டிருக்கிறது.

இன்று கேள்விகளை சிறப்பாக கேட்க தெரிந்ததால் தான் சந்திராயன் என்கிற இந்திய செயற்கோளை
உலகுக்கு தந்து நம்மால் நெஞ்சை  நிமிர்த்தி நிறக முடிகிறது.

கேட்பவனின் துணிவும், அதற்கான பதிலை  அடைய துடிக்கும் முயற்சியும் இருந்துவிட்டால்..பிரபஞ்சத்தின் கதவுகள்..தானே  திறந்துகொள்ளும்..!!

(பி.கு):  இந்த பதிவு சம்பந்தமாய் எதேனும் கேள்விகள் இருந்தால் என்னை கேட்கலாம்!!

13 comments:

Anonymous said...

மெய்யாலுமே யோசிக்க வச்சிட்ட ரங்கா.. நிறைய தெளிவுகள் தேவையா இருக்கு எனக்கும்...

ரங்கன் said...

@தமிழரசி,
எனக்கும் இன்னும் தெளிவாகாத பல கேள்விகள் இருக்கு..!!

ம்ம்..ஜாலியா விடை தேடலாம்..வாங்க!!

Anonymous said...

முத்துக்குமாரை இங்க விமர்ச்சித்து இருப்பது தவறு...இந்த பதிவில் அலசனுமுன்னு ஆரம்பிச்சா நிறைய விவாதங்கள் பண்ணவேண்டி வரும் ஏன்னா நீ இங்கு பதிவிட்டதில் மிகச்சில மட்டுமே யோசிக்க வேண்டியவை..

என்.ஆர்.சிபி said...

மாப்பி,
இதில் உள்ள சில வரிகளில் எனக்கு உடன்பாடில்லை. நான் வன்மையாகக் கண்டிப்பதோடு மட்டுமின்றி ஒரு மாமனாக இடித்துரைக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்

ரங்கன் said...

எனக்கு முத்துகுமார் மீது எந்த கோபமும் இல்லை.
அந்த மனிதரின் இழப்புக்கு நானும் வருந்துகிறேன்.
அதை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தி அவரின் தியாகத்தை இழிவு படுத்திவிட்டதாக என் மனதிற்கு பட்டதைதான் இங்கே சொல்லவந்திருக்கிறேன் என்பதை
தெளிவுடன் தெரிவித்துகொள்வது மட்டுமில்லாமல், அவரை பற்றி மேலும் பேசி விவாதத்தை வேறு திசையில் வளர்க்க வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன்..!!

என்.ஆர்.சிபி said...

//உண்மையில் அவன் ஈழத்துக்காகத்தான் இறந்தானா?//
This line itself showing the direction of argument

ரங்கன் said...

@சிபி மாம்ஸ்,
நீங்க சொல்வது போலில்லை.. இந்த பதிவே ஆர்குமெண்டுக்கானது தான்..!!

வால்பையன் said...

நீங்க கிழவனானதும் என்னாவிங்க அங்கிள்!?

ரங்கன் said...

@வால்பையன்,
குழந்தாய்.. நம்ம ஊரிலேயே பெரிய மடம் அமைச்சு..அதுல நடுவுல பெரிய டூம் போட்டு..அதுக்கு நடுவுல ஒரு அண்டாவை கமுத்தி வெச்சி..அதான் சாமி..
”அண்டாவை கும்பிடு..
அறிவு வரும்”னு
அட்வைஸ் பண்ணிகிட்டு இருப்பேன்..


நீயும் எனக்கு சிஷ்யனாகலாம் குழந்தாய்!!
உனக்கு கடவுளின் அருள் முழுசாய் இருக்கு!!

வால்பையன் said...

//உனக்கு கடவுளின் அருள் முழுசாய் இருக்கு!!//

கடவுளுக்கே காவாசியை வெட்டிபுட்டாங்களாமே!

ரங்கன் said...

@வால்பையன்,
இப்படி லாக் பண்ற மாதிரி கமெண்ட் போட்டா பயந்துடுவோமா? இல்ல பயந்துடுவோமான்னு கேக்குறேன்.?!

shortfilmindia.com said...

இதுக்கப்புறமும் கேள்வி கேட்பாங்க..
கேபிள் சங்கர்

ரங்கன் said...

@ கேபிள் சங்கர்,
மான் கராத்தே தெரிந்தவன் யாருக்கும் அஞ்சமாட்டான்!!
:))

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.