Monday, October 25, 2010

எல்லாருக்குள்ளும் ஒரு கமலஹாசன்!!









"ம்கும்..ஆளை பார்த்ததும் என்ன நடிப்பு நடிக்கிறா /ன்.."
"வந்துட்டா/ன்.. இவ /ன்கிட்ட கமல் ட்யூஷன் போகணும்.."
”ஹையோ.. இப்படி நடிக்கிதே பக்கி.”
”ஆரம்பிச்சுட்டாண்டா/டி சீனை..!!”





இதெல்லாம் மக்களிடையே பொதுவாக ஆக்டிங் போடுபவர்களை
பார்த்ததும் எழும் மைண்ட் வாய்ஸ்.
ஏன்யா இந்த நடிப்பு நடிக்கிறாய்ங்க..?
என்னதான் பிரச்சனை இவங்களுக்குன்னு
ரோசிக்கிறதுக்கு முன்னாடி..
ஏன் நடிக்கிறோம்னு யோசிச்சமா?
லேது..இப்போ யோசிப்போம்..

பொதுவா நடிப்பு என்பது..நாலு அடிப்படை விஷயங்களால் நடக்குது.
1. சுயநலம்.   
2. சுயமரியாதை.
3. பயம்
4. கோபம்

1. சுயநலம்னா..
தனக்காக ஒருத்தரை அன்புகாட்டியோ, கோபப்பட்டோ பணியவெச்சு, அல்லது தானே பணிஞ்சு போய்
வேலைகளை முடித்துகொள்ளுதல். இதற்காக இவங்க போடுற சீன், நடிப்பு எல்லாமே வேலை முடிஞ்சதும் கலைஞ்சிடும்.

2. சுயமரியாதை..
தன்னை யாரும் எதுவும் சொல்லிடக்கூடாது..
தன்னை யாரும் தப்பா நினைக்க கூடாது
தன்னை எல்லாரும் நல்லவன், மேதாவி, அறிவாளி, அனுபவசாலினு நம்பணும்..
தன்னை ஒரு தேவமகன்/தேவமகள் மாதிரி மக்கள் பார்க்கணும்..
இப்படி தன்னை பிறர் ரொம்ப உயர்வா நினைக்கணுனே வாழும் க்ராக்குகள்..ஸாரி..
நண்பர்கள் அருமையா நடிப்பாங்க..
அவர்களை பற்றி உண்மை தெரியும்போது.. டர்ர்ர்ர்னு ஒரு சத்தத்தோட அவங்க முகத்திரை
கிழிஞ்சி..ஒரு கோரமான முகம் தெரியும்..உவ்வே.. இவங்களை கிட்டவே சேர்க்காதீங்க.
ரொம்ப பாவமா இருந்தா மட்டும் மன்னிசுடுங்க.!!

3. பயம்..
மத்தவங்க நம்மை எதுவும் சொல்லிடுவாங்களோ?
அவங்க தப்பா நினைச்சா என்ன பண்றது?
இப்படி தன் அந்தஸ்தும் மரியாதையும் கெட்டுவிடக்கூடாது என்கிற பயம்.
இது முத்தி போவதால் தான் பலவீடுகளில் இன்று வாங்கும் சம்பளம் EMI கட்டவே சரியா போகுது.
இந்த பயத்தில் இருந்து கொஞ்சம் முயன்றாலே வெளியே வந்துடலாம்.

4. கோபம்..
கோபத்துல நிறைய கேட்டகரிங்க.. வேணாமா..சரி சிம்பிளா சொல்றேன்..
கேலியால் வர்ற கோபம், ஏமாற்றத்தால் வர்ற கோபம் ரெண்டுதான் மெயினா
மனசை ரொம்ப பாதிக்கும். ஆனா அதுக்கு உடனே நெகட்டிவா எதாவது பண்ணினா..
உறவுக்கயிறு அந்துக்கும். அதுக்காகவும் நடிக்க வேண்டி இருக்கும். இதுக்கு செம
பொறுமை வேணும். (எல்லாரும் அவங்கவங்க அம்மாகிட்ட இதை கத்துக்கோங்க ;)

ஃபைனலா பார்த்தீங்கன்னா.. நடிப்பு என்பது..எந்த உறவு பாலங்கள் எளிதில் உடைந்துகொள்ளாமல்
இருக்க உதவும் கயிறு மாதிரி. ஆனா என்னைக்கு நீங்க நடிச்சீங்கன்னு தெரிஞ்சாலும்..
டமால் தான்..அப்புறம் அவங்க உங்களை மதிப்பாங்கன்னு எதிர்ப்பார்க்க கூடாது.
அதே போல்.. நடிக்கிறதே தெரியாம நடிக்கவும் நாம நல்லா பழகிக்கணும்.
அப்போ உறவுகளும் நஷ்டமாகாது. எந்த சூழ்நிலையும் கஷ்டமாகாது.

இன்னும் ஒண்ணு சொல்லிக்கிறேன்.. ரொம்ப நெருக்கமானவங்க.. லைக்..அம்மா, அப்பா,
மனைவி, கணவன், நெருங்கிய உண்மையான நண்பர்கள் ,
இவங்ககிட்ட நடிக்காதீங்க.
எவ்ளோ சூப்பரா நடிச்சாலும் மாட்டிப்பீங்க...உண்மையா இருங்க(இவங்ககிட்டயாச்சும்!!)


எப்படியோ..எல்லாரும் நல்லா நடிங்கப்பூ..!! வாழ்த்துக்கள்!! ஹிஹிஹி..!!


6 comments:

dheva said...

நடிப்பு.........என்ற வார்த்தைக்கு பதில இயல்புன்னு போடலாமா தம்பி?

Ungalranga said...

இயல்பு என்பது முழுமையான நாம் நாமாகவே இருத்தல் ஆச்சே.அதை எப்படி நடிப்பு பதிலா போடமுடியும்..?!

Santhosh said...

மச்சி இதுல மக்களோட இயல்பை சொல்லுறியா? அப்படின்னா மக்களோட இயல்பு இதையும் தாண்டி நிறைய வகைகள் இருக்கு..

Ungalranga said...

ஆமா மச்சி.இருக்குதான்..ஆனா அத்தனையும் எழுதினா..பல பாகம் போகும்.
நீ யோசிக்க ஆரம்பிச்சுட்டல்ல..அது போதும் எனக்கு...!!

Anonymous said...

இன்னும் ஒண்ணு சொல்லிக்கிறேன்.. ரொம்ப நெருக்கமானவங்க.. லைக்..அம்மா, அப்பா,
மனைவி, கணவன், நெருங்கிய உண்மையான நண்பர்கள் ,
இவங்ககிட்ட நடிக்காதீங்க.
எவ்ளோ சூப்பரா நடிச்சாலும் மாட்டிப்பீங்க...உண்மையா இருங்க(இவங்ககிட்டயாச்சும்!!)


இது பிடிச்சிருக்கு..

தனி காட்டு ராஜா said...

////இது முத்தி போவதால் தான் பலவீடுகளில் இன்று வாங்கும் சம்பளம் EMI கட்டவே சரியா போகுது.///


:))

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.