ம்ம்ம்.. ரொம்ப வருடங்களாக அந்த புத்தகம் என் அலமாரியை அலங்கரித்து வந்தது. அதன் மீது எனக்கு ஒரு காலத்தில்
அளவுகடந்த காதலும் மதிப்பும் இருந்தது. அந்த புத்தகத்தை படித்து முடித்திருக்கிறேன் என்று சொன்னாலே எல்லாரும்
ஆச்சரியப்படுவார்கள். கண்கள் விரியும். புருவங்கள் உயரும். எனக்கும் மகிழ்ச்சியும் கொஞ்சம் மேதாவி என்கிற அகந்தையும்
கூடும்.. அதே போல் கூடியது.
சில மாதங்களுக்கு முன் ஒரு நாள் ஒரு சின்ன சிந்தனை... இவ்வளவு படித்து என்ன கிழித்துவிட்டோம்? இரண்டு கொம்புகள்
முளைத்துவிட்டதா? சிறகுகள் எதும் முளைத்துவிட்டதா?
மேதாவி என்பதால் தலையில் ஒளிவட்டம் எதும் தெரிகிறதா?
என் அறிவை பாராட்டும் எல்லாரும் என் அன்பை பாராட்டியிருக்கிறார்களா?
பார்ப்பதை எல்லாம் பகுத்தாராய்ந்துகொண்டே இருந்தால்.. ரசிப்பது எப்போது? சுவைப்பது எப்போது?
அருவியில் நின்று குளித்து கும்மாளம் போடாமல் அதன் வேகத்தை அளப்பவன் முட்டாள் தானே?
வாழ்க்கை எனும் மாபெரும் அருவி என்னை அள்ளி அணைத்து இன்பம் தரத் துடிக்கும்போது..
அதை எட்ட நின்று பகுத்தாய்ந்து என்ன புண்ணியம் கண்டேன்..?
மண்டைகனமும், மனதில் வெறுமையுமாய் வரண்டதொரு வாழ்க்கை தேவையா?
சிரிக்க தெரியாதவன் மனிதன் இல்லை என்பார்கள். நானும் சிரிப்பை தொலைத்திருந்தேன். என்னுடைய அறிவும் மூளையுமே
என் அன்பிற்கும் இதயத்திற்கும் எதிரிகளாய் மாறி நிற்பதை கண்டேன்.
கொஞ்ச நாள் இதைப்பற்றி யோசித்தபடி சுற்றி வந்தேன்.. சில வாரங்களில் பிறருக்கு அறிவுரை கூறுதல் குறைந்தது.
இப்போது உலகம் கொஞ்சம் தெளிவாய் தெரிந்தது. அடுத்து வீணாக எனக்கு என்ன தெரியும் என்று காட்டிகொள்வதை நிறுத்தினேன்.
என்னை எவரும் எக்கேள்வியும் கேட்கதாவரை நான் எந்தவகையிலும் அறிவை வெளிப்படுத்தமாட்டேன் என்று உறுதிபூண்டேன்.
இந்த சிந்தனைகளின் உச்சகட்டமாய்.. என்னை என்னிடமிருந்தே பிரித்த எதோவொன்றை எரித்தால் என்னவென்று யோசித்தேன்.
என்னை பெரிய Intellectual Personஆக காட்டும் பொருட்களில் எதாவதை எரித்தால் என்னவென்று தோன்றியது.
கண்ணில் பட்டார் விவேகானந்தர். அவரை மதிக்கிறேன். அவரின் வார்த்தைகளின் மதிப்பும் எனக்கு நன்றாகவே தெரியும்.
ஆனால் இப்போது காப்பாற்றப்பட வேண்டியது நா. என்னை என் அகந்தையிலிருந்து காப்பாற்றவேண்டி இருப்பதால்..
ச்ச்ரக்க்.. தீக்குச்சி எரிந்தது. அடுத்து அவரின் புத்தகமும். மனம் அமைதியானது. பேச்சு நின்றது. அகந்தை அகன்று அமைதி வந்தது. இதை எழுதுவதற்கு காரணம். படிப்பதும், அதன்படி நடப்பதும் நல்லதுதான். அதையே பிடித்துகொண்டு..
அவர் அதை சொன்னார்..இவர் இதை சொன்னார்..கலீல் ஜிப்ரான் சொன்னார், காக்கை பாடினியார் கரைந்தார் என்று
கூறி அலைந்து அசாதரணமாக தெரிய எனக்கு துளியும் விருப்பமில்லை. சாதாரணம் போதும். அதில் நான் சௌக்கியமாய் இருந்துகொள்வேன்.
உங்ககிட்டயும் MatchBox இருக்குல்ல?
2 comments:
Athukkaga book - ah kolutha maten pa!!..
Avarenna Eneramum en booka padichute methavimari thiriya sonara.... atha nalla advisa eduthuthu aduthu velaya pakanum... mutalal thanamana work....
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.