Friday, October 9, 2009

Engineering College for Humans!!!! (எச்சரிக்கை- இது கொஞ்சம் கடுப்பான பதிவு!)

http://cdn.sheknows.com/articles/fighting-couple.jpg


இனியும் என்னால பொறுக்க முடியாது..
இனி களத்துல குதிச்சுட வேண்டியதுதான்.. எப்படியாச்சும் இந்த புத்திமதியை, ஆதங்கத்தை நம்ம வலையுலகத்துல கொட்டிடணும்னு முடிவு பண்ணிட்டேன்.

ஒரு பழமொழி உண்டு ..ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு..

அதுபோல..இப்ப இந்த மனுஷ இனத்தையே ரெண்டு பண்ணி மனுஷங்களே கொண்டாடிக்கிறாங்க..!

இந்த சேலம் மாநகராட்சியில ஒரு பெயர் சொல்ல விரும்பாத..கல்லூரியில..

கல்லூரி பேருந்து விடுறாங்க..(இதுல என்னா ஆச்சரியம்னு தானே கேக்குறீங்க.?)...
அதுல முன்னாடி உக்கார்ந்து வரணுமாம் பெண்கள்.. பின்னாடி பசங்க வரணுமாம்..

சரி..கழுத..போய் தொலையுதுன்னு உக்கார்ந்த அடுத்த கண்டிஷன் பொண்ணுங்க கிட்ட எக்காரணம் கொண்டும் பேசவே கூடாதாம். இதை நினைச்சு சிரிக்கிறதா..அழுவுறதா? இல்ல அந்த காலேஜ் பிரின்சிபாலை மிதிக்கிறதான்னு தெரியலை..!!

அதுமட்டும் இல்லாம பேசுனது தெரிஞ்சா ரெண்டு நாளு சஸ்பெண்டு வேறயாம்..!!

அசிங்கமா இல்லை..!! ஒரு மனுஷன் இன்னோரு மனுஷ ஜென்மத்துகிட்ட பேசுவதை.. மூணாவதா இன்னோரு மனுஷ ஜென்மமே தடுக்குது..!!

அப்பா சாமிகளா..! அறிவு ஜீவிகளா! உங்க எல்லாருக்கும் ஒரு பெரிய கும்புடு..
இனிமேவாச்சும் யோசிச்சு பேசுங்க..உங்க வீட்டுலயும் ஒரு பொண்ணோ பையனோ இருக்கும் என்கிறதை ஞாபகம் வெச்சுக்கோங்க..!!

ஆணின் இயல்புகள் பெண்ணிற்கும் ..பெண்ணோட இயல்புகள் ஆணிற்கும் நிச்சயம் தெரிஞ்சிருக்கணும்..அப்படி தெரியாதவங்க மனுஷங்களா? எவ்ளோவோ படிச்சிருக்கோம்.. இதை ஏன் கண்டு பயப்படுறோம்?

தன் சக இனத்(மனித இனம்)தின் சைக்காலஜியையும் அனாடமியையும் தெரிஞ்சுக்காத ஒரே இனம் நாமா தான் இருப்போம்...!!

ப்ளீஸ்... நான் சொல்ல வரது இதுதான்.. பெண் பெண்ணா அழகா லட்சணமா இருக்கட்டும்..ஆனால் அவளுக்கு ஆணிடம் பேசவும் பழகவும் தைரியத்தையும் தெளிவையும் இந்த சமூகம் வளர்க்கட்டும்..

இதுவே தான் ஆணுக்கும்..

ப்ளீஸ் மச்சீஸ், கேர்ள்ஸ்!! இனிமே உங்க வாழ்க்கைய நீங்க வாழுங்க..உங்க அப்பா அம்மா வாழ்க்கைய அப்படியே ஜெராக்ஸ் பண்ணிட்டு இருக்காதிங்க..ஆல் தி பெஸ்ட்..!!

பி.கு : என் ப்ளாகுல நான் என்ன வேணா எழுதுவேன் என்று சொல்லபோவதில்லை.. அதே போல் பிறருக்காக நான் எழுவதை நிறுத்த போவதும் இல்லை.. என்ன சில நேரம் இப்படி கடுப்பா டைப் பண்ணிடுறேன்..ஹாஹாஹஹ..!!

16 comments:

cheena (சீனா) said...

ஆகா ஆகா - ரங்கன் புத்திசாலித் தனமா எழுதிட்டான் - உண்மை - சரியான் இடுகை தான்

Iyappan Krishnan said...

பாஸ்,
இதெல்லாம் சொல்லி திருந்தற ஆளுங்களா ? சமுதாயத்துல மனவியாதியை உருவாக்கிறதுல இது மாதிரி ஆளுங்க பெரும் பங்கு வகிக்கிறாங்க. இன்னோரு பக்கம் எழுத்தாளர் அப்படிங்கற பேர்ல வக்கிரம் தெளிக்கிற ஆளுங்க.. விடுங்க பாஸ்... இதெல்லாம் பாத்துட்டு இருந்தா நம்ம பொழப்பு என்னாறது.

Anonymous said...

ஹல்லோ!அடுத்த பொண்ணுகளோட பேசறதுன்னா இவ்வளவு ஆர்வமா எழுதறீங்களே. உங்க மனைவியோ நீங்க கட்டிக்கபோற பொண்ணோ உங்ககிட்ட வந்து எனக்கு ஏராளமான பாய்பிரண்ட்ஸ் இருக்காங்கன்னு சொன்னா உங்க ரியாக்சன் என்னவா இருக்கும். மனைவியோட பாய்பிரண்ட்ச ஏத்துக்கற மனபக்குவம் எத்தனை பேருக்கு இருக்கு.

Ungalranga said...

@அனானி.
//ஹல்லோ!அடுத்த பொண்ணுகளோட பேசறதுன்னா இவ்வளவு ஆர்வமா எழுதறீங்களே. உங்க மனைவியோ நீங்க கட்டிக்கபோற பொண்ணோ உங்ககிட்ட வந்து எனக்கு ஏராளமான பாய்பிரண்ட்ஸ் இருக்காங்கன்னு சொன்னா உங்க ரியாக்சன் என்னவா இருக்கும். மனைவியோட பாய்பிரண்ட்ச ஏத்துக்கற மனபக்குவம் எத்தனை பேருக்கு இருக்கு. //

எத்தனை பேருக்கு இருக்குன்னு தெரியாது..ஆனா எனக்கு இருக்குன்னு எனக்கு தெரியும்..

என் தந்தை இறந்த போது..என் தங்கைக்கு ஆறுதல் சொல்லி அவளை ஆறுதல் படுத்தியதில் பெரும்பங்கு அவளின் ஆண் நண்பர்களையே சேரும்..!!


ஸோ..ஆண்களோடு(பல) பழகுவதில் தவறு இல்லை..

என்னை பொறுத்தவரை ஆணுமில்லை..பெண்ணுமில்லை.. மனிதர்கள் ..மனிதர்கள்..மனிதர்கள்..அவ்ளோதான்..

பாலின பாகுபாடு உங்க எண்ணத்தில் இருந்து பிரிஞ்சுட்டா இப்படி கேள்வி கேட்க கூட தோணாது அனானி..!!

Thamira said...

Good post.!

shaan said...

unga frienship ethu night veetukku theriyama mani kanakila phonela pesurathu.....veettukku theriyama cinema,outingnu suthurathu...aamam athan daily collegela meet panringale aparam night phonela enna pesuvinga....nanum engg padithavan enra muraiyil

shaan

மங்களூர் சிவா said...

Good post.!

Anonymous said...

appidippodu

Ungalranga said...

@shan,
//unga frienship ethu night veetukku theriyama mani kanakila phonela pesurathu.....veettukku theriyama cinema,outingnu suthurathu...aamam athan daily collegela meet panringale aparam night phonela enna pesuvinga....nanum engg padithavan enra muraiyil

shaan //

இது ஒரு பின் தங்கிய மனதின் பேச்சு என்பது மட்டும் சரியா தெரியுது..

நீங்க (கற்று)கொடுக்காத சுதந்திரத்தை அவர்களே எடுத்துகொள்வது தான்.. இந்த நடுராத்திரி ரகசிய அரட்டையும், மற்றவைகளும்...

முதலில் நாம் சுதந்திரமாக வளர்க்கப்பட்டிருந்தால் தான் நாம் நம் பிள்ளைகளுக்கு சுதந்திரம் பற்றி சொல்லி தர முடியும்.. நம் கால்களே சங்கிலியில் கட்டப்பட்டிருக்கும் போது.. நம் பிள்ளைகளுக்கு எப்படி ஓட கற்று தர போகிறீர்கள்..!!

வீட்டுக்கு தெரியாம என்பதுதானே பிரச்சனை ..தெரிந்தால் விடுவீங்களா நீங்க?

முதலில் நீங்கள் மாறுங்கள் 2009க்கு.. அப்போதுதான் உங்கள் பிள்ளைகளின் மனம் புரியும்..
1980லேயே பழகிய வாழ்க்கையை தான் இன்னும் நீங்கள் 2009 வாழ்ந்துகொண்டு இருக்கீங்க..அதனால் தான் நம் இளைஞர்களின் ஆற்றலும் அறிவும் புரிய மாட்டேங்குது..

Ungalranga said...

@அனானி,

அப்படி போடா? பேரை சொல்லாத உங்களை எப்படி போடுறது?

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

சரிதான் ரங்கா. இப்பிடிச் சட்டம் போட்டு ஆண்களையும் பெண்களையும் பிரிக்கலாம் என்று நினைக்கும் மனிதர்களை நினைக்கக் கவலை தான் ரங்கா. ஒருவேளை இப்பிடிக் கட்டுப் பாடாக சட்டம் போட்டிருக்கிறார்கள் என்று தெரிந்தால் பெற்றவர்கள் துணிந்து பெண் பிள்ளைகளை படிக்க அனுப்புவார்கள் என்று நினைக்கிறார்களோ என்னமோ!
நல்ல பகிர்வு.

RAMYA said...

எண்ணங்களும் நல்லா இருக்கு!

எழுத்தும் நல்லா இருக்கு

எல்லா காலேஜ் பஸ்சிலும் இந்த கண்டிஷன் உண்டு தம்பி!

உங்கள் எதிர்பார்ப்பு நல்ல முறையில் இருபாலாரும் ஆரோக்கியமான எண்ணங்களுடன் வளரனும் என்றுதானே சொல்ல வரீங்க?

அது புரியுது! அருமை!

பிரிச்சனை வராத வரையில் எதுவுமே ஓகேதான்.

சுதந்திரத்தை சரியான முறையில் பயன் படுத்தி விட்டால் பிரிச்சனையே இல்லை!

ஆனா சுதந்திரத்தை தவறான முறையில் பயன் படுத்தினா...

காலேஜ் போகும்போது அருகருகே உக்காறது ஒரு பிரிச்சனையே இல்லை.

அதுவே பொழுது போக்காகி காலேஜ் கட் பண்ற அளவிற்கு போகக் கூடாது எனபதுதான்...

ஆனா எல்லாம் சரியா இருந்திட்டா நல்லதுதான்...

பெண்களுடன் ஆண்கள் பழகுவது தவறில்லை. ஆனால் எல்லாவற்றிற்கும் மனதில் ஒரு வரை முறை வகுத்துக் கொள்ளவேண்டும். அது இருந்தால் போதும். எல்லாரும் நண்பர்களே!!


ஆண்களும் பெண்களுடன் பழகுவதும்
தவறே இல்லே, புரிதல் மட்டும்தான் தேவை.

பொதுவாக எல்லாவற்றிற்கும் மனக் கட்டுப்பாடு தேவை!!

அமுதா கிருஷ்ணா said...

சென்னையிலேயே இப்படி காலெஜ் இருக்கு சார்....

*இயற்கை ராஜி* said...

Ramya comment kku oru infinite times repeatyeee

இராகவன் நைஜிரியா said...

எல்லாம் மனதைப் பொருத்த விசயம். பேசுவதில் தவறில்லை, தப்புமில்லை. அடக்க அடக்கத்தான் ஆர்வம் அதிகமாகின்றது. அதை மீற வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படுகின்றது. சாதாரணமாக விட்டாலே எல்லாம் சரியாகப் போய்விடும் என்பது என் நம்பிக்கை.

Santhosh said...

Rangs,
nenga enna oruku puthusa.. ithellam neraya college la romba naal ah iruku rasa..

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.