Tuesday, October 13, 2009

Farmville'யில நீங்க எந்த லெவெல்?

http://vator.tv/images/attachments/020909121934gameBig_farmville.jpg


நானும் ..நானும்..நானும்...

இப்படி எத்தனையோ பேர்..சேர்ந்துகிட்டு இருக்காங்க.. ஃபார்ம் வில்லி Farmvilley என்னும் விவசாயம் பண்ணும் விளையாட்டுக்கு!!

அதில் பூசணிக்காய் விதைச்சா சாயங்காலம் அறுவடை..அதுல ஒரு குறிப்பிட்ட பணம் சம்பாதிக்க முடிகிறது...இப்படித்தான் நார்மலா
நாம் யோசிப்போம்..நான் யோசிச்சேன்.. எனக்கு லெவெல்களை பற்றி கவலை வந்ததே கிடையாது.. விளையாட்டு தானே என்று பொறுமையா
விளையாடுவேன்..

சில நாள் முன்னாடி என் நண்பரிடம் அரட்டையில் இருந்தேன் ..நான் பத்துவார்த்தை பேசினால் அவர் ஒரு வார்த்தையில் முடித்துகொள்கிறார்..
என்னடா இது..”பிஸியா இருக்கீங்களா? ” என்று கேட்டால் ஆமாம் என்றார்.

பிறகு நானும் ஃபார்ம்வில்லி பக்கம் போன போது தான் தெரிந்தது அவர் பிஸியாக இருந்தது இங்குதான் என்று..

இதுக்கூட பரவாயில்லை..இதை வைத்து ஈகோ சண்டை வேறு.. சில இடங்களில் நடந்ததாக கேள்விப்பட்டேன்.

நண்பரே நான் உங்களை சில கேள்விகள் கேட்கிறேன்..பதில் சொல்லுங்க பார்ப்போம்..

1. அங்க நீங்க சம்பாதிக்கும் பேரும் புகழும் எந்த வகையிலாவது உங்களுக்கு உதவ போகிறதா?

2. ஒரு ஜாலிக்கு தான் விளையாடுறோம்னு சொல்லும் உங்களுக்கு ஒரு கேள்வி.. இருக்கும் வேலைவெட்டியெல்லாம் விட்டுட்டு..
ஒரு நல்ல நண்பனின் அருகாமையை விட..அந்த குப்பை விவசாயம் உங்களுக்கு முக்கியமாய் போனதன் காரணம் என்ன?

3. அதில் வரும் பணத்தை கொண்டு..வீடு வாங்க முடியுமா? ஒரு சைக்கிள் போல்ட் வாங்கக்கூட வழியில்லாத அந்த விளையாட்டை
ஏன் இவ்வளவு வெறித்தனமாக ஆடுகிறீர்கள்...?

4. பல லெவெல் கடந்த மாமேதைகளுக்கு ஒன்று தெரிந்திருக்கும்..இது நேரத்தை கொள்ளையடிக்கும் ஒரு விளையாட்டு என்று(கிரிக்கேட் போல)..
அப்புறம் ஏன் அதிலேயே ஊறி உங்கள் நண்பர்களை அவமானப்படுத்தறீங்க..

5. தமிழ்மண நண்பர்கள் சொன்ன சேதி ஒன்று இன்னும் அதிர்ச்சி அளித்தது.. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ப்ளாக் படிக்கப்படும் சதவீதம்
12% குறைந்துள்ளது.. என்று.. அதிர்ச்சிதான்..எனக்கும்..ஏன் இப்படி அதன் மீது ஒரு கிறுக்கு?

6. நான் அவனுக்கு பத்து பரிசுகள் அனுப்பினேனே..ஏன் அவன் ஒன்று கூட அனுப்பவில்லை..ஏன் பணம் சேரவே மாட்டேங்குது.. நிலத்தின் அளவை அதிகரிக்கலாமா?

இப்படியெல்லாம் யோசிக்கும் நீங்கள் ..அங்க ஒருத்தன் காத்திருக்கானே நமக்காக..அவரை விட..அந்த நல்ல நட்பை விட இந்த குப்பை முக்கியமா? என்று யோசிப்பது இல்லை..?


7. நீங்கள் ஆர்கூட் அக்கவுண்ட் வைத்திருந்தாலே அந்த நிறுவனத்திற்கு தினமும் 0.05 செண்ட் லாபம்.. ஆர்க்கூட்டை விட எத்தனையோ படி பலம் வாய்ந்தது இந்த ”முகரைப்புத்தகம்”..
அப்போ நீங்கள் தினமும் அந்த வலைப்பக்கத்திலேயே அதிகம் செலவிடுவதால்.. அவர்கள் எவ்வளவு சம்பாரிப்பார்கள்.. ?
தினமும் எத்தனை கோடிகள் புரளுமோ? தெரிந்தே நம் மின்சாரம்..நமது நேரம்..நமது மன உளைச்சலை போட்டு
ஏன் கண்ட நாய்க்கு சம்பாரிச்சு தரணும்..அதில் நமக்கு பத்து பைசா நமக்கு தேறாத போதும்?

8. அந்த லெவெல்ஸும் பணமும் வராமல் இருந்தால்.. நீங்கள் அதை விளையாடுவீர்களா?

ஒண்ணு கடைசியா சொல்லிக்க விரும்பறேன்.. அது ஒரு போதை வஸ்து.. நீங்க விவசாயமே பண்ணாட்டியும் அந்த வலைப்பக்கத்தில் நீங்கள் இருந்தால் அவனுக்கு பணம் சேரும்.
உஷாரா இருந்துக்கோங்க மக்கா.. ஒரு நாள் போதை தலைக்கு மீறி போய்ட்டா..நீங்கள் கண்டுக்காம விட்ட நண்பர்கள் கைக்கொடுப்பார்களா? நிச்சயம் கொடுப்போம்..

அதற்கான முதல் கட்டம் தான் இந்த பதிவு...

யோசிங்க.. Add Neighbours-க்ளிக் பண்றதுக்கு முன்னாடி உங்களுக்காக காத்திருக்கும் Real Friends-ஐ மறந்துடாதீங்க..!!

18 comments:

நாமக்கல் சிபி said...

நான் 15 லெவல் வந்திருக்கேன் மாப்பி!

இன்னிக்கு எப்படியும் 2 அல்லது 3 அறுவடை முடிச்சி அடுத்த லெவல் போயிடுவேன்!

cheena (சீனா) said...

ஹேய் ரங்கா = நான் சிவனேன்னு இருந்தேன் - யார் யாரோ நண்பர்கள் அழைப்பு அனுப்பிக் கொண்டே இருந்தார்கள் - சேர்ந்து விட்டேன் - ஆனால் நாம் அப்பக்கம் போவது கூட கிடையாது - ம்ம்ம்ம்ம்ம்

ஜோசப் பால்ராஜ் said...

Nan en farm la romba busy dae, so i can't read your blog now.

FYKI : Nan 22nd level .

VIKNESHWARAN ADAKKALAM said...

இப்பதான் பிளாக் திறந்தேன் அறுவடைக்கு நேரமாச்சு. அப்புரம் வரேன் பாஸ்...

இராகவன் நைஜிரியா said...

இப்படியெல்லாம் வேற இருக்கா. எனக்கு ப்ளாக் படிக்கவே நேரம் போதலை. அதனால் இதில் சேரவேயில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்புகூட நண்பர் ஒருவர் இதுல சேர்ந்து இருக்கீங்களா அப்படின்னு கேட்டார். இல்லீங்க நமக்கு அதுக்கெல்லாம் நேரம் இல்லை என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

நீங்க சொல்வது அனைத்து சரிதான். புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரிதான்.

மின்னுது மின்னல் said...

1. அங்க நீங்க சம்பாதிக்கும் பேரும் புகழும் எந்த வகையிலாவது உங்களுக்கு உதவ போகிறதா?
//


பிளாக்கும் குரூப் மெயிலும் எந்த வகையிலாவது உங்களுக்கு உதவ போகிறதா?

மின்னுது மின்னல் said...

நான் சொல்ல சொல்ல கேட்காமல் ஒரு தள விளையாண்டுகிட்டு இருக்காரு :)

நீங்க சும்மா விளையாண்டு பாருங்க பாஸ் :)

மின்னுது மின்னல் said...

நாங்க நிறையா சம்பாரிச்சிட்டேனு பொறாமை. :)

மின்னுது மின்னல் said...

சில நாள் முன்னாடி என் நண்பரிடம் அரட்டையில் இருந்தேன் ..நான் பத்துவார்த்தை பேசினால் அவர் ஒரு வார்த்தையில் முடித்துகொள்கிறார்..
என்னடா இது..”பிஸியா இருக்கீங்களா? ” என்று கேட்டால் ஆமாம் என்றார்.
//

ஓ இதுதான் காரனமா..??

மின்னுது மின்னல் said...

fishtank னு ஒன்னு இருக்கு அதை பற்றி கொஞ்சம் சூடாக எழுதவும்..!!!

எனக்கு அது பிடிக்காது :)

குறை ஒன்றும் இல்லை !!! said...

haaaaaaaaa.. Namma aala neenga!!!!!

நாமக்கல் சிபி said...

மாப்பி! ஃபுல் FARM இருக்கே போலிருக்கு!

மங்களூர் சிவா said...

இப்படியெல்லாம் வேற இருக்கா. எனக்கு ப்ளாக் படிக்கவே நேரம் போதலை. அதனால் இதில் சேரவேயில்லை.

☀நான் ஆதவன்☀ said...

இத படிக்கிற எல்லாரும் என்னோட neighbourஆக சேர்ந்துக்கனும் சொல்லிட்டேன் :)

நாமக்கல் சிபி said...

டெஸ்டிமோனியல் :

உண்மையிலேயே ரங்காவோட பதிவு எனக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்து விவசாயத்துல முழு மூச்சா ஈடுபட வைத்தது என்று சொன்னால் அது மிகையாகாது!
நான் ஒரே நாளில் ராப்பகலா கண்முழிச்சி 3 லெலல்ல அலாக்கா ஜம்ப் பண்ணி இருக்கேன் என்றால் அதுக்கு மாப்பி ரங்காவோட இந்த பதிவும், அதைப் படித்தவர்களின் ஆதரவும்தான் காரணம்! தாங்க்ஸ் மாப்பி!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

ஏய் ரங்கா? எனக்கும் தானா அடி? உனக்கு இனி எந்தப் பரிசும் வராது.
உன்னைப் போய் neighbour ஆகப் போட்டேன் பார்......

Iyappan Krishnan said...

neighbor request anuppichcha udanadi response kidaikkum en kitta irundhu

Admin said...

சரியான விளக்கம்... விளையடுறேன்னு இப்படி வெட்டியா பொழுத கழிக்காம உருப்படியா நாலு நல்ல விசயங்களை குழ்க்களில் சேர்ந்து பகிர்ந்து கொள்ளலாம்... அல்லது நல்ல விசயங்களை ப்ளாக்கில் எழுதலாம்... நான்கு பேருக்கு உங்கள் வார்த்தைகள் சில நம்பிக்கைகளை விதைக்கும்... இந்த விளையாடை தெரிந்து இருக்கும் பலருக்கு வலை பதிவிடல் குறித்துக்கூட தெரிந்திருக்காது... என நினைக்குறேன்... இல்லை எனில் மின்னுது மின்னல் போல பிளாக்கும் குரூப் மெயிலும் எந்த வகையிலாவது உங்களுக்கு உதவ போகிறதா? என்று கேட்க மாட்டார்கள்....

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.