Tuesday, March 10, 2009

மரணத்தின் பாதைக்காக..!!!



எப்போதும் இருட்டில்
சுவனத்தனிமையில்
காற்றில்லா பூமியில்
கனியத்துடிக்கிறது மனம்;

பூக்கள் கருகி..
புன்னகைகள் இருண்டு
முட்களின் கூர்மையில்
சிகப்பு முத்துக்களாய்
ரத்தம் முட்களின் நுனியில்;

வெப்பம் எரிக்க
வேர்வையில் துளிகள்
கண்ணாடியாய் சிதற
சோகமாய் என் முகம்
ஒவ்வொரு துளியிலும் ;

மோனத்துவம் வந்து
மடியமர்ந்து கொண்டு
ஆலகால விஷமாய்
கொல்கிறது என் உயிரை;

பாலைவனச் சூட்டில்
மங்கும் சூரிய வெளிச்சத்தில்
கரிய முகங்கள்
கூரியப் பற்கள் காட்டி அழைக்கின்றன
மரணத்தின் பாதைக்காக..!!!

(பி.கு.) எட்டாங்கிளாஸில் எங்க டீச்சர் என்ன குரூப் டிஸ்கஷன்ல சேத்துக்கல.. அதான் இந்த கவிதை..சாரி.. கவுஜ..!!! ;)

8 comments:

ஜோசப் பால்ராஜ் said...

இந்த கவிதைய நான் பாடுனாத்தான் நன்னா இருக்கும். ஏன்னா, நான் தான் இதுல சொல்லியிருக்காப்ல தனிமையோ தனிமையில உக்காந்துகிட்டு இருக்கேன்.

நாமக்கல் சிபி said...

மாப்பி! ஐய்யனார் பதிவுகள் பக்கம் அடிக்கடி போனியோ!

நல்லாத்தான்யா இருந்தான்! இப்படி ஆடிட்டானே!

நாமக்கல் சிபி said...

குட் ஷோ!

நல்ல படைப்பு!

Ungalranga said...

//ஜோசப் பால்ராஜ் said...

இந்த கவிதைய நான் பாடுனாத்தான் நன்னா இருக்கும்.//

எது.. பாட போறீங்களா.. வேணாம்.. விட்டுடுங்க.. ஆல்ரெடி ஒரு ஹெட்போன் வீணா போச்சு..
அவ்வ்வ்வ் :(((

Ungalranga said...

//ஏன்னா, நான் தான் இதுல சொல்லியிருக்காப்ல தனிமையோ தனிமையில உக்காந்துகிட்டு இருக்கேன்.//

அது உங்க தப்பு...
நல்லா கூட்டமான எடமா பாத்து உக்காரலாம்ல...

Ungalranga said...

//நாமக்கல் சிபி said...

மாப்பி! ஐய்யனார் பதிவுகள் பக்கம் அடிக்கடி போனியோ!//

அது யாருன்னே தெரியாது..
லிங்க்கு குடுக்காம இப்படி மொட்டையா சொன்னா எப்படி?

Ungalranga said...

நாமக்கல் சிபி said...

மாப்பி! ஐய்யனார் பதிவுகள் பக்கம் அடிக்கடி போனியோ!

//நல்லாத்தான்யா இருந்தான்!//

இப்பொவும் நல்லாதான் இருக்கேன்..

கவிதா | Kavitha said...

ஏண்டா என்னடா ஆச்சி உனக்கு? இன்னும் புவனேழ் மேட்டரே இன்னும் முடியல அதுக்குள்ள நீ ஆரம்பிச்சிட்ட??

உன்னை சொல்லி குத்தமில்ல அந்த டீச்சரைஐஐஐஐஐஐ...!!

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.