Sunday, March 29, 2009

என் தேவதையின் சோகம் :(

எப்போதும் போல இல்லை இன்று. மனம் சோகத்தின் நிழலோடு காணப்படுகிறது. கவிதைகள் சோகத்தை கரைக்கும் என்ற நம்பிக்கையோடு கவிஞானாகிறேன்.
அந்த குட்டி தேவதை கடவுளின் முன் சோகமாய் வந்து சேர்ந்தது

கடவுள் அதனுடைய வாட்டத்தை கண்டு அதனிடம் கேட்டார்.

"என்ன ஆனது.. உன் புன்னகைக்கு
என்ன ஆனது.. உன் பூரிப்பிற்கு
என்ன ஆனது.. உன் கண்களுக்கு
என்னவோ இழந்தது போல்
என்னவோ தொலைத்தது போல்
என்னவோ கிடைக்காதது போல்
ஏன் இந்த வாட்டம்..
நான் அறியலாமா உன் மன ஓட்டம்?"

தேவதை சொன்னது
" இறைவா எனக்கு கொடுப்பது பிடிக்கவில்லை"

கடவுள் சொன்னார்
" என்ன காரணம் என்று நான் அறியலாமா?"

தேவதை சொன்னது

"இறைவா..!!
நான் அன்பை நீட்டுகிறேன்
அதை பெற்றுக் கொண்டு
கன்னத்தில் அரைகிறது உலகம்;நான் பூக்களை கொடுக்கிறேன்
அதை பெற்று கொண்டு
தீயால் சுடுகிறது உலகம்;


நான் புன்னகையை கொடுக்கிறேன்
அதை பெற்று கொண்டு
கண்ணீரை பரிசளிக்கிறது உலகம்;


நான் அரவணைப்பை கொடுக்கிறேன்
அதை பெற்றுக் கொண்டு
என்னை அசிங்கமானவன் என்கிறது உலகம்;


நான் ஆதரவை கொடுக்கிறேன்
அதை பெற்றுக் கொண்டு
அறிவுகெட்டவனவன் என்கிறது உலகம்;


நான் பாசத்தை மட்டுமே கொடுக்கிறேன்
அதை பெற்றுக் கொண்டு
"அவனோரு மிருகம்" என்கிறது உலகம்."

கடவுள் புன்னகைத்தார்..
தேவதை கன்னம் பிடித்து அதன் கண்களை பார்த்தார்.

"அதோ அங்கே பார்.. ஒரு மனிதன் வலியால் தவிக்கிறான்."

தேவதை சொன்னது
"ஒரு நிமிடம் இறைவா.. இதோ வந்துவிடுகிறேன்"

கடவுள் தேவதையின் கைகளை பிடித்து சொன்னார்.

"ஒரு நிமிடம்.. உனக்கு தான் கொடுப்பது பிடிக்கவில்லையே அப்புறம் ஏன் தவிக்கிறாய் ? "

தேவதை பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்தது.

கடவுள் சிரித்தார்.
" அட என் அன்பு தேவதையே!! நீ கொடு வேண்டாமென்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்களிடம் நீ எதையும் எதிர்ப்பார்க்காமல் கொடு. அப்படி கொடுக்க பழகிவிட்டால் உனக்கு சோகம் இருக்காது.
இப்படி கண்ணீர் வடிக்க வேண்டாம்.

கொடுப்பது உன் இயல்பு. அதுதான் உன்னை இயக்கும் உயிர். அதை நீ மாற்ற முயற்சிக்காதே. அதற்கு பதிலாக உன்னை நீயே சரி செய்துகொள்.
எதிர்பார்க்காமல் கொடு.அதுவே உனக்கு நான் தரும் உபதேசம்"

என்ன சரிதானே !! இப்போது கிளம்பு.."

தேவதை பிரகாசமான புன்னகையோடு சொன்னது :
"நன்றி இறைவா!! இது உங்களுக்காக "

தேவதை இறைவனின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு அந்த மனிதனை நோக்கி பறந்தது.பாட்டு பாஸ்கி :
ஆமா இது கதையா கவிதையா?

என்னவோ .. உனக்கு இப்போ மனஸ ரிப்பேர் பண்ணனும் .
க(வி)தைக்கேத்த பாட்டு என்கிட்ட இருக்கு.. கீழ பாரு.


"ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலை இல்லே.
நான் தான்டா என் மனசுக்கு ராஜா
தூவுங்கடா என் வழியில ரோஜா...

நீ கேட்டா கேட்டத கொடுப்பேன்..
கேக்குற வரத்தே கேட்டுக்கடா..

இந்த பாட்ட முழுசா கேளு..
தெம்பாகிடுவ.. என்னங்க.. இந்த பாஸ்கி சொல்றது சரிதானே...!!

13 comments:

மின்னல் said...

ரங்கா நல்ல கவிதை கருத்து.

ஆனா கடைசில இன்ன ஸ்ட்ரா பிட்ங்ஸ் பாஸ்கி பத்தி அது சரி யாரு அந்த பாஸ்கி.

மின்னல் said...

ஐய் மி த ஃபஸ்ட்

ரங்கன் said...

//மின்னல் சொன்னது…

ஐய் மி த ஃபஸ்ட்//

அயம் தி செகண்டு..யாருப்பா தேர்டு... சீக்கிரம் ஓடியாங்க..

ரங்கன் said...

//ஆனா கடைசில இன்ன ஸ்ட்ரா பிட்ங்ஸ் பாஸ்கி பத்தி அது சரி யாரு அந்த பாஸ்கி.//

அலோ..அது எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்ஸ்.. குழப்பி கொன்னுட்டீங்க போங்க..

பாஸ்கி பத்தி தனி பதிவில் சொல்றேன் சரிங்களா?

ஆ.ஞானசேகரன் said...

ஒரு கலப்படமான கலக்கல்

பரிசல்காரன் said...

நல்லா சொல்லியிருக்காரு ஞானசேகரன்!

ரங்கன் said...

//ஆ.ஞானசேகரன் சொன்னது…

ஒரு கலப்படமான கலக்கல்//

நன்றி தலைவா.!!

ரங்கன் said...

//பரிசல்காரன் சொன்னது…

நல்லா சொல்லியிருக்காரு ஞானசேகரன்!//

வாங்க.. வாங்க..!!உங்க கருத்த சொல்லுவீங்கனு பார்த்தா இப்படி எஸ் ஆகிட்டீங்களே..அவ்வ்வ் !!

வெண்பூ said...

ரங்கா, கலக்கிட்டீங்க‌.. கடைசிய அந்த பாஸ்கி மேட்டர் மட்டும் இல்லாம இருந்திருந்தா சூப்பரா இருந்திருக்கும்..

ரங்கன் said...

//வெண்பூ சொன்னது…

ரங்கா, கலக்கிட்டீங்க‌.. கடைசிய அந்த பாஸ்கி மேட்டர் மட்டும் இல்லாம இருந்திருந்தா சூப்பரா இருந்திருக்கும்..//

அது என் நண்பனுக்காக எழுதறது.
அவனை மறக்க முடியாமல் .. சரி சரி. நான் அடுத்த பதிவுல இதை பத்தி தெளிவா சொல்றேன்.

வாழ்த்துக்கு நன்றி வெண்பூ.

நாமக்கல் சிபி said...

Good One!

cheena (சீனா) said...

நலாருக்கு கௌஜ - ஆமா கருத்து எனக்குப் பிடித்தது - கொடுப்பதை எதையும் எதிர் பாராமல் கொடு - உண்மை

Sinthu said...

Nice concept anna.

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.