Saturday, May 30, 2009

அப்பா.....!!


என்னில் எப்போதும் சில புயல்கள் வந்து போவதுண்டு.
எப்போதும் அவைகள் அவையாகவே மறைந்துவிடும்.

அன்றும் அப்படிதான் வந்தது ஒரு புயல்
உன்னை பிரியும் ஒரு பயங்கர புயல்..

எப்படி என்று இன்று நினைத்தாலும்
என்னுயிர் மெல்ல சறுக்கி விழுகிறது.

ஏன் என்று இன்று நினைத்தாலும்
நெஞ்செல்லாம் வலியுடன் துடிக்கிறது.

எதற்கு என்று இன்று நினைத்தாலும்
காரணம் தெரியாமல் விழி நீர்சேர்க்கிறது.

என்ன செய்ய.. ஏது செய்ய
என சிந்தித்து முடிப்பதற்குள்

எங்கோ போய்விட்டாய் நீ
என்னை தனியாய் தவிக்கவிட்டு..

நீ பிரியும் தருணத்தில் கூட
உன் வார்த்தைகளை மதித்தேன்..

ஆம்..

ஒரு துளி கண்ணீர் கூட சிந்தவில்லை
உன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு..

வாழ்நாளில் நீ என்னை நினைத்து
வருந்தினாய்..
மன்னித்துவிடு..!!
உன்னை வருந்த வைத்தமைக்கு..

இனி எவருக்கும் வருத்தந்தராதவனாய்
வாழ்ந்து காட்டுவேன் ...!!

இனி உன் குடும்பத்தின் பொறுப்பு
என் தோள்களில்...!!

உன்னை கேட்பதெல்லாம் ஒன்று தான்..

சுமையை குறைக்காதே..
என் தோள்களை விரிவாக்க செய்..

பாட்டு பாஸ்கி :
அவர் எங்கயும் போகலைப்பா.. ரங்கா.. அவர் எப்பவும் உங்களோட தான் இருக்காரு.. இருப்பாரு..
வலியை மற.. வாழ்வை நினை.. வெற்றி உனக்கே.. வாழ்த்துக்கள்!

9 comments:

சீனா said...

அன்பின் ரங்கா - கவலை வேண்டாம் - உனது தோள்கள் ஆண்மை - விரிவடையும் - எதனையும் தாங்கும் சக்தி உனக்கு உண்டு - அப்பா உன்னுடனேயே இருப்பார்- துணை இருப்பார் என்றும் - அம்மாவினையும் தங்கையினையும் கண் கலங்காமல் பார்த்துக்கொள் - கவலைப்படாதே - எல்லாம் சரியாய் விடும் - நல்வாழ்த்துகள்

நாமக்கல் சிபி said...

சபாஷ் மாப்பி,
இந்த உறுதிதான் நான் உன்கிட்டே எதிர்பார்த்தது! எதிர்பார்ப்பது!

நாங்க கூட இருக்கிறோம்! எந்தச் சுமையையும் உன் தோள்கள் தாங்கும்!
உனக்குள்ளே உறுதி இருக்கு!

ஆயில்யன் said...

//வாழ்நாளில் நீ என்னை நினைத்து
வருந்தினாய்..
மன்னித்துவிடு..!!
உன்னை வருந்த வைத்தமைக்கு..//

:(

கவலைப்படாதீர்கள் பெற்றோர்கள் என்றைக்குமே தம் பிள்ளைகளின் கோபங்களை பெரிதாக எடுத்துக்கொள்வது கிடையாது என் மக்கள்தானே என்று விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு மிக அதிகம் !

ஆயில்யன் said...

//இனி உன் குடும்பத்தின் பொறுப்பு
என் தோள்களில்...!!
///

வாழ்த்துக்கள் !

சென்ஷி said...

//பாட்டு பாஸ்கி :
அவர் எங்கயும் போகலைப்பா.. ரங்கா.. அவர் எப்பவும் உங்களோட தான் இருக்காரு.. இருப்பாரு..
வலியை மற.. வாழ்வை நினை.. வெற்றி உனக்கே.. வாழ்த்துக்கள்! //

உண்மைதான் ரங்கா.. நினைவினில் நம்முடன் எப்போதும் வாழ்வார். உன்னுடைய சாதனைகளை கண்டு நிச்சயம் மகிழ்ச்சி கொள்வார்.

Anonymous said...

ரங்கா,

கடவுளாக உன் தந்தையும் தோழர்களாக நாங்களும் உன்னுடன் இருக்கிரோம்; எப்போதும்.

The Darkest Night is before the Dawn.

நட்புடன் ஜமால் said...

\\ஒரு துளி கண்ணீர் கூட சிந்தவில்லை
உன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு..\\


நெகிழ்ந்தேன் ...

Sanjai Gandhi said...

//இனி எவருக்கும் வருத்தந்தராதவனாய்
வாழ்ந்து காட்டுவேன் ...!!

இனி உன் குடும்பத்தின் பொறுப்பு
என் தோள்களில்...!!

உன்னை கேட்பதெல்லாம் ஒன்று தான்..

சுமையை குறைக்காதே..
என் தோள்களை விரிவாக்க செய்..
//

சல்யூட் ரங்கா..

Unknown said...

உங்களது உறுதி என்னைச் சிலிர்க்க வைக்கிறது. இதே உறுதியோடு நடை போடுங்க ரங்கன், உங்கள் தந்தை என்றும் உங்களுடன் இருந்து வழிகாட்டுவார்.

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.