Monday, September 28, 2009

சீட்டிங் சிறுகதைகள்!




கள்ளா!



http://boyfriendcheat.files.wordpress.com/2009/03/how-to-catch-a-cheating-husband_hubsite40a.jpg



மாலை 7.30 மணி.

களைப்பாய் உள்ளே வருகிறான் ராம்.

”புவனா ஒரு காபி கிடைக்குமா?”

”ஏன் அவ போட்டுகுடுக்கலையா?”

அதிர்ந்த ராம், மனதிற்குள் சொல்லிக்கொண்டான் .
”எவனோ போட்டுகுடுத்துட்டான்”

காதலா?!

http://i.ehow.com/images/GlobalPhoto/Articles/5203617/cheating-main_Full.jpg

மதியம் 12 : 30


அலோ உமா.

அவ இல்ல.. வசு பேசுறேன்.

ஹப்பாடி..ஹேய் எப்போ பீச்சுக்கு போலாம்?

இன்னிக்கு ஈவனிங்..!

”சரி.. பார்த்து வா. அவளுக்கு தெரிஞ்சுட போகுது.”

12: 31

..கடற்கரையில் உமா.. அவள் காதலனிடம்..
”ம்ம்..தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்லை.. தெரிஞ்சா சமாளிச்சுக்கலாம்!!”

Sunday, September 27, 2009

விஜயதசமி வாழ்த்துக்களும்..!! ஒரு காமெடி ஸ்கிரீன் ப்ளேவும்!!!

http://www.dollsofindia.com/dollsofindiaimages/paintings2/goddess_poster_PX89_l.jpg
எல்லாருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்!!

குட்டீஸ் நல்லா படிச்சு பெரிய அளவுல பேர் வாங்கி , அப்பா அம்மாவை காப்பாத்தணும்னு சாமிய நல்லா வேண்டிக்கோங்க..!!

இளவட்டங்கள் இப்போ நல்லா படிக்காட்டியும் இனிமே நல்லா படிச்சு, கண்ட பொண்ணு பின்னாடி சுத்தாம, நல்ல வேலைக்கு போய், கைநிறைய சம்பாதிச்சு , பெத்தவங்களை சந்தோஷமா வெச்சிருந்து, நாலு பொண்ணை நம்ம பின்னாடி சுத்த வெய்யி தாயேன்னு சரஸ்வதிய வேண்டிக்கோங்க..!!

பெரிசுகள் எப்பவும் ஜாலியா சந்தோசமா நம்மையும் நம்மை சுத்தி உள்ளவங்களையும் வெச்சு பார்த்துக்க வேண்டிய பொறுப்பை இன்னும் சிறப்பா செய்யணும்னு வேண்டிக்கோங்க...!!

பெண்கள் எப்பவும் எதற்கெடுத்தாலும் கோவப்படாம , சூதனாம(அது உங்களுக்கு மட்டும்தான் வரும்.. ஜென்ஸ் இதில் வேஸ்ட்) நடந்து புகுந்த வீட்லயும், பிறந்த வீட்லயும் நல்ல பேரு வாங்கி , என்னையும் என் குடும்பத்தையும் மேலும் முன்னேற்றம் பண்ண வழி செய் தாயீன்னு வேண்டிக்கோங்க..!!!

அம்பாளின் அருளுக்கு எல்லாருக்கும் எல்லாம் தரட்டும். எல்லாரும் நல்ல மனசோட பரிச்சுத்தமா இருங்க..!!


http://farm2.static.flickr.com/1009/864900082_71906f506d.jpg


ஹோஸ்ட் : வணக்கம் நேயர்களே என்றும் போல் இன்றும் ஏழரை எப்.எம் மோடு உங்கள் இந்த இனிய இரவு பொழுதை கழியுங்கள்..!!

நேயர் : அலோஓஓஓஓஓஓஓஓஓ!..

ஹோஸ்ட் : அலோ.. வாங்க வணக்கம். உங்க பேர் என்ன ? எங்க இருந்து பேசுறீங்க?

நேயர் : அலோஓஓஓஓஓஓஒ...ஓ..ஓஓஓஓஓஓஓஓ..!!

குரல் லெந்தாக ஒலிக்க ஹோஸ்ட் பீதியாகிறார்...

ஹோஸ்ட் : சார், லைனுக்கு வந்துட்டீங்க..பேசுங்க..உங்க பேர் என்ன?

நேயர் : ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ...!!

சங்கு சத்தமெல்லாம் கேக்குதே என அதிர்ச்சி அடைகிறார் ஹோஸ்ட்..

ஒரு வேளை கோஸ்டா இருக்குமோ என்று பீதியாகி லைனை துண்டிக்கிறார்.

அடுத்த நேயர் அழைக்கிறார். கொஞ்சம் முகத்தை துடைத்துகொண்டு பேச ஆரம்பிக்கிறார் ஹோஸ்ட்.

நேயர் : அலோ வணக்கம்!!

ஹோஸ்ட் : வணக்கம் . உங்க பேரு என்ன? எங்க இருந்து பேசுறீங்க..?

நேயர் : அலோ.. சுகமதி இருக்காளா?

ஹோஸ்ட் : நீங்க கால் பண்ணி இருக்குறது ஏழறை எப்.எம் முக்கு சார்.. உங்க பேரை சொல்லுங்க..!!

நேயர் : டேய் நாயே!! யாருடா நீ? என் வீட்டுல உனக்கு என்னடா வேலை..?

ஹோஸ்ட் : (அதிர்ச்சியில் முழி பிதுங்கி) சார் இது உங்க வீடு இல்லை.. இது ஏழரை எப்.எம் ஆபிஸ்.. நீங்க நம்பர் தப்பா டயல்
பண்ணிட்டீங்க போல.. கட் பண்ணிட்டு அப்புறமா கூப்பிடுங்க..

நேயர் : டேய் பொரம்போக்கு..!! என் வீட்ல அதும் அர்த்த ராத்திரியில என்னடா பண்ற.. இருடா நேர்ல வரேன்.. மவனே இன்னிக்கு
நீ செத்தட!!

பீதியாகி இணைப்பை துண்டிக்கிறார் .

சரி தற்போது அலம்பர ..ச்சே..விளம்பர இடை வேளை..!!


அருகே கம்யூட்டர் ஆப்பரேட்டரை பார்க்க

க.ஆ : யோவ் லூஸா நீ..இன்னிக்கு ஒரு விளம்பரமும் இல்லை ..

ஹோஸ்ட் : ஆமால்ல.. சரி சரி..

ம்ம்.. அடுத்த நேயர் வருக வணக்கம்.

நேயர் : வணக்கம்.. ம்ம்..ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!

ஹோஸ்ட் : என்ன வணக்கத்தையே இவ்ளோ நீளமா சொல்றீங்க.. உங்க பேரு உண்மைதமிழனா?

நேயர் : இல்லீங்க..என் பேஏஏஏஎரு... குடியாத்தம் குப்புசாமிங்க..!!

ஹோஸ்ட் : சரி சொல்லுங்க குடிகாரன் குப்புசாமி.. உங்களுக்கு என்ன பாடல் வழங்கலாம்?

நேயர் : ரெண்டு ப்ளேட் மிக்ஸர் கொஞ்சம் சோடா!!

ஹோஸ்ட் (கடுப்பாகிறார்) : ஐயா இது டாஸ்மாக் கடை இல்லை.. ஏழறை எப். எம். இங்க நீங்க பாட்டு மட்டும்தான் கேக்கணும்.

நேயர் : அப்போ ரெண்டு பாட்டில் எளைய ராசா பாட்டு குடு.. அப்படியே தொட்டுக்க கொஞ்சம் குத்துபாட்டும் ,
ரசிக்க 3 மெலடி பாட்டும் போடு போதும்..!!

ஹோஸ்ட் : சரிங்க வைங்க..!!

ஹோஸ்ட் முதலில் கீழே இருக்கும் அந்த இரும்பு தடியை எடுத்து கம்ப்யூட்டர் ஆப்பரேட்டரை மண்டே மேலே போடுறார்..
அப்படியே தன் மண்டே மேல்யும் போட்டுகிட்டு திவாலாகிறார்..!!

பின்ன ஏழறைன்னா சும்மாவா?

Thursday, September 24, 2009

யோசித்தேன்.. எழுதிவிட்டேன்..இந்த பதிவில் ஹைக்கூ!!-2

அதிர்ஷடம்

ஒற்றை நாணயம்
தவறி விழுந்தது
பிச்சை பாத்திரத்தில்.

சோகம்

நான் குடை கொடுத்தும்
அழுகிறாள்,
மழை.


நட்சத்திரம்

அவள் வந்து கோலமிட
காத்திருக்கிறதோ,
இந்த வானத்து புள்ளிகள்.


காதல் கயிறு

காசிக்கயிறை பார்க்கிறாள்
அவளின் தாலிக்கயிறை கட்ட
மறுத்த காதலனின் நினைவாக..!!


நினைவு சின்னம்

உன்னை மறந்துவிட சொல்லி
நீ எழுதிய கடிதம்
என்னிடம் ஞாபகமாய் இன்றும்.


மணல் வீடு

கடல் கொண்டு செல்லும்
என்றாலும் நிமிர்ந்தே நிற்கிறது ,
மணல் வீடு.

நிர்வாணம்

ஆடையின்றி நின்றும்
அசிங்கமாய் இல்லை
குழந்தை!!

Monday, September 21, 2009

ரமலான் வாழ்த்துக்கள்!!

நமது வலையுலகத்திற்கு.. என் சார்பாக ரமலான் வாழ்த்துக்களை இங்கே தெரிவித்துகொள்கிறேன்..!!

Thursday, September 17, 2009

அட...! கூகுள்!

அட..!
என்றுhttp://ec.mashable.com/wp-content/uploads/2009/09/moar-bigger.jpg

சொல்ல வைக்கும் பல விஷயங்களை கொண்டுள்ள நமது கூகிள் இப்போது இன்னொரு “அட”வும் சொல்ல வைத்துள்ளது.

ஆம் பெரிதாக எதுவும் இல்லை என்றாலும் நீளமாக ஒரு விஷயத்தை செய்துள்ளது கூகிள்.

இன்று காலையில் கூகிளின் முகப்பை திறந்த எல்லாருமே ஒரு நிமிடம் குழம்பி இருப்பீர்கள் அதற்கு காரணம்.. கூகிளின் தேடுபெட்டி(Search Box)யின் நீளம். நேற்று இருந்ததை விட இன்று அதன் நீளம் அதிகரித்துள்ளது.

இதற்கு சரியான காரணங்கள் என்னவென்று தெரியா விட்டாலும் .. இது ஒரு அடுத்த கட்ட பணிகளுக்கான முன்னோடி நடவடிக்கை என்றே என் மனதுக்கு படுகிறது.

கூகிள் தன்னை எப்போதும் சீர்படுத்தி கொள்ளவும் , தன்னை மேம்படுத்திகொள்ளவும் தயங்கியதே இல்லை என்பது நாம் அறிந்ததே.

அப்படிபட்ட சீர்படுத்துதலின் ஆரம்ப கட்டமாக இது இருக்கக் கூடும் என்று பல ஐ.டி. வல்லுனர்கள் தகவல் தந்துள்ளனர்.

எப்படியோ.. கூகிளாண்டவர் தன்னை மேம்படுத்துவதோடு தன்னை நாடி வரும் மக்களின் பணியையும் சுலபமாக்கி தருகிறார் தருவார்...

Wednesday, September 16, 2009

ஒரு தேவதை வந்துவிட்டாள் என்னை தேடியே!!

http://www.pawyourheartout.co.uk/resources/ang2-x.jpg
தங்கை கல்யாணம் முடிந்து அப்பாடி என சாய்ந்திருந்த நேரம் ஒரு மெயில் வந்தது..
பார்த்தால்.. நமது தோழி இயற்கை மகள் என்னையும் தொடர்பதிவு எழுத அழைத்திருக்கிறார்..

அகமகிழ்ந்து.. மகிழ்ச்சியோடு என் வேண்டுதல்களை ஏஞ்சலிடம் கேட்க தொடங்கிவிட்டேன்..

முதலில் இந்த ஏஞ்சல் நம்ம ஊரு பொண்ணுங்க மாதிரி சேலையிலோ சுடியிலோ வந்து நிக்கட்டும் அப்படின்னு நினைச்சுகிட்டேன்.
உடனே இந்த ஏஞ்செல சேலைக்கு மாறி என் மனதை கொள்ளை கொண்டது..(imagine பண்ணிக்கோங்க.. எனக்கு பிக்சர் கிடைக்கலை..!!)

வெச்ச கண்ணு வாங்காம பாத்துகிட்டே இருந்தா எப்படி.. என்ன வரம் வேண்டும் கேள் மகனே என்றது ஏஞ்செல்..

சரி கேக்குறேன்...

1. முதல் வரம்- யாரும் இனிமே இந்த உலகத்துல ஊனமா பிறக்க கூடாது.

2. இரண்டாவது வரம்- எந்த குழந்தையும் தாயில்லாமல் வாட கூடாது.

3. மூன்றாவது வரம்- என்னை சேர்ந்த உறவுகளும், நண்பர்களும் இப்பவும்போல எப்பவும் மகிழ்ச்சியா என்னோடு இருக்கணும்.

4. நான்காவது வரம்- எது வந்தாலும் தைரியத்தையும் நிதானத்தையும் இழக்காத மனசு வேண்டும்.

5. ஐந்தாவது வரம்- பணத்தின் மதிப்பு குறைந்து குணத்தின் மதிப்பு உயரணும்.

6. ஆறாவது வரம்- இயற்கையை (Nature..!!)மேம்படுத்தும் விதமாக மக்கள் செயல்படணும்.

7. ஏழாவது வரம்- நினைச்ச நேரத்தில் நினைச்ச இடத்தில் இருக்கும் சக்தி வேண்டும்..
(பஸ் செலவு, ஃப்லைட் செலவு மிச்சம், அதோட.. என் காதலி பார்க்க விரும்புற இடத்துக்கு
அவளை கூட்டிட்டு சுத்தலாம்ல..)

8. எட்டாவது வரம்- இந்த எட்டாவது வரத்தை என் பதிவை படிக்கிறவங்க கேட்கட்டும்...

9. ஒன்பதாவது வரம்- அப்பா...உனக்குதான் தெரியுமே ஏஞ்செல்.

10. பத்தாவது வரம்- இதை படிக்கிற என் நண்பருக்கு/ நண்பிக்கு இந்த வருஷம் மகிழ்ச்சியான இனிய வருடமா இருக்கணும்.
(அப்போ அடுத்த வருஷம் என்ன பண்றதாம்? மறுபடியும் இங்க வந்து படிங்க!!)

இதுக்கு மேலயும் வேண்டிக்க நிறைய இருக்கு. என்ன பண்றது பத்தே வரம் தானாம்.. இந்த ஏஞ்செல் சுத்த கஞ்சம்..பா.. !
சரி சரி. இன்னும் நாலு பேருக்கு இவளை அனுப்பனுமே!!

நம்ம முரளிக்குமார் பத்மநாபன்..

ரெண்டாவது நம்ம சென்ஷி..

மூன்றாவது நம்ம சுபாஷினி டீச்சர்..

நான்காவது நம்ம சீனா சார்..

இவங்க எல்லாருக்கும் என் இனிய பரிசாய் இந்த ஏஞ்செலை அனுப்பி வெக்கிறேன்..

போய்ட்டு வா தாயி..போய்ட்டு வா..!!