Sunday, September 27, 2009

விஜயதசமி வாழ்த்துக்களும்..!! ஒரு காமெடி ஸ்கிரீன் ப்ளேவும்!!!

http://www.dollsofindia.com/dollsofindiaimages/paintings2/goddess_poster_PX89_l.jpg
எல்லாருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்!!

குட்டீஸ் நல்லா படிச்சு பெரிய அளவுல பேர் வாங்கி , அப்பா அம்மாவை காப்பாத்தணும்னு சாமிய நல்லா வேண்டிக்கோங்க..!!

இளவட்டங்கள் இப்போ நல்லா படிக்காட்டியும் இனிமே நல்லா படிச்சு, கண்ட பொண்ணு பின்னாடி சுத்தாம, நல்ல வேலைக்கு போய், கைநிறைய சம்பாதிச்சு , பெத்தவங்களை சந்தோஷமா வெச்சிருந்து, நாலு பொண்ணை நம்ம பின்னாடி சுத்த வெய்யி தாயேன்னு சரஸ்வதிய வேண்டிக்கோங்க..!!

பெரிசுகள் எப்பவும் ஜாலியா சந்தோசமா நம்மையும் நம்மை சுத்தி உள்ளவங்களையும் வெச்சு பார்த்துக்க வேண்டிய பொறுப்பை இன்னும் சிறப்பா செய்யணும்னு வேண்டிக்கோங்க...!!

பெண்கள் எப்பவும் எதற்கெடுத்தாலும் கோவப்படாம , சூதனாம(அது உங்களுக்கு மட்டும்தான் வரும்.. ஜென்ஸ் இதில் வேஸ்ட்) நடந்து புகுந்த வீட்லயும், பிறந்த வீட்லயும் நல்ல பேரு வாங்கி , என்னையும் என் குடும்பத்தையும் மேலும் முன்னேற்றம் பண்ண வழி செய் தாயீன்னு வேண்டிக்கோங்க..!!!

அம்பாளின் அருளுக்கு எல்லாருக்கும் எல்லாம் தரட்டும். எல்லாரும் நல்ல மனசோட பரிச்சுத்தமா இருங்க..!!


http://farm2.static.flickr.com/1009/864900082_71906f506d.jpg


ஹோஸ்ட் : வணக்கம் நேயர்களே என்றும் போல் இன்றும் ஏழரை எப்.எம் மோடு உங்கள் இந்த இனிய இரவு பொழுதை கழியுங்கள்..!!

நேயர் : அலோஓஓஓஓஓஓஓஓஓ!..

ஹோஸ்ட் : அலோ.. வாங்க வணக்கம். உங்க பேர் என்ன ? எங்க இருந்து பேசுறீங்க?

நேயர் : அலோஓஓஓஓஓஓஒ...ஓ..ஓஓஓஓஓஓஓஓ..!!

குரல் லெந்தாக ஒலிக்க ஹோஸ்ட் பீதியாகிறார்...

ஹோஸ்ட் : சார், லைனுக்கு வந்துட்டீங்க..பேசுங்க..உங்க பேர் என்ன?

நேயர் : ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ...!!

சங்கு சத்தமெல்லாம் கேக்குதே என அதிர்ச்சி அடைகிறார் ஹோஸ்ட்..

ஒரு வேளை கோஸ்டா இருக்குமோ என்று பீதியாகி லைனை துண்டிக்கிறார்.

அடுத்த நேயர் அழைக்கிறார். கொஞ்சம் முகத்தை துடைத்துகொண்டு பேச ஆரம்பிக்கிறார் ஹோஸ்ட்.

நேயர் : அலோ வணக்கம்!!

ஹோஸ்ட் : வணக்கம் . உங்க பேரு என்ன? எங்க இருந்து பேசுறீங்க..?

நேயர் : அலோ.. சுகமதி இருக்காளா?

ஹோஸ்ட் : நீங்க கால் பண்ணி இருக்குறது ஏழறை எப்.எம் முக்கு சார்.. உங்க பேரை சொல்லுங்க..!!

நேயர் : டேய் நாயே!! யாருடா நீ? என் வீட்டுல உனக்கு என்னடா வேலை..?

ஹோஸ்ட் : (அதிர்ச்சியில் முழி பிதுங்கி) சார் இது உங்க வீடு இல்லை.. இது ஏழரை எப்.எம் ஆபிஸ்.. நீங்க நம்பர் தப்பா டயல்
பண்ணிட்டீங்க போல.. கட் பண்ணிட்டு அப்புறமா கூப்பிடுங்க..

நேயர் : டேய் பொரம்போக்கு..!! என் வீட்ல அதும் அர்த்த ராத்திரியில என்னடா பண்ற.. இருடா நேர்ல வரேன்.. மவனே இன்னிக்கு
நீ செத்தட!!

பீதியாகி இணைப்பை துண்டிக்கிறார் .

சரி தற்போது அலம்பர ..ச்சே..விளம்பர இடை வேளை..!!


அருகே கம்யூட்டர் ஆப்பரேட்டரை பார்க்க

க.ஆ : யோவ் லூஸா நீ..இன்னிக்கு ஒரு விளம்பரமும் இல்லை ..

ஹோஸ்ட் : ஆமால்ல.. சரி சரி..

ம்ம்.. அடுத்த நேயர் வருக வணக்கம்.

நேயர் : வணக்கம்.. ம்ம்..ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!

ஹோஸ்ட் : என்ன வணக்கத்தையே இவ்ளோ நீளமா சொல்றீங்க.. உங்க பேரு உண்மைதமிழனா?

நேயர் : இல்லீங்க..என் பேஏஏஏஎரு... குடியாத்தம் குப்புசாமிங்க..!!

ஹோஸ்ட் : சரி சொல்லுங்க குடிகாரன் குப்புசாமி.. உங்களுக்கு என்ன பாடல் வழங்கலாம்?

நேயர் : ரெண்டு ப்ளேட் மிக்ஸர் கொஞ்சம் சோடா!!

ஹோஸ்ட் (கடுப்பாகிறார்) : ஐயா இது டாஸ்மாக் கடை இல்லை.. ஏழறை எப். எம். இங்க நீங்க பாட்டு மட்டும்தான் கேக்கணும்.

நேயர் : அப்போ ரெண்டு பாட்டில் எளைய ராசா பாட்டு குடு.. அப்படியே தொட்டுக்க கொஞ்சம் குத்துபாட்டும் ,
ரசிக்க 3 மெலடி பாட்டும் போடு போதும்..!!

ஹோஸ்ட் : சரிங்க வைங்க..!!

ஹோஸ்ட் முதலில் கீழே இருக்கும் அந்த இரும்பு தடியை எடுத்து கம்ப்யூட்டர் ஆப்பரேட்டரை மண்டே மேலே போடுறார்..
அப்படியே தன் மண்டே மேல்யும் போட்டுகிட்டு திவாலாகிறார்..!!

பின்ன ஏழறைன்னா சும்மாவா?

11 comments:

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

நானும் எனது வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்..!

ரங்கன் said...

@உண்மைத் தமிழன்1527(இதுவும் நீளமாவா?!)

வருக... வணக்கம்!!

இராகவன் நைஜிரியா said...

விஜய தசமி வாழ்த்துகள்

கும்க்கி said...

ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.,
ஏழரைன்னா சும்மாவா..
ஏழரைன்னா சும்மாவா..
ஏழரைன்னா சும்மாவா..ஏழரைன்னா சும்மாவா..
ஏழரைன்னா சும்மாவா..
ஏழரைன்னா சும்மாவா..ஏழரைன்னா சும்மாவா..
ஏழரைன்னா சும்மாவா..
ஏழரைன்னா சும்மாவா..ஏழரைன்னா சும்மாவா..
ஏழரைன்னா சும்மாவா..
ஏழரைன்னா சும்மாவா..ஏழரைன்னா சும்மாவா..

கும்க்கி said...

போட்டோ நல்லாகீதுபா...

கும்க்கி said...

பாதி பட்ச்சிகினு கீர வர நல்லாதாம்பா போய்க்கினுந்திச்சி....அப்பால பாரு நைனா மீதிய பட்ச்சதும் பேஜாராய்ட்டேன்....
தப்பா நன்ச்சிகாதபா...

cheena (சீனா) said...

இனிய விஜயதசமி நல்வாழ்த்துகள் அனைவருக்கும்

இய‌ற்கை said...

வாழ்த்துகள்

ஜெஸ்வந்தி said...

அனைவருக்கும் இனிய விஜயதசமி நல்வாழ்த்துகள்

Anonymous said...

கிகிகிகி
ரங்கா, உங்களுக்கும் வாழ்த்துகள்

மங்களூர் சிவா said...

வாழ்த்துகள்

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.