பார்த்தால்.. நமது தோழி இயற்கை மகள் என்னையும் தொடர்பதிவு எழுத அழைத்திருக்கிறார்..
அகமகிழ்ந்து.. மகிழ்ச்சியோடு என் வேண்டுதல்களை ஏஞ்சலிடம் கேட்க தொடங்கிவிட்டேன்..
முதலில் இந்த ஏஞ்சல் நம்ம ஊரு பொண்ணுங்க மாதிரி சேலையிலோ சுடியிலோ வந்து நிக்கட்டும் அப்படின்னு நினைச்சுகிட்டேன்.
உடனே இந்த ஏஞ்செல சேலைக்கு மாறி என் மனதை கொள்ளை கொண்டது..(imagine பண்ணிக்கோங்க.. எனக்கு பிக்சர் கிடைக்கலை..!!)
வெச்ச கண்ணு வாங்காம பாத்துகிட்டே இருந்தா எப்படி.. என்ன வரம் வேண்டும் கேள் மகனே என்றது ஏஞ்செல்..
சரி கேக்குறேன்...
1. முதல் வரம்- யாரும் இனிமே இந்த உலகத்துல ஊனமா பிறக்க கூடாது.
2. இரண்டாவது வரம்- எந்த குழந்தையும் தாயில்லாமல் வாட கூடாது.
3. மூன்றாவது வரம்- என்னை சேர்ந்த உறவுகளும், நண்பர்களும் இப்பவும்போல எப்பவும் மகிழ்ச்சியா என்னோடு இருக்கணும்.
4. நான்காவது வரம்- எது வந்தாலும் தைரியத்தையும் நிதானத்தையும் இழக்காத மனசு வேண்டும்.
5. ஐந்தாவது வரம்- பணத்தின் மதிப்பு குறைந்து குணத்தின் மதிப்பு உயரணும்.
6. ஆறாவது வரம்- இயற்கையை (Nature..!!)மேம்படுத்தும் விதமாக மக்கள் செயல்படணும்.
7. ஏழாவது வரம்- நினைச்ச நேரத்தில் நினைச்ச இடத்தில் இருக்கும் சக்தி வேண்டும்..
(பஸ் செலவு, ஃப்லைட் செலவு மிச்சம், அதோட.. என் காதலி பார்க்க விரும்புற இடத்துக்கு
அவளை கூட்டிட்டு சுத்தலாம்ல..)
8. எட்டாவது வரம்- இந்த எட்டாவது வரத்தை என் பதிவை படிக்கிறவங்க கேட்கட்டும்...
9. ஒன்பதாவது வரம்- அப்பா...உனக்குதான் தெரியுமே ஏஞ்செல்.
10. பத்தாவது வரம்- இதை படிக்கிற என் நண்பருக்கு/ நண்பிக்கு இந்த வருஷம் மகிழ்ச்சியான இனிய வருடமா இருக்கணும்.
(அப்போ அடுத்த வருஷம் என்ன பண்றதாம்? மறுபடியும் இங்க வந்து படிங்க!!)
இதுக்கு மேலயும் வேண்டிக்க நிறைய இருக்கு. என்ன பண்றது பத்தே வரம் தானாம்.. இந்த ஏஞ்செல் சுத்த கஞ்சம்..பா.. !
சரி சரி. இன்னும் நாலு பேருக்கு இவளை அனுப்பனுமே!!
நம்ம முரளிக்குமார் பத்மநாபன்..
ரெண்டாவது நம்ம சென்ஷி..
மூன்றாவது நம்ம சுபாஷினி டீச்சர்..
நான்காவது நம்ம சீனா சார்..
இவங்க எல்லாருக்கும் என் இனிய பரிசாய் இந்த ஏஞ்செலை அனுப்பி வெக்கிறேன்..
போய்ட்டு வா தாயி..போய்ட்டு வா..!!
12 comments:
//அப்போ அடுத்த வருஷம் என்ன பண்றதாம்? மறுபடியும் இங்க வந்து படிங்க!!)
//
வருஷம் ஒரு தடவை இங்க வந்தா போதுமா?
//ஆறாவது வரம்- இயற்கையை (Nature..!!)மேம்படுத்தும் விதமாக மக்கள் செயல்படணும்.//
எத்தனை மொழியில மாத்தி மாத்தி எழுதினாலும்.. இயற்கைன்னா நான் தான்:-)))
@இயற்கை..
அடுத்த போஸ்ட்ல வாரா வாரம் வந்துட்டு போங்கன்னு போட்டுடறேன்.. நீங்க வரதை நிறுத்தாதீங்க.. நானும் எழுதுவதை நிறுத்த மாட்டேன்.
//பஸ் செலவு, ஃப்லைட் செலவு மிச்சம்//
//ஏஞ்செல் சுத்த கஞ்சம்..பா..//
ஏஞ்சல நீங்க கஞ்சம்ன்னு சொல்றீங்க..ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:-)
@இயற்கை,
ஏதோ எனக்கு தெரிஞ்ச இங்கிலிபீஷில் எழுதினேன்..அது பொறுக்காதே உனக்கு!!
//ஒரு தேவதை வந்துவிட்டாள் என்னை தேடியே!!
Posted by ரங்கன் //
கொடுத்தவைச்சவன்ப்பா நீ....!
தேடி நாடியெல்லாம் வர்றாங்க !
ம்ம் (பெருமூச்சு எல்லாம் இல்லன்னு சொன்னா நம்பவா போறீக!)
:)))
//இயற்கை said... September 16, 2009 9:29 AM
//ஆறாவது வரம்- இயற்கையை (Nature..!!)மேம்படுத்தும் விதமாக மக்கள் செயல்படணும்.//
எத்தனை மொழியில மாத்தி மாத்தி எழுதினாலும்.. இயற்கைன்னா நான் தான்:-)))
///
இப்படித்தான் ஊருக்குள்ள கொள்ள பேரு திரிஞ்சுக்கிட்டிருக்காங்க! ம்ம் நேச்சுரலாவே குணமாகிடும் ! :))))))))
Add-தமிழ் விட்ஜெட் பட்டன், உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடுவதை மிகவும் எளிமையாக்குகிறது.
உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !
விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்
புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....
தமிழ்செய்திகளை வாசிக்க
(இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்
(விரைவில்) - இலவசமாய் இந்திய புக்மார்க் தளங்களில் (தமிழ், ஆங்கிலம்) உங்கள் பதிவை சில நொடிகளில் (Auto Submit) புக்மார்க் செய்ய
தமிழ்செய்திகளை இணைக்க
ஆங்கில செய்திகளை வாசிக்க
வலைப்பூ தரவரிசை
சினிமா புக்மார்க்குகள்
சினிமா புகைப்படங்கள்
வந்தாச்சா? நான் ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன். ஐயாவுக்கு நேரம் கிடைத்தால் என் வீட்டுப் பக்கம் வரலாம்.
//எட்டாவது வரம்- இந்த எட்டாவது வரத்தை என் பதிவை படிக்கிறவங்க கேட்கட்டும்..//
எவ்வளவு தாராள மனப் பான்மை உனக்கு.... பெரிய மனம்தான்..
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.