Saturday, October 24, 2009

மீண்டும் சில காதல் கவிதைகள்!!

காதல் சொன்னபோது
தந்த ரோஜா
இறந்துவிட்டது அவள்
தூக்கி எறிந்தபோது..
கொல்லப்பட்டது அவைகள்
ஏறி சென்றபோது..

***************************

இறுக்கங்கள் தளர்த்தபட மனமில்லை
நெருக்கங்கள் குறைக்கப்பட மனமில்லை
தூரங்கள் அதிகப்பட மனமில்லை

இருந்தாலும் வேறு வழியில்லை..
விடிந்துவிட்டது.. போய் பல் துலக்கு..!!

******************************


செல்லாதே என்னை விட்டு
சில தூரம் போனாலும்
தொடர முடியவில்லை உன்னை..

செல்லாதே என்னை விட்டு
சில அடிகள் கடந்தாலும்
பிரிய முடியவில்லை உன்னை..

செல்லாதே என்னை விட்டு
சில மணித்துளிகள் நடந்தாலும்
மறக்க முடியவில்லை உன்னை..

இப்படி எல்லாம் புலம்புகிறேன்..
நீ விடிகாலையில் கட்டில் விட்டு
கடந்து போன போது..!!

Friday, October 23, 2009

நதியும்..சில படகுகளும்..!!


சூரிய கதிர்கள்
செல்லும் வழி
எப்போதும் அறியாது..

ஓடும் நதி
தன் பாதை
எப்போதும் அறியாது..

வெள்ளை மேகம்
தன் இலக்கு
எப்போதும் தெரியாது..

வளரும் மரம்
தன் வயதை
எப்போதும் அறியாது..

சுற்றும் பூமி
சுற்றும் காரணம்
எதுவும் அறியாது..

எப்படி என்றால்
ஏழாயிரம் விளக்கமுண்டு.

ஏன் என்றால்
எவனுமில்லை விளக்க..

வாழ்க்கை எனும் நதியிலே
வாழ்வை போல் இன்பமில்லை..

உடலே அதன் படகு..
உன் மனமே அதில் பயணி..
வாழ்வே அந்த நதி..

நிச்சயமாய் பயணம் முடிவற்றது
சில படகுகள் மாறி ஏறிக்கொள்வோம்..

நிச்சயமாய் பயணத்தில் அர்த்தமுள்ளது
பயணிக்கையில் அதை நாம் அறிந்துகொள்வோம்.

Thursday, October 22, 2009

நறுக்..கென்று சில கேள்விகள்..!!

http://www.lokvani.com/lokvani/a_images/y2007/38561-plus-4-kolam-brought-toge.jpg


நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?


ஒரு பெண்ணின் முதல் காலை ஓவியம் என்பதை
கோலத்தை மிதிக்கும் போது ..


நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?


நாம் அமரும் சீட்டை தந்தால் என்னவென்று..
ஒரு அரை மூதாட்டி அருகே நின்றபோது..


நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?

அவருக்கு வாகனத்தில் இடம் கொடுத்தால் என்னவென்று..
ஒரு முடவர் வேர்த்துகொட்டி உங்களை கடந்தபோது..

நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?

ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கி அவர்களிடம் பேசினால் என்னவென்று
உங்கள் மூத்தோர்கள் வீட்டில் முடங்கி இருக்கும்போது..

நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?

சர்க்கரை அளவை தெரிந்துகொண்டால் என்னவென்று
நீங்கள் குலாப் ஜாமூனும்,ஜிலேபியையும் சாப்பிடும்போது..

நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?

நாம் வாழக் கற்றுகொண்டோமா என்று..
உங்கள் குழந்தைக்கு வாழ கற்றுகொடுக்கும்போது..?

நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?

நாம் மனிதராய் பிறந்ததன் பயன் என்னவென்று..
நீங்கள் நல்ல மனிதர் என புகழப்படும்போது...!!

மறந்த பிரிதலும்.. மறவாத காதலும்.!

http://farm1.static.flickr.com/24/100790656_348ed6701a.jpg



நீ அளித்து போன முத்தம்
நீ சொல்லி போன வார்த்தை
நீ தந்து போன அந்த குட்டி கரடி பொம்மை
நீ எறிந்துவிட்டு போன அந்த கைக்குட்டை
நீ சிதறவிட்ட சில கண்ணீர்துளிகள்..

அப்போது தெரியவில்லை..
அத்தனையும் கடைசி என்று..
இப்போது உணர்கிறேன்..
காதலின் வலியென்ற ஒன்று..!

Tuesday, October 20, 2009

சின்ன குசும்பர் வந்தாச்சு..!! இனிமே குசும்பர் பாடு என்னாச்சு..?




வந்துட்டாரே..வந்துட்டாரே..எங்க அண்ணாத்தைக்கு சின்ன அண்ணாத்தே வந்துட்டாரே..!!


கலாய்க்கும் குசும்பருக்கு சின்ன குசும்பர் பிறந்தாச்சே..!!


எல்லாரும் ஓடியாங்க.. உங்க வாழ்த்துக்களை சொல்லிடுங்க..!!

Saturday, October 17, 2009

திரை விமரசனம்- Eternal Sunshine of a Spotless Mind (+18 only)

ஹாய்..


புது டெம்ளேட் நல்லா இருக்கும்னு நம்பறேன்..!!


ரொம்ப நாளாச்சுங்க திரைவிமர்சன பதிவெழுதி..

இப்போதான் சரியான நேரமும் விமர்சனத்துக்கு ஒரு படமும் கிடைச்சுது..அப்புறம் கேக்கவா வேணும்..!!

இன்னிக்கு விமர்சனத்துக்கு எடுத்துகிட்ட படம் “Eternal Sunshine of a Spotless Mind"..

இந்த படத்தை IMDB rating-ல தான் முதன்முதலில் பார்த்தேன்..

ஆனால் “Rated-R".. :(

Jim carrey யின் அசத்தலான நடிப்பில் உருவாக்கப்பட்ட படம் இது..







கதையின் போக்கை புரிஞ்சிக்க முதலில் இருந்தே உன்னிப்பாக கவனிக்க வேண்டிய கட்டாயம் இருக்கு.

எப்பவும் போல Jim-காமெடி பண்ணி கலக்குவாரு.. நல்ல நகைச்சுவை இருக்கும்னு பார்த்தா..
மனுஷன் ரொம்ப சீரியஸாவே இருக்கார்..

அடுத்த இன்ப அதிர்ச்சி..நம்ம டைட்டானிக் ஹீரோயின் (கேட் வின்ஸ்லெட்) பார்க்க 70’s ஹிப்பி மாதிரி ஒரு திமிரான(அழகான) லுக்கோட வளைய வராங்க..!!



முதல் 6 காட்சிகள் கவிதையோ கவிதை..!!

ஜிம் கேரியை ஒரு ரயில் பயணத்தில் சந்திக்கும் ஹீரோயின் அவரிடம் பேச்சு கொடுக்கிறார்..
அந்த பேச்சு நல்ல நட்பாக மாறி பிறகு காதலில் முடிகிறது.. ஆனால் சில பொய்களும் கொஞ்சம் டாமினேஷனும் குறுக்கே வர
அவர்களின் காதல் சிதைகிறது. சிறது காலம் விரக்தியில் வாழும் ஜிம் கேரி தன் காதலியை மீண்டும் சந்திக்க அவர் வேலை செய்யும்
கடைக்கு செல்கிறார். ஆனால் அவளோ அவரை சுத்தமாக மறந்தே விட்டார்...கவனிக்க.. சுத்தமாக என்றால்..தன் மனதில்,மூளையில் இருந்து
அவரின் நினைவுகள் அனைத்தையும் அழித்தே விட்டார்.(கொஞ்சம் சையின்ஸ் ஃபிக்‌ஷன்).. அதிர்ந்து போகிறார் ஜிம் கேரி.








அவரின் நண்பர் ஒருவர்
இது சகஜம்தான்..இதே போல் நீயும் அவளை அழித்துவிட்டு ஏன் நிம்மதியாக வாழக்கூடாது என்று கேட்க ஜிம் கேரிக்கு பொறி தட்டுகிறது.
அவளே நம்மை தூக்கி எறிந்த பிறகு நாம் மட்டும் ஏன் அவளை நினைத்து உருகிக்கொண்டு இருக்க வேண்டும் என்று சொல்ல
அந்த நினைவுகளை அழிக்கும் டாக்டரை சந்திக்கிறார். அந்த டாக்டர் ஏன் அவள் காதலியை அவளுக்கு பிடிக்கவில்லை என்பது போல சில பல
கேள்விகளோடு நினைவுகளை அழிக்கும் வேலையை துவங்குகிறார்.

ஜிம்மின் வீட்டிலேயே நினைவழித்தல் ட்ரீட்மெண்ட் தருவதாக உறுதியளித்த டாக்டர் அவரை விட்டிற்கு அனுப்பிவிடுகிறார்.வீட்டிற்கு வந்ததும்
ஜிம் கேரிக்கு மீண்டும் அதே விரக்தி தொற்றி கொள்கிறது. அதே நேரம் அவர் வீட்டிற்கு இரண்டு அஸிஸ்டண்ட் டாக்டர்கள் வர.. நினைவழித்தல்
வேலை துவங்கிவிடுகிறது.





ஆழ்நிலை உறக்கத்திற்கு செல்லும் ஜிம் கேரியின் மூளையினை Brain Mapping மூலம் ஆராய்கிறார் டாக்டர். குறிப்பிட்ட இடத்தில் அவரின்
காதல் நினைவுகள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கிறார். இப்போது ஜிம்மின் மனம் அவரின் மூளைக்குள் பயணிக்கிறது..அவரின் நினைவுகளை அவரே
மூன்றாவது மனிதராக நின்று பார்க்கிறார்..சில நேரம் அவரே அந்த நினைவுகளை கட்டுபடுத்தவும் முடிகிறது...


அந்த ட்ரீட்மெண்ட் நடந்துகொண்டிருக்கும் போது ஜிம்மின் வீட்டில் இந்த அஸிஸ்டண்ட் டாக்டர்கள் போடும் ஆட்டம்.. Untoleratable..!! இதுங்க அடிக்கிற லூட்டிக்கு தான் படம் "R" rating வாங்கிடுச்சுன்னு கூட சொல்லலாம்..!!


இப்போது துவங்குகிறது போராட்டம்.


ஜிம்-மின் காதல் நினைவுகள் அழிக்கப்பட ஆரம்பித்தவுடன் அவருக்கு பயம் தொற்றிக்கொள்கிறது. அவர் தன் நினைவுகள் அப்படியே இருந்துவிட்டால் என்ன என்று
யோசிக்கிறார்.. தன் காதலில் சின்னமாய் நம் நினைவுகளாவது இருக்கட்டும் என்று முடிவு செய்யும் ஜிம்.. அவரின் காதலியை கூட்டிக்கொண்டு..
கன்னாபின்னாவென்று குழந்தை நாள் நினைவுகளுக்கும் எதிர்கால கனவுகளுக்குள்ளும் புகுந்து கொள்கிறார். இதனால் ஜிம் கேரியின் நினைவுகளை
ஒழுங்காக அழிக்க முடியாமல் தடுமாறுகிறார்கள் இந்த டாக்டர்கள்.



இது ஒரு பக்கம் இருக்க.. தன் அடுத்த பாய் ஃப்ரெண்டோடு விளையாடிகொண்டிருக்கும் ஹீரோயினுக்கும் எதோ தோன்றுகிறது. அவர் கண்முன்னே ஜிம் கேரியின் முகமும்
அவர்களின் சில காதல் நினைவுகளும் வந்து மறைகின்றன. தன் காதலனை தன் நினைவுகளை அழித்துவிட்ட அந்த நாள் அவருக்கு ஞாபகம் வர
அவரை தேடி அவர் வீட்டுக்கு கிளம்புகிறார் ஹீரோயின்.

இங்கே ஜிம் தன் காதலியின் நினைவுகளை காப்பாற்ற போராடிகொண்டிருக்க..அவளும் ஜிம்மை தேடி கிளம்ப..

இறுதியில் ஜிம் தன் காதலியின் நினைவுகளை அழிக்காமல் காப்பாற்றினாரா? அவர்கள் மீண்டும் இணைந்தார்களா? கடைசி பத்து நிமிட கவிதை காட்சிகள் உங்களுக்கு அதை சொல்லும்..!!

சில நெளிய வைக்கும் காட்சிகளை நீங்கள் உங்கள் நினைவிலிருந்து அழித்துவிட்டு..மீண்டும் இந்த திரைப்படத்தை பற்றி நினைத்து பார்த்தால்..அவர்களின் அருமையான நடிப்பும், கதையின் ஆழமும் நிச்சயம் புரியும்...


மேற்படி தகவலுக்கு இங்க பாருங்க..

Tuesday, October 13, 2009

Farmville'யில நீங்க எந்த லெவெல்?

http://vator.tv/images/attachments/020909121934gameBig_farmville.jpg


நானும் ..நானும்..நானும்...

இப்படி எத்தனையோ பேர்..சேர்ந்துகிட்டு இருக்காங்க.. ஃபார்ம் வில்லி Farmvilley என்னும் விவசாயம் பண்ணும் விளையாட்டுக்கு!!

அதில் பூசணிக்காய் விதைச்சா சாயங்காலம் அறுவடை..அதுல ஒரு குறிப்பிட்ட பணம் சம்பாதிக்க முடிகிறது...இப்படித்தான் நார்மலா
நாம் யோசிப்போம்..நான் யோசிச்சேன்.. எனக்கு லெவெல்களை பற்றி கவலை வந்ததே கிடையாது.. விளையாட்டு தானே என்று பொறுமையா
விளையாடுவேன்..

சில நாள் முன்னாடி என் நண்பரிடம் அரட்டையில் இருந்தேன் ..நான் பத்துவார்த்தை பேசினால் அவர் ஒரு வார்த்தையில் முடித்துகொள்கிறார்..
என்னடா இது..”பிஸியா இருக்கீங்களா? ” என்று கேட்டால் ஆமாம் என்றார்.

பிறகு நானும் ஃபார்ம்வில்லி பக்கம் போன போது தான் தெரிந்தது அவர் பிஸியாக இருந்தது இங்குதான் என்று..

இதுக்கூட பரவாயில்லை..இதை வைத்து ஈகோ சண்டை வேறு.. சில இடங்களில் நடந்ததாக கேள்விப்பட்டேன்.

நண்பரே நான் உங்களை சில கேள்விகள் கேட்கிறேன்..பதில் சொல்லுங்க பார்ப்போம்..

1. அங்க நீங்க சம்பாதிக்கும் பேரும் புகழும் எந்த வகையிலாவது உங்களுக்கு உதவ போகிறதா?

2. ஒரு ஜாலிக்கு தான் விளையாடுறோம்னு சொல்லும் உங்களுக்கு ஒரு கேள்வி.. இருக்கும் வேலைவெட்டியெல்லாம் விட்டுட்டு..
ஒரு நல்ல நண்பனின் அருகாமையை விட..அந்த குப்பை விவசாயம் உங்களுக்கு முக்கியமாய் போனதன் காரணம் என்ன?

3. அதில் வரும் பணத்தை கொண்டு..வீடு வாங்க முடியுமா? ஒரு சைக்கிள் போல்ட் வாங்கக்கூட வழியில்லாத அந்த விளையாட்டை
ஏன் இவ்வளவு வெறித்தனமாக ஆடுகிறீர்கள்...?

4. பல லெவெல் கடந்த மாமேதைகளுக்கு ஒன்று தெரிந்திருக்கும்..இது நேரத்தை கொள்ளையடிக்கும் ஒரு விளையாட்டு என்று(கிரிக்கேட் போல)..
அப்புறம் ஏன் அதிலேயே ஊறி உங்கள் நண்பர்களை அவமானப்படுத்தறீங்க..

5. தமிழ்மண நண்பர்கள் சொன்ன சேதி ஒன்று இன்னும் அதிர்ச்சி அளித்தது.. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ப்ளாக் படிக்கப்படும் சதவீதம்
12% குறைந்துள்ளது.. என்று.. அதிர்ச்சிதான்..எனக்கும்..ஏன் இப்படி அதன் மீது ஒரு கிறுக்கு?

6. நான் அவனுக்கு பத்து பரிசுகள் அனுப்பினேனே..ஏன் அவன் ஒன்று கூட அனுப்பவில்லை..ஏன் பணம் சேரவே மாட்டேங்குது.. நிலத்தின் அளவை அதிகரிக்கலாமா?

இப்படியெல்லாம் யோசிக்கும் நீங்கள் ..அங்க ஒருத்தன் காத்திருக்கானே நமக்காக..அவரை விட..அந்த நல்ல நட்பை விட இந்த குப்பை முக்கியமா? என்று யோசிப்பது இல்லை..?


7. நீங்கள் ஆர்கூட் அக்கவுண்ட் வைத்திருந்தாலே அந்த நிறுவனத்திற்கு தினமும் 0.05 செண்ட் லாபம்.. ஆர்க்கூட்டை விட எத்தனையோ படி பலம் வாய்ந்தது இந்த ”முகரைப்புத்தகம்”..
அப்போ நீங்கள் தினமும் அந்த வலைப்பக்கத்திலேயே அதிகம் செலவிடுவதால்.. அவர்கள் எவ்வளவு சம்பாரிப்பார்கள்.. ?
தினமும் எத்தனை கோடிகள் புரளுமோ? தெரிந்தே நம் மின்சாரம்..நமது நேரம்..நமது மன உளைச்சலை போட்டு
ஏன் கண்ட நாய்க்கு சம்பாரிச்சு தரணும்..அதில் நமக்கு பத்து பைசா நமக்கு தேறாத போதும்?

8. அந்த லெவெல்ஸும் பணமும் வராமல் இருந்தால்.. நீங்கள் அதை விளையாடுவீர்களா?

ஒண்ணு கடைசியா சொல்லிக்க விரும்பறேன்.. அது ஒரு போதை வஸ்து.. நீங்க விவசாயமே பண்ணாட்டியும் அந்த வலைப்பக்கத்தில் நீங்கள் இருந்தால் அவனுக்கு பணம் சேரும்.
உஷாரா இருந்துக்கோங்க மக்கா.. ஒரு நாள் போதை தலைக்கு மீறி போய்ட்டா..நீங்கள் கண்டுக்காம விட்ட நண்பர்கள் கைக்கொடுப்பார்களா? நிச்சயம் கொடுப்போம்..

அதற்கான முதல் கட்டம் தான் இந்த பதிவு...

யோசிங்க.. Add Neighbours-க்ளிக் பண்றதுக்கு முன்னாடி உங்களுக்காக காத்திருக்கும் Real Friends-ஐ மறந்துடாதீங்க..!!

Friday, October 9, 2009

Engineering College for Humans!!!! (எச்சரிக்கை- இது கொஞ்சம் கடுப்பான பதிவு!)

http://cdn.sheknows.com/articles/fighting-couple.jpg


இனியும் என்னால பொறுக்க முடியாது..
இனி களத்துல குதிச்சுட வேண்டியதுதான்.. எப்படியாச்சும் இந்த புத்திமதியை, ஆதங்கத்தை நம்ம வலையுலகத்துல கொட்டிடணும்னு முடிவு பண்ணிட்டேன்.

ஒரு பழமொழி உண்டு ..ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு..

அதுபோல..இப்ப இந்த மனுஷ இனத்தையே ரெண்டு பண்ணி மனுஷங்களே கொண்டாடிக்கிறாங்க..!

இந்த சேலம் மாநகராட்சியில ஒரு பெயர் சொல்ல விரும்பாத..கல்லூரியில..

கல்லூரி பேருந்து விடுறாங்க..(இதுல என்னா ஆச்சரியம்னு தானே கேக்குறீங்க.?)...
அதுல முன்னாடி உக்கார்ந்து வரணுமாம் பெண்கள்.. பின்னாடி பசங்க வரணுமாம்..

சரி..கழுத..போய் தொலையுதுன்னு உக்கார்ந்த அடுத்த கண்டிஷன் பொண்ணுங்க கிட்ட எக்காரணம் கொண்டும் பேசவே கூடாதாம். இதை நினைச்சு சிரிக்கிறதா..அழுவுறதா? இல்ல அந்த காலேஜ் பிரின்சிபாலை மிதிக்கிறதான்னு தெரியலை..!!

அதுமட்டும் இல்லாம பேசுனது தெரிஞ்சா ரெண்டு நாளு சஸ்பெண்டு வேறயாம்..!!

அசிங்கமா இல்லை..!! ஒரு மனுஷன் இன்னோரு மனுஷ ஜென்மத்துகிட்ட பேசுவதை.. மூணாவதா இன்னோரு மனுஷ ஜென்மமே தடுக்குது..!!

அப்பா சாமிகளா..! அறிவு ஜீவிகளா! உங்க எல்லாருக்கும் ஒரு பெரிய கும்புடு..
இனிமேவாச்சும் யோசிச்சு பேசுங்க..உங்க வீட்டுலயும் ஒரு பொண்ணோ பையனோ இருக்கும் என்கிறதை ஞாபகம் வெச்சுக்கோங்க..!!

ஆணின் இயல்புகள் பெண்ணிற்கும் ..பெண்ணோட இயல்புகள் ஆணிற்கும் நிச்சயம் தெரிஞ்சிருக்கணும்..அப்படி தெரியாதவங்க மனுஷங்களா? எவ்ளோவோ படிச்சிருக்கோம்.. இதை ஏன் கண்டு பயப்படுறோம்?

தன் சக இனத்(மனித இனம்)தின் சைக்காலஜியையும் அனாடமியையும் தெரிஞ்சுக்காத ஒரே இனம் நாமா தான் இருப்போம்...!!

ப்ளீஸ்... நான் சொல்ல வரது இதுதான்.. பெண் பெண்ணா அழகா லட்சணமா இருக்கட்டும்..ஆனால் அவளுக்கு ஆணிடம் பேசவும் பழகவும் தைரியத்தையும் தெளிவையும் இந்த சமூகம் வளர்க்கட்டும்..

இதுவே தான் ஆணுக்கும்..

ப்ளீஸ் மச்சீஸ், கேர்ள்ஸ்!! இனிமே உங்க வாழ்க்கைய நீங்க வாழுங்க..உங்க அப்பா அம்மா வாழ்க்கைய அப்படியே ஜெராக்ஸ் பண்ணிட்டு இருக்காதிங்க..ஆல் தி பெஸ்ட்..!!

பி.கு : என் ப்ளாகுல நான் என்ன வேணா எழுதுவேன் என்று சொல்லபோவதில்லை.. அதே போல் பிறருக்காக நான் எழுவதை நிறுத்த போவதும் இல்லை.. என்ன சில நேரம் இப்படி கடுப்பா டைப் பண்ணிடுறேன்..ஹாஹாஹஹ..!!