Thursday, October 22, 2009

நறுக்..கென்று சில கேள்விகள்..!!

http://www.lokvani.com/lokvani/a_images/y2007/38561-plus-4-kolam-brought-toge.jpg


நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?


ஒரு பெண்ணின் முதல் காலை ஓவியம் என்பதை
கோலத்தை மிதிக்கும் போது ..


நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?


நாம் அமரும் சீட்டை தந்தால் என்னவென்று..
ஒரு அரை மூதாட்டி அருகே நின்றபோது..


நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?

அவருக்கு வாகனத்தில் இடம் கொடுத்தால் என்னவென்று..
ஒரு முடவர் வேர்த்துகொட்டி உங்களை கடந்தபோது..

நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?

ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கி அவர்களிடம் பேசினால் என்னவென்று
உங்கள் மூத்தோர்கள் வீட்டில் முடங்கி இருக்கும்போது..

நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?

சர்க்கரை அளவை தெரிந்துகொண்டால் என்னவென்று
நீங்கள் குலாப் ஜாமூனும்,ஜிலேபியையும் சாப்பிடும்போது..

நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?

நாம் வாழக் கற்றுகொண்டோமா என்று..
உங்கள் குழந்தைக்கு வாழ கற்றுகொடுக்கும்போது..?

நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?

நாம் மனிதராய் பிறந்ததன் பயன் என்னவென்று..
நீங்கள் நல்ல மனிதர் என புகழப்படும்போது...!!

7 comments:

Anonymous said...

very true..

சிட்டுக்குருவி said...

ஒரே கோலத்தை நாலு முறை போட்டிருக்காங்க

நடுவுல இருக்குற கோலம் தப்பா போட்டிருக்காங்க

உங்களோட கவிதைக்கு பதில் கோலத்தை மிதிக்கிறவங்களை ம(மி)திக்கணும்.

நாமக்கல் சிபி said...

மாப்பி, கோலம் அருமை! எங்கே எடுத்தது?

முடிந்தவரை தவிர்க்கப் பார்ப்பேன்! வேறு வழியில்லாமல் கோலங்களை மிதித்துச் செல்லும்போது கட்டாயம் நான் யோசிப்பேன், அபிக்கு எப்படி வலிக்கும் என்று!

ராமலக்ஷ்மி said...

நிறைய யோசிக்க வைத்து விட்டீர்கள் ரங்கன். அருமையான இடுகை.

மின்னுது மின்னல் said...

நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?

ஒரு பெண்ணின் முதல் காலை ஓவியம் என்பதை
கோலத்தை மிதிக்கும் போது ..
//


ஓ இது தான் கோலமா..?

.....
நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?

நாம் அமரும் சீட்டை தந்தால் என்னவென்று..
ஒரு அரை மூதாட்டி அருகே நின்றபோது..

.....//

நிறைய தடவை மூதாட்டினு இல்லை 50 வயசுக்கு மேல யாரு நின்னாலும்...!!!
எனக்கு அப்பா அம்மா நினைப்பு வந்துடும் எந்திரிச்சிடுவேன் !!


copy paste பண்ண முயற்சி பண்ணினேன் :)

*இயற்கை ராஜி* said...

யோசிக்க வைத்து விட்டீர்கள். அருமை

cheena (சீனா) said...

அன்பின் ரங்கா

நல்ல சிந்தனை நல்ல கவிதை நல்வாழ்த்துகள்

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.