Saturday, October 17, 2009

திரை விமரசனம்- Eternal Sunshine of a Spotless Mind (+18 only)

ஹாய்..


புது டெம்ளேட் நல்லா இருக்கும்னு நம்பறேன்..!!


ரொம்ப நாளாச்சுங்க திரைவிமர்சன பதிவெழுதி..

இப்போதான் சரியான நேரமும் விமர்சனத்துக்கு ஒரு படமும் கிடைச்சுது..அப்புறம் கேக்கவா வேணும்..!!

இன்னிக்கு விமர்சனத்துக்கு எடுத்துகிட்ட படம் “Eternal Sunshine of a Spotless Mind"..

இந்த படத்தை IMDB rating-ல தான் முதன்முதலில் பார்த்தேன்..

ஆனால் “Rated-R".. :(

Jim carrey யின் அசத்தலான நடிப்பில் உருவாக்கப்பட்ட படம் இது..கதையின் போக்கை புரிஞ்சிக்க முதலில் இருந்தே உன்னிப்பாக கவனிக்க வேண்டிய கட்டாயம் இருக்கு.

எப்பவும் போல Jim-காமெடி பண்ணி கலக்குவாரு.. நல்ல நகைச்சுவை இருக்கும்னு பார்த்தா..
மனுஷன் ரொம்ப சீரியஸாவே இருக்கார்..

அடுத்த இன்ப அதிர்ச்சி..நம்ம டைட்டானிக் ஹீரோயின் (கேட் வின்ஸ்லெட்) பார்க்க 70’s ஹிப்பி மாதிரி ஒரு திமிரான(அழகான) லுக்கோட வளைய வராங்க..!!முதல் 6 காட்சிகள் கவிதையோ கவிதை..!!

ஜிம் கேரியை ஒரு ரயில் பயணத்தில் சந்திக்கும் ஹீரோயின் அவரிடம் பேச்சு கொடுக்கிறார்..
அந்த பேச்சு நல்ல நட்பாக மாறி பிறகு காதலில் முடிகிறது.. ஆனால் சில பொய்களும் கொஞ்சம் டாமினேஷனும் குறுக்கே வர
அவர்களின் காதல் சிதைகிறது. சிறது காலம் விரக்தியில் வாழும் ஜிம் கேரி தன் காதலியை மீண்டும் சந்திக்க அவர் வேலை செய்யும்
கடைக்கு செல்கிறார். ஆனால் அவளோ அவரை சுத்தமாக மறந்தே விட்டார்...கவனிக்க.. சுத்தமாக என்றால்..தன் மனதில்,மூளையில் இருந்து
அவரின் நினைவுகள் அனைத்தையும் அழித்தே விட்டார்.(கொஞ்சம் சையின்ஸ் ஃபிக்‌ஷன்).. அதிர்ந்து போகிறார் ஜிம் கேரி.
அவரின் நண்பர் ஒருவர்
இது சகஜம்தான்..இதே போல் நீயும் அவளை அழித்துவிட்டு ஏன் நிம்மதியாக வாழக்கூடாது என்று கேட்க ஜிம் கேரிக்கு பொறி தட்டுகிறது.
அவளே நம்மை தூக்கி எறிந்த பிறகு நாம் மட்டும் ஏன் அவளை நினைத்து உருகிக்கொண்டு இருக்க வேண்டும் என்று சொல்ல
அந்த நினைவுகளை அழிக்கும் டாக்டரை சந்திக்கிறார். அந்த டாக்டர் ஏன் அவள் காதலியை அவளுக்கு பிடிக்கவில்லை என்பது போல சில பல
கேள்விகளோடு நினைவுகளை அழிக்கும் வேலையை துவங்குகிறார்.

ஜிம்மின் வீட்டிலேயே நினைவழித்தல் ட்ரீட்மெண்ட் தருவதாக உறுதியளித்த டாக்டர் அவரை விட்டிற்கு அனுப்பிவிடுகிறார்.வீட்டிற்கு வந்ததும்
ஜிம் கேரிக்கு மீண்டும் அதே விரக்தி தொற்றி கொள்கிறது. அதே நேரம் அவர் வீட்டிற்கு இரண்டு அஸிஸ்டண்ட் டாக்டர்கள் வர.. நினைவழித்தல்
வேலை துவங்கிவிடுகிறது.

ஆழ்நிலை உறக்கத்திற்கு செல்லும் ஜிம் கேரியின் மூளையினை Brain Mapping மூலம் ஆராய்கிறார் டாக்டர். குறிப்பிட்ட இடத்தில் அவரின்
காதல் நினைவுகள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கிறார். இப்போது ஜிம்மின் மனம் அவரின் மூளைக்குள் பயணிக்கிறது..அவரின் நினைவுகளை அவரே
மூன்றாவது மனிதராக நின்று பார்க்கிறார்..சில நேரம் அவரே அந்த நினைவுகளை கட்டுபடுத்தவும் முடிகிறது...


அந்த ட்ரீட்மெண்ட் நடந்துகொண்டிருக்கும் போது ஜிம்மின் வீட்டில் இந்த அஸிஸ்டண்ட் டாக்டர்கள் போடும் ஆட்டம்.. Untoleratable..!! இதுங்க அடிக்கிற லூட்டிக்கு தான் படம் "R" rating வாங்கிடுச்சுன்னு கூட சொல்லலாம்..!!


இப்போது துவங்குகிறது போராட்டம்.


ஜிம்-மின் காதல் நினைவுகள் அழிக்கப்பட ஆரம்பித்தவுடன் அவருக்கு பயம் தொற்றிக்கொள்கிறது. அவர் தன் நினைவுகள் அப்படியே இருந்துவிட்டால் என்ன என்று
யோசிக்கிறார்.. தன் காதலில் சின்னமாய் நம் நினைவுகளாவது இருக்கட்டும் என்று முடிவு செய்யும் ஜிம்.. அவரின் காதலியை கூட்டிக்கொண்டு..
கன்னாபின்னாவென்று குழந்தை நாள் நினைவுகளுக்கும் எதிர்கால கனவுகளுக்குள்ளும் புகுந்து கொள்கிறார். இதனால் ஜிம் கேரியின் நினைவுகளை
ஒழுங்காக அழிக்க முடியாமல் தடுமாறுகிறார்கள் இந்த டாக்டர்கள்.இது ஒரு பக்கம் இருக்க.. தன் அடுத்த பாய் ஃப்ரெண்டோடு விளையாடிகொண்டிருக்கும் ஹீரோயினுக்கும் எதோ தோன்றுகிறது. அவர் கண்முன்னே ஜிம் கேரியின் முகமும்
அவர்களின் சில காதல் நினைவுகளும் வந்து மறைகின்றன. தன் காதலனை தன் நினைவுகளை அழித்துவிட்ட அந்த நாள் அவருக்கு ஞாபகம் வர
அவரை தேடி அவர் வீட்டுக்கு கிளம்புகிறார் ஹீரோயின்.

இங்கே ஜிம் தன் காதலியின் நினைவுகளை காப்பாற்ற போராடிகொண்டிருக்க..அவளும் ஜிம்மை தேடி கிளம்ப..

இறுதியில் ஜிம் தன் காதலியின் நினைவுகளை அழிக்காமல் காப்பாற்றினாரா? அவர்கள் மீண்டும் இணைந்தார்களா? கடைசி பத்து நிமிட கவிதை காட்சிகள் உங்களுக்கு அதை சொல்லும்..!!

சில நெளிய வைக்கும் காட்சிகளை நீங்கள் உங்கள் நினைவிலிருந்து அழித்துவிட்டு..மீண்டும் இந்த திரைப்படத்தை பற்றி நினைத்து பார்த்தால்..அவர்களின் அருமையான நடிப்பும், கதையின் ஆழமும் நிச்சயம் புரியும்...


மேற்படி தகவலுக்கு இங்க பாருங்க..

5 comments:

cheena (சீனா) said...

ஹாய் ரங்கா

இங்கிலீசு படமெல்லாம் பாப்பியா

விமர்சனம் நல்லாவே எழுதி இருக்கே

நல்வாழ்த்துகள்

மங்களூர் சிவா said...

yes no ok right vidu

மின்னுது மின்னல் said...

நல்லா எழுதியிருக்கிங்க !!

எனக்கு ஆக்‌ஷன்,அட்வெஜ்சர் தான் புடிக்கும்

டெம்லேட் ஒகே !

இராகவன் நைஜிரியா said...

விமர்சன் அருமை.

டெம்ப்ளேட் அழகா இருக்குங்க. சிலர் மாதிரி 3 காலம் போடாமல், இரண்டு காலம் போட்டு படிப்பதற்கும் சுகமாக இருக்கின்றது.

மற்ற இடங்களில் லைட் ப்ளூ கலர் கொடுத்து இருக்கின்றீர்கள். அதற்கு பதிலாக இன்னும் கொஞ்சம் டார்க் கல்ர் முயற்சி செய்து பாருங்களேன்.

மின்னுது மின்னல் said...

உங்களிடம் கைக்கொடுத்து போகிறவன்..!!
//


கைமாத்து குடுத்தால் நல்லா இருக்கும் :)

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.