Sunday, November 15, 2009

கண்டதும் வென்றதும்..!!

http://a.espncdn.com/photo/2008/0810/oly_g_kitajima_300.jpg

சிரித்தேன்..

கிண்டலடிக்கிறார்கள்..!

அழுதேன்..

வீணாய் போகிறவன் அழுவான் என்றார்கள்..!

முறைத்தேன்..

லாயக்கு இல்லாதவன் முறைக்கிறான் என்றார்கள்..!

வருந்தினேன்..

வருத்தம் பணம் சேர்க்காது என்றார்கள்..!

அன்பு காட்டினேன்..

பணம் பிடுங்க நெருங்கிவருகிறான் என்றார்கள்..!

எது செய்தாலும் என்ன செய்தாலும்..

அந்த நாலு பேருக்கு நாம் நல்லவரில்லை..

நம்மை பற்றி நாம் அறிந்து கொண்டால்..

இந்த அகிலத்தில் நமை போல் வல்லவரில்லை..!!

வாழ்க்கை சிறந்தது..

வாழ்தல் அறியது..

வாழ துணிந்துவிட்டால்..

அந்த வானும் சிறியது..!!

8 comments:

Anonymous said...

ம்ம்ம் நாங்க அன்றே அனுபவிச்சதை நீங்க இப்பத் தான் அனுபவிச்சீங்க போல...ஊர் அறிந்த தத்துவம் உணர்ந்த பின்

மங்களூர் சிவா said...

சூப்பர்!

cheena (சீனா) said...

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகமே இது தானடா ரங்கா இதுதானடா

பழூர் கார்த்தி said...

அருமை.. நிறைய எழுதுங்கள்

RAMYA said...

இதுதான் யதார்த்தம்! எப்படி இருந்தாலும் உலகம் நம்மைப் பார்த்து ஏதாவது கூறிக் கொண்டிருக்கும்.

இதுதான் இந்த விந்தை நிறைந்த உலகம் என்ன செய்ய!

pudugaithendral said...

நாம நாமளா இருந்தா போதும். அடுத்தவங்க சொல்றதை பத்தி நினைக்க வேணாம்.

தமிழ் உதயம் said...

உலகம் இப்படித்தான் இருக்கும். விமர்சனங்கள் நிறைந்தது தான் வாழ்க்கை. நேர்மையாளனை விமர்சனங்கள் ஒன்றும் செய்யாது.

அன்புடன் நான் said...

கவிதை நல்லாயிருக்குங்க வாழ்த்துக்கள்.... தொடர்க.

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.