Tuesday, December 1, 2009

ஏம்ப்பா..நீங்களாவது சொல்லுங்க..இது தமிழ்நாடு தானே?

இன்னாங்கடா இது..ஆச்சரியமா கீது.. நெசமாத்தான் சொல்றியா?

இப்படி எனக்குள் கேட்டுகொண்டேன் இன்று முழுதும்..

“ஏம்பா...ஏய்..இது தமிழ்நாடு ஸ்டேட் தானே.. இல்ல ஆஸ்திரேலியா எதும் வந்துட்டேனா? ” என்று புளங்காதிப்படும் விதமாய் சில சம்பவங்கள் நெஞ்சை தொட்டது..

சம்பவம் -1:

தங்கை புதுக்குடித்தனம் போவதால் அவர் பெயரை அட்டையில் இருந்து நீக்க வேண்டும்..அதற்கு இன்று வர சொல்லி இருந்தார்கள். போன சில நிமிடங்களில் அன்பான உபசரிப்போடு!!! சான்றிதழ் வழங்கிவிட்டார்கள்.

அட..!! இது முதல் அதிர்ச்சி.

சம்பவம் -2 :

இன்னைக்கு என்று பார்த்து என் வாகனம் நட்ட நடு சாலையில் மக்கர் பண்ண..அதுவும் சேலம் நான்கு ரோடு பகுதியில் நடு ரோட்டில் பக்கி பழிவாங்கிவிட்டது..

இன்னிக்கு ஃபைன் தான்.. 500 வாங்காம மாமா விடமாட்டாரு..அய்யயோ போச்சே.. ஆமா யார் முகத்தில் விழிச்சோம் என்றெல்லாம் என்ன அலைகள் அழுவ..

அருகில் வந்த அந்த ட்ராபிக் கான்ஸ்டபிள்.. தம்பி..பாத்து...இப்படி..ஓரமா கொண்டுவாங்க..என்று அவரும் எனக்கு உதவ.. எதற்கும் ஒரு முறை பார்த்துகொள்வோம் அது கடவுளாய் இருந்துதொலைத்துவிட போகிறது என்று உத்த்த்த்து பார்த்தேன்..அவர் பெயர் சண்முக சுந்தரம்.ஆபத்தில் ஓடு வந்து உதவிய இவரது செயல் என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஒரு திட்டு இல்லை..ஒரு கோபப் பார்வை இல்லை..அட ஒரு ஃபைன் கூட இல்லை ..நீ நீடுழி வாழ்க என போற்றியபடி புறப்பட்டேன்..

சம்பவம் -3:

அடுத்து வீடு வந்து சேர்ந்தால் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. சம்சாரம் போனா சந்தோஷபடலாம்(ஊருக்கு போனால்).. மின்சாரம் போனால் முடியுமா? உடனே மின்சார வாரிய தொலைப்பேசிக்கு அழைத்தேன்..
அட...!!
அமைதியான தெளிவான குரலில் பதில்கள் வந்தன.. என்னால் இதை நம்ப முடியவில்லை...காலை பதினோரு மணிக்கு கம்ப்ளெயிண்ட் புக் செய்யப்பட்டது...மதியம் 12.30க்குள் மின்சார விநியோகம் சீர் செய்யப்பட்டு விட்டது.

ஏம்ப்பா..நீங்களாவது சொல்லுங்க..இது தமிழ்நாடு தானே?

18 comments:

அன்புசிவம் said...

நல்லா யோசிச்சு பாருங்க... நேத்திக்கி அதிக நேரம் தூங்கினீங்க தானே?

ரங்கன் said...

இல்லைங்க..நான் நேத்து தூங்கவே இல்லை..!!

ராஜவம்சம் said...

அது தாங்க பிரச்சனை ஒரு மனுசன் ஒரு நாளைக்கு குறைந்தது ஆறு மனி நேரமாவது தூங்கனும் இல்லாட்டி இப்பாடிதான் பித்து......

(உண்மைய சொன்னா நம்பமாட்டானுங்க)


சரி புரியுது

தர்ஷன் said...

ஷங்கர் படம் முடிந்தவுடன் வரும் காட்சிகள் போல இருக்கிறது

ரங்கன் said...

@தர்ஷன்,
அதேதான் அதிர்ச்சி தான் எனக்கும்..

cheena (சீனா) said...

அன்பின் ரங்கா
அரசு இயந்திரங்கள் பல சமயங்களில் நன்றாகவே இயங்குகின்றன. ஐயமே இல்லை.

நல்வாழ்த்துகள் ரங்கா

Shakthiprabha said...

:))))

ஒரு வேளை உங்க ராசிபலன் நல்லா இருந்திருக்குமோ :D

நல்ல பதிவு. ரசித்தேன்.

ரங்கன் said...

@சீனா,

ஆமா..இயந்திரங்களாய் இயங்குவதால் தான் ஏராளமான கோளாறுகள்!!

மனிதர்களாய் எப்போது மனசாட்சிப்படி வேலை செய்வார்களோ தெரியலை..!

Anonymous said...

நல்ல காலம் பொறந்திடிச்சு........
கலிகாரன் ஓ...டிப்பூட்டான்
நல்ல காலம் பொறந்திடிச்சு.......
நல்ல காலம் பொறந்திடிச்சு.......

ரங்கன் said...

@sakthiprabha,
இருந்தாலும் இருக்கும்..யாரு கண்டா?

வருகைக்கு நன்றி பிரபா.

இராகவன் நைஜிரியா said...

ஆஹா.. ரொம்ப சந்தோஷமா இருக்குது

அகல்விளக்கு said...

உங்களுக்குமா...

ஈரோடும் அதே நிரமைலதாங்க இருக்கு

Anonymous said...

வழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இது தானடா?ஏம்பா எல்லாத்துக்கும் இப்படி புலம்பினால் எப்படி? நம்புங்க அப்பு நம்புங்க...

புதுகைத் தென்றல் said...

கனவு கண்டிருப்பீங்க ரங்கா,

இந்த மாதிரி எல்லாம் நடந்தா(!!) உங்களையே ஒருமுறைகிள்ளி பாத்துக்கோங்க. காயம் வந்தா போட்டோ பிடிச்சு பதிவு போடுங்க. அப்ப நம்பறேன்.

:)

SanjaiGandhi™ said...

நம்ம ஊரைக் கேவலப் படுத்த வெளியூர்க்காரன் தேவலை. நாமளே போதும். இதில் ஆச்சரியப் பட என்ன இருக்கு?. இதெல்லாம் ஆச்சரியமாகத் தெரியும் அளவுக்கு உங்களின் மோசமான அனுபவங்களை சொல்லி இருக்கலாம். அதென்ன ஆஸ்திரேலியாவுடன் ஒப்பீடு? அங்கு உங்கள் அனுபவம் ரொம்ப சந்தோஷமானதாவே இருந்ததோ?

ரங்கன் said...

@SanjaiGandhi(TM)?!,
எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் இவை. ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு நம் நிலைமை மோசமில்லை என்று உங்களால் உதாரணங்களோடு சொல்லிட முடியுமா?

ஆஸ்திரேலியா என்பது வேறொரு நாடு என்பதற்காக எடுத்துகொண்ட சொல்லே தவிர..அந்நாட்டை புகழ்ந்துகொண்டிருக்க நான் முட்டாளில்லை..!!

எப்படியோ..நல்ல கேள்வி..என் பதிவுக்கு வெற்றி.!!

SanjaiGandhi™ said...

ஏராளமாய் சொல்லமுடியும் ரங்கன்.
கடந்த வெள்ளிக் கிழமை கூட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு வேலை. குறிப்பிட்ட அலுவலகம் எந்த இடமென்று தெரியவில்லை. முன்னாடி இருந்த ஒரு அலுவலகத்தில் ஒருவரிடம் கேட்டேன். வழி சொன்னார். எனக்கு புரியவில்லை. நான் முழிப்பதைப் பார்த்துவிட்டு நான் போக வேண்டிய அலுலவகத்தில் வாசல்வரை வந்து விட்டு சென்றார்.

சமீபத்தில் வங்கியில் ஒரு வேலை. எனக்கு செக் குடுத்தவர் அதே வங்கியின் வேறு கிளையில் கணக்கு வைத்திருப்பவர். நான் கலெக்‌ஷன் பெட்டியில் போடவில்லை. மேனேஜரிடம் என் அவசரத் தேவையை சொன்னேன். அடுத்த நிமிடம் என் கணக்கிற்கு பணம் மாற்றப் பட்டது.

இன்னும் நெறைய சொல்லமுடியும்.

100% பர்ஃபெக்ட் என்று எங்குமே இல்லை. சில குறைகள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் நீங்கள் ஆச்சர்யப்பட்டிருக்கும் அளவுக்கு என் அனுபவங்கள் இல்லை.

நீங்கள் குறிப்பிட்டிருப்பதை எல்லாம் ஆச்சர்யமாக பார்க்கும் அளவுக்கு உங்கள் மோசமான அனுபவங்களையும் சொன்னால் தெரிந்துக் கொள்வோமே.

//ஆஸ்திரேலியா என்பது வேறொரு நாடு என்பதற்காக எடுத்துகொண்ட சொல்லே தவிர..அந்நாட்டை புகழ்ந்துகொண்டிருக்க நான் முட்டாளில்லை..!!
//

:)) முடியல..

அபப்டின்னா, இது தமிழ்நாடு தானா என்பதோடு நிறுத்தி இருக்கலாம். ஆஸ்திரேலியா என்று குறிப்பிட்டிருப்பது, அந்த தேசத்தின் பெருமையை சொல்வதாய் தான் கருதமுடியும்.

அப்போ கூட பாருங்க.. தமிழ்நாட்டை மட்டம் தட்றது என் வேலை இல்லைனு சொல்லத் தோனலை. நல்லா இருங்கய்யா..

ஹுஸைனம்மா said...

//அதென்ன ஆஸ்திரேலியாவுடன் ஒப்பீடு? அங்கு உங்கள் அனுபவம் ரொம்ப சந்தோஷமானதாவே இருந்ததோ?//

அங்க அடிகிடி வாங்கியிருப்பார்; இங்க அது கிடைக்கலை, அந்த சந்தோஷத்துல சொல்லியிருக்கார். விடுங்க சஞ்சய்.

;-))

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.