Wednesday, November 11, 2009

The Prestige-2006, Christopher Nolan,Christian Bale,Hugh Jackman

கிரிஸ்டோபர் நோலன்.. என்னவோ சாதரண பேர்தான்..என்றாலும் தலைவர் வாழ்கன்னு கோஷம் போடுற அளவுக்கு ரசிகர்கூட்டம் கொண்ட டைரக்டர்.
ஸ்டீவன் ஸ்பீல்ஸ்பெர்க்கிர்கு பிறகு அதிக ரேட்டிங் கட்டிய ரைட்டர், டைரக்டர் இவர்.
இவரோட படங்கள் எப்பவுமே கடைசி நேர திருப்பத்துக்கு பேமஸ்..
அதுவும் அதிகபட்சம் மனதை தொடும் முடிவாகவே அமைப்பதில் கில்லாடி.

சரி புராணம் போதும்..வரலாறுக்கு வருவோம்!
இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே சூப்பர்பா ரகம்.Memento,Batman Begins,Dark Knight,The Prestige.

இப்போ நாம் பார்க்க போகும் படம் the prestige.

http://images.allmoviephoto.com/2006_The_Prestige/2006_the_prestige_045.jpg

1800களில் நடக்கும் கதை இது.
பிரிட்டிஷ் இங்கிலாந்தில் இரண்டு சமகால மேஜிக் நிபுணர்கள்.கிரிஸ்டியன் பேல்(Terminator Salvation hero),ஹீஜ் ஜேக்மேன்(Wolverine-xmen,-2,3,4)
இவங்க ரெண்டு பேரும் முதலில் ஒருத்தருக்கு கீழ வேலை செஞ்சு பிறகு சில காலம் கழிச்சு தனித்தனியே மேடை
ஏறி மக்களை ஏமாற்றியவர்கள்(மேஜிக்கில் மட்டும்).

ஆனால் ஒரே வித்தியாசம்..ஜாக்மேன் தான் பெரிய மெஜிஷியனா வரணும்ங்கற வெறி கொண்டவர். அதற்காக எப்படியும் பலரோட ஸ்டைலை காப்பி அடிக்க
தவறாதவர்.
கிரிஸ்டியன் பேலும் அதே ரகம் ஆனால் கொஞ்சம் டீஸண்டா தானே புதுசா கண்டுபிடிக்க தெரிஞ்சவர்.ரகசியங்களை காப்பாத்த தெரிஞ்ச கில்லாடி.

ஒரு முறை ஜேக்மேனின் ஷோவில் மாறுவேஷத்தில் மேடையில் கலந்துகொள்கிறார்.அப்போது நடக்கும் அசம்பாவிதத்தில் ஜேக்மேனின் மனைவி இறக்கிறார்.The Prestige Wallpaper - 2006
இதற்கு கிரிஸ்டியன் பேல் தான் காரணம் என்று ஜேக்மேன் அவரை பழிவாங்க துடிக்கிறார். தான் தொலைத்த மகிழ்ச்சியை அவனும் தொலைக்க வேண்டும் என்கிற
பழிவெறி மனதில் குடிகொள்கிறது.

இப்போது கதை சூடுபிடிக்கிறது.. ஒரு புதிய ஷோ ஆரம்பிக்கிறார் கிரிஸ்டியன் பேல். அதில் மக்களோடு மக்களாய் கலந்துகொள்ளும் ஜேக்மேன் , கிரிஸ்டியன் பேலை கொல்ல முயற்சிக்க,
கைதவறிப்போக..கிரிஸ்டியன் பேலின் இரண்டு இடது கை விரல்களை மட்டும் பலி வாங்குகிறது.தப்பித்து விடுகிறார் ஜேக்மேன்.

அதற்குள் கிரிஸ்டின் பேல் ஒரு புதிய நிகழ்ச்சியை துவங்குகிறார். அதில் கிரிஸ்டியன் பேல் இந்த மூலையில் இருந்து ஒரு பந்தினை தானே தூக்கி போட்டுவிட்டு ஒரு கதவுக்குள் அறைக்குள் செல்வார். அடுத்த மூலையில் இருக்கும் கதவு வழியாக வெளியேறி பந்தை பிடிக்கிறார்.
மக்கள் ஆச்சரியத்தில் வியந்து போகிறார்கள். இதை ஜேக்மேனும் கவனிக்கிறார்.


சில நாட்கள் கடந்தன. ஒரு புதிய ஷோ ஒன்றை ஏற்பாடு செய்யும் திட்டத்தில் இருக்கும் ஜேக்மேன்.. தன்னை போலவே இருக்கும் இன்னொரு நபரை தேடுகிறார். ஆனால் அந்த நபர் சரியான குடிகாரனாய் இருப்பதால் அவரை விரட்டிவிடுகிறார்.
நிக்கோலஸ் டெஸ்லா என்பவர் மூலம் “ஒரு பொருளை அப்படியே நகல் எடுத்து வேறு இடத்தில் சேர்க்கும்”(Science-fiction)புதிய திட்டம் பற்றி அறிகிறார்.
இவருக்கு முதலில் ஆச்சரியமாக இருந்தாலும் இவருக்குள்ள இருக்கும் சாத்தான் சிரித்தது. இந்த மிஷினை தானே வாங்கிகொள்வதாகவும், அதை தன் ஷோவில் பயன்படுத்தபோவதாகவும் சொல்கிறார் ஜேக்மேன்.

அந்த ஷோவிற்கு பெயர் ”Transported Man" என நாமகரணம் சூட்டுகிறார். ஆனால் ஒரே ஒரு பிரச்சனை. ஒவ்வொரு ஷோவிலும் ஒரு புதிய ஜேக்மேன் உருவாகிவிடுவார். அவரின் நகல்களாய்.
இதை சமாளிக்க தன்னையே பலியிடுகிறார் ஜேக்மேன்.

இந்த பலியிடலை ஒருநாள் நேரில் பார்த்துவிடும் கிரிஸ்டின் பேல் அவரை காப்பாற்ற முயற்சிக்கிறார். ஆனால் அதில் தோற்றுவிட , கிரிஸ்டின் பேல் மீது வழக்கு தொடர்கிறார் ஜேக்மேனின் உதவியாளர் மைக்கேல் கேன்.
இதை சற்றும் எதிர்பாராத கிரிஸ்டின் பேல் கோர்டின் தூக்கு தண்டனைக்கு ஆளாகிறார்.

கிரிஸ்டின் பேலின் குடும்பத்தை கவனித்துகொள்கிறார் அவரின் உதவியாளர்.(இவர்தான் கதையின் மெயின் கேரக்டர்). ஒரு நாள் கிரிஸ்டியன் பேலை சந்திக்க ஒரு அரசாங்க அதிகாரி வர.. அதிர்கிறார் கிரிஸ்டியன் பேல்.
காரணம் அது ஜேக்மேனின் இன்னொரு காப்பி. அதாவது அந்த மிஷின் மூலம் கடைசி ஷோவில் உருவான காப்பி .

உன் குழந்தை உயிருடன் இருக்க வேண்டுமானால் உன் ஷோவின் ரகசியத்தை சொல்லிடுன்னு மிரட்டுகிறார் ஜேக்மேன்.இறுதி நாட்கள் நெருங்கினாலும் தன் ரகசியத்தை வெளியிடாமலே உயிர்விடுகிறார் கிரிஸ்டின் பேல்.
குழந்தையையும் காப்பாற்றிவிடுகிறார் கிரிஸ்டின் பேல். எப்படி...?

படத்தில் காணுங்கள்.



ரொம்ப பெருசா போய்டுச்சா? ஐயம் ஸாரி..!!

..very lengthy..but..very very nice script..by christopher nolan.


எச்சரிக்கை..படத்தில் எதாவது ஒரு கதாப்பாத்திரத்தின் குணம் உங்களை தொற்றிகொள்ளும் வாய்ப்புள்ளது..ஜாக்கிரதை..!

11 comments:

cheena (சீனா) said...

ஹாய்

கத ரொம்ப நீளமா இருக்கு - படம் நல்லாத்தான் இருக்கும் - மேஜிக் இல்ல

நல்வாழ்த்துகள் ரங்கா
நல்லா விமர்சனம் பண்ணி இருக்கே

அன்பேசிவம் said...

யோவ் பெரிய ஆளுய்யா நீ, எனக்கு ரெண்டு மூணு தடவை பார்த்துக்கு பிறகுதான் புரிந்த்து படம். இவ்ளோ சாதாரணமா ஒண்ணியும் இல்லைங்கிற மாதிரி ஜஸ்ட் லைக் தட் எழுதிமுடிச்சிட்டிங்க. படம் பார்க்க்குறவங்களுக்கு இருக்கு மண்டைவலி

Iyappan Krishnan said...

தொர இங்கிலீசு படமெல்லாம் பாக்குது :(

நேரம் கிடைச்சா பாத்துடலாம் ஒரு கை இந்தப் படத்தையும்

Ungalranga said...

@cheena,

???.முழுசா படிச்சுட்டு சொல்லுங்க..ஈஸியா புரியும்

Ungalranga said...

@முரளிக்குமார்,

நன்றி முரளி.

படம் நிச்சயம் கொஞ்சம் மண்டைவலி தான் இருந்தாலும்..கதை புரிய ஆரம்பிச்சுட்டா அதுக்கப்புறம்..அடிக்கடி பார்க்க சொல்லும்..!!

மின்னுது மின்னல் said...

டவுன்லோடு பண்ணி ஒரு வாரமா தூங்கிகிட்டு இருக்கு..!

இப்ப கதை புரிஞ்சிடுச்சி.:)
ஊருக்கு போயி தான் பார்க்கனும் :)

வால்பையன் said...

அடடே!
நல்ல படமா இருக்கும் போலயே!
பார்த்துட வேண்டியது தான்!

மங்களூர் சிவா said...

பதிவு போட்டுட்டு மொக்கை மெயில்ல லிங்க் குடுக்காம விட்டதுக்கு கடுமையான கண்டனங்கள்!

மங்களூர் சிவா said...

மின்னல் டவுன்லோடு பண்ணியாச்சா? அப்ப நெட்ல கிடைக்குதுபோல இறக்கிடவேண்டியதுதான்.

RAMYA said...

ரங்கா கதை அருமை. இந்தப் படம் கண்டிப்பா நான் பார்க்கணும். ஆனா இறுதியில் அவரின் முடிவு மனதிற்கு மிகவும் வேதனையை கொடுத்தது.

RAMYA said...

இந்த படம் நெட்லே இருந்து டவுன்லோட் பண்ண லிங்க் வேணும் ரங்கா அனுப்பி வையுங்க:)

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.