வரேன் சார்...!!
ஆங்..வாங்க..!!
பணத்தை கட்டிவிட்டு நடந்தார் ராம்சுந்தர்.
இவ்வளவு பெரிய பெயர்பெற்ற பள்ளியில் தன் பிள்ளையும் படிக்கிறான் என்கிற நிறைவோடு.
இவர் மகன் கோபால்.இதே பள்ளியில் பளஸ் ஒன் படிக்கிறான்.
பள்ளி கேட் வழியே மாணவிகள் வந்த வண்ணம் இருக்க..
அந்த பக்கம் நின்றிருந்த சில மாணவர்கள் “ஃபிகர்..ஃபிகர் “என்று பேசிகொண்டு இருப்பதை கவனித்தார்.
அவர்களை கண்டிப்பதற்காக அருகில் சென்ற அவருக்கு இன்னும் ஒரு அதிர்ச்சி.
அந்த கூட்டத்தில் அவன் மகனும் இருந்தான். கடும் கோபம் .
அவர் மகனை வெளியே இழுத்து வந்து கன்னங்களில் அறை விட்டார்.
அரண்டு போனான் கோபால். மற்ற மாணவர்கள் ஓடி வந்து அவரை தடுத்தனர்.
“சார் ஏன் சார் கோபாலை அடிக்கறீங்க..என்ன தப்பு பண்ணிட்டான் ?” என்றான் ஒரு மாணவன்.
“ஏண்டா..படிக்க பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினா..போற வர பொண்ணுங்களை ஃபிகர்னு சொல்லி கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்களா?..
இதுல எப்படிடா நீயும் சேர்ந்த..”என்று கோபாலை முறைத்தார்.
“சார் ..இங்க பாருங்க..”
என்று தன் க்ராப் நோட்டை காட்டினான் ஒரு மாணவன்.
”இதுல ஒரு சில படங்கள், அதாவது..ஃபிகர்ஸ் சரியா வரலைன்னு பேசிகிட்டு இருந்தோம்..
நீங்க தப்பா புரிஞ்சிகிட்டு அவனை அடிச்சிட்டீங்க.”.என்றான் .
மகனை அடித்த வேதனையும்..அவனை பொது இடத்தில் அவமானபடுத்தியதையும் நினைத்து வருந்தியபடி கிளம்பினார் ராம்சுந்தர்.
குறள் : எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு.
5 comments:
திருக்குறள் கதைகள் எல்லோரும் எழுதணும்னு
கேட்டு பதிவு போட்டு 1 மாதத்துக்கும் மேல ஆச்சு.
ஒருத்தர் கூட முன் வரலையேன்னு இருந்தேன்.
நன்றி ரங்கா
நல்ல கதை ரங்கா :) நன்றி
கதை தான் கதையே தான்...
அட.. குறள இப்டி கூட புரிய வைக்கலாமா என்ன.
நல்லாருக்கு.
நல்லாருக்கு ரங்கா
நல்வாழ்த்துகள்
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.