Tuesday, December 8, 2009

இல்லாத பொழுதுகளில்..

உன்னோடு கதைக்காத காரணத்தால்
வீட்டில் போன் பில்
மிகவும் குறைந்து போனது

இப்போதெல்லாம் மாதம்
நான்கு முறை மட்டுமே
வண்டி பெட்ரோல் நிரம்புகிறது..

இப்போதெல்லாம் இரவில்
சரியான நேரத்தில்
தூங்க முடிகிறது..

ஆபிஸில் நல்ல பெயர்
அற்புதமாக உழைக்கிறேனாம்..
நெஞ்சம் ஆனந்தமாய் உணர்ந்தது..

இப்போதெல்லாம் எனக்கு
சலனமின்று தெளிவாக
தெரிகின்றது மனது..

வீட்டில் கூட பாராட்டுக்கள்..
ஆனாலும் அம்மாவுக்கு தெரியும்
ஏன் இவை எல்லாம் என்று..

இவை எல்லாம் துவங்கியது
நீ மறக்க சொல்லிவிட்டுபோன
அந்த வருடத்தின் போது..

என்றாலும் நெஞ்சோரமாய் வலிக்கிறது..
இதை சொல்லி பெருமைப்பட
நீ இல்லாத போது..!!

10 comments:

ராமலக்ஷ்மி said...

நன்றாக இருக்கிறது ரங்கன்.

Ungalranga said...

@ராமலக்ஷ்மி ,

நன்றி மா..!!

cheena (சீனா) said...

அன்பின் ரங்கா

நல்லாத்தாண்டா இருக்கு - அவ இல்லைன்னா இவ்ளோ நன்மைகளா - சரி சரி - அப்புறம் என்னத்துக்கு ஒரு சின்ன வலி - கடசில

ம்ம்ம்ம் நல்வாழ்த்துகள் ரங்கா

pudugaithendral said...

கவிதை எழுத ஆரம்பிச்சாச்சா??

குட் குட் எனக்கு உங்க ஹைக்கூ கவிதைகள் ரொம்ப பிடிக்கும். அதுவும் அடிக்கடி எழுதணும்.

வாழ்த்துக்கள்

ஜோசப் பால்ராஜ் said...

உனக்கே இம்புட்டு நல்லது நடக்குதுன்னா, விட்டுட்டுப் போன அந்தப் பொண்ணுக்கு எம்புட்டு நல்லது நடந்துருக்கும்?

இந்த காதல் தோல்வி கவிஞனுங்க தொல்ல தாங்க முடியலப்பா .

அன்பேசிவம் said...

jovai naan valimolikiren, :-)
rangaa adichu vilaiyadunga.....

Ungalranga said...

@cheena,

@நன்றி நன்றி சீனா.

Ungalranga said...

@புதுகை தென்றல்,

கவிதைங்கிற பேரில் கிறுக்க ஆரம்பிச்சு பல மாசம் ஆச்சு..

ஓ..ஹைக்கூ ரசிகையா நீங்க..எழுதிட்டா போச்சு..!!

Ungalranga said...

@ஜோசப் பால்ராஜ்,

உண்மைதான் ஜோ.
இருந்தாலும் காதல் என்பது எப்போதும் உள்ள இருந்தே இருக்குதே.!!

என்ன செய்ய..!!

க.பாலாசி said...

//இவை எல்லாம் துவங்கியது
நீ மறக்க சொல்லிவிட்டுபோன
அந்த வருடத்தின் போது..//

எத்தனை வருடம் ஆயிற்று...எப்படியோ...வாழ்த்துக்கள்...இன்னொன்றையும் பிக்அப் செய்யுங்கள்...தாடியுடன் ரங்கனை சந்திக்க ஆசை...

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.