பங்கு :
மிச்சம் மீதி இருந்தா போடு தாயி
என்றுகூவிய பிச்சைகாரனை பார்த்து
கோபம் வந்தது எனக்கு,
அவள் கணவனின் உணவில் பங்கு கேட்கிறானே
என்று..!!
ஆத்திரம் :
எங்கதான்யா போச்சு?
ச்சை..ஒரே எளவா போச்சு..
வசைபாடி தீர்த்தார் அந்த உபன்யாசர்,
தன் தலையில் ஏற்றி வைத்த மூக்குகண்ணாடியை மறந்து.
வன்முறை :
அத்தனை அடியிலும்
அமைதியாய் சிரித்தாள்,
பேரக்குழந்தைகளின் பாசத்தில்!!
வலை :
மீன் வலையில் சிக்கி பார்த்திருப்போம்,
நானோ மீன் கண்கள் போட்ட வலையில்!!
கவித..கவித..!!
என்னால் எப்படி முடியும்?
ஒரு கவிதையிடமே கவிதைபாடி காட்ட?
இலவசம் :
இவர்கள் மட்டுமே விற்பதில்லை
கொடுக்கிறார்கள்,
மழலைகளின் புன்னகை!!
12 comments:
superb....
ரைட்டு..
அத்தனையும் அருமை...
மழலைகளின் புன்னகைக்கு... ஈடில்லை
@Mohamad Faaique,
நன்றி நண்பரே!!
@Cable Shankar,
வெல்கம் ஷங்கர் ஸார்..!!
இன்றைய கணவர்களின் நிலை பரிதாபமாகத்தான்
இருக்கின்றது.
புன்னகை இலவசம் சொல்றீங்க பார்த்து அரசியல்வாதிங்க எடுத்துக்கிறப்போறாங்க!!!!
கவிதைகள் அருமை. வாழ்த்துக்கள்.
க.பார்த்திபன்
சிங்கப்பூர்.
@வெரும்பய,
உண்மை பாஸ்!! மழலைகள் சிரிப்பிற்கு விலையேது..!!
நன்றி தங்கள் வருகைக்கு!!
@க.பார்த்திபன்,
ஒத்துகிட்டீங்க தைரியமா..!! இந்த ”தில்”லை பாராட்டுறேன்..!!
அரசியல்வாதிகள் எடுத்துகொள்ளாதது அது ஒன்றுதான்..!!
:)
வருகைக்கு நன்றி பார்த்திபன் சார்!!
கவித..கவித..!!
அத்தனையும் அருமை...
நல்லாருக்கு ரங்கா
பிச்சைக் காரன் - கணவன் - ம்ம்ம்ம்ம்
நல்வாழ்த்துகள் ரங்கா
நட்புடன் சீனா
அன்பின் ரங்கா - அனைத்து குறுங்கவிதைகளும் அருமை - பங்கு, ஆத்திரம், வன்முறை, வலை, கவித கவித, இலவசம் - அத்தனை தலைப்புகளும் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.