Monday, September 27, 2010

ஹையா ஜாலி!! நான் சுயநலவாதி!!

இதுக்கெல்லாமா சந்தோஷப்படுவாங்க.
ஏங்க..ஏன் சந்தோஷப்படகூடாது..?

இன்னைக்குதான் சுயநலம் என்பது எவ்வளவு அழகானதுன்னு புரிஞ்சிகிட்டேன்.


இது ரொம்ப முக்கியமான விஷயம். பல சந்தர்பங்களில் நாம் பொதுநலவாதிகளா மாறி நமக்கு நாமே ஆப்புவைத்துகொண்ட
நிகழ்வுகள் எல்லார் வாழ்விலும்  நடந்திருக்கும். அப்படிப்பட்ட நிலைமைக்கு காரணம் இந்த "பொதுநலம்" என்கிற எண்ணம்.

முதலில் பொதுநலம் என்பது என்ன? நாலு பேருக்கு கொடுப்பது.. நாலு பேருக்கு நன்மை செய்வது. இப்படி நாலு நாலு பேருக்கா
தினமும் நன்மை செஞ்சிகிட்டு  இருந்தா .நாலு பேரு நம்மை... நாலு நாள் கழிச்சு.. நாலு தெரு தள்ளி இருக்குற இடுகாட்டுக்கு தூக்கிட்டு
போகவேண்டியதுதான்.

  ஏன் இப்படி சொல்கிறேன்?

காரணம் நம்மிடம் இருப்பதில் பங்களித்து கொடுப்பதுதான் பொதுநலமாகமே தவிர.. நம்மையே கொடுத்துவிடுவது பொதுநலமில்லை.
அப்படி கொடுத்தவர்களும் உண்டு. அவர்கள் அன்பில் நிறைந்துவழிந்தவர்கள், அப்படிப்பட்ட நிறைவு, நம்மிடம் இருக்குமேயானால்
கொடுப்பதில் தவறேதும் இல்லை.

இங்கு நாமே "அய்யா சாமி"என்று அலையும்போது நம் வாசலில் எவனாவது கடன்கேட்டு வந்தால், கண்டிப்பாக உதையை தவிர வேறெதுவும் கொடுக்க
வேண்டியதில்லை. நம்மிடமே இல்லாத போது கர்ணபிரபுவாக மாறுவது முட்டாள்தனம். நம்மிடம் அதிகமாக இருக்கும்போது கஞ்சப்பிரபுவாக
மாறுவது அதைவிட முட்டாள்தனம். நாம் இவைகள் இரண்டையுமே இப்போதைய காலத்தில் சிறப்பாக செய்து வருகிறோம்.
நம் வறுமையை போக்கிகொள்ள வக்கில்லாமல் இருந்தாலும், பிறருக்காக, பொதுநலனுக்காக செய்கிறேன் பேர்வழி என்று எத்தனையோ பேர்
குடும்பத்தை கவிழ்த்திருக்கிறார்கள்.

இயற்கையில் தனக்காக வாழத்தெரியாத ஒரு பைத்தியக்காரத்தனமான உயிரனம் மனிதாக மட்டுமே இருக்க முடியும். மரங்களை எடுத்துகொள்ளுங்கள்.
அவைகள் சுயநலமானவைதான். அவைகள் நன்கு வளரும்வரை வேர்களை பரப்பி நீரை தேடுகின்றன. இலைகளில் சூரியவெப்பத்தை சேர்த்து உணவு
சமைக்கின்றன. இப்படி ஒரு பெரும் சுயநலப் போராட்டத்திற்கு பின்பே..அவைகள் பூக்கின்றன, காய்க்கின்றன, கனிகள் தருகின்றன. காரணம், அவைகள்
நிறைந்துவிட்டன. நிறைவடைந்துவிட்டன. இனிமேல் அவைகள் பொதுநலவாதிகள் ஆகலாம். அவைகள் தன்னளவில் நிறையாவிட்டால் காயுமில்லை,
கனியுமில்லை. இப்படிமொத்த இயற்கையும் சுயநலம் என்பதை சரியாக பயன்படுத்திகொள்கிறது.
இவ்வளவு சுயநலமான இயற்கையை நம்மால் ரசிக்கமுடிகிறது. நம் அருகில் இருக்கும் ஒரே ஒரு சுயநலவாதியை நம்மால் சகித்துகொள்ள முடிவதில்லை.

அப்போ எப்பவுமே சுயநலமா இருக்கணுமா?
எப்போதும் சுயநலமாய் இரு என்று சொல்லவரவில்லை. நீங்க நிறைவடையாமல், நீங்கள் முழுமையடையாமல் பிறரை முழுமைப்படுத்த முடியாது.
நீங்கள் எப்போது முழுமையடைகிறீர்களோ அப்போதே அது பொதுநலமாக மாறிவிடும். அது உங்களை மீறி நடந்துவிடும். பொதுநலம் ஒரு மகிழ்ச்சிதரும்.
நிறைவடையாமல் இப்போது நாம் செய்யும் எந்த பொதுநல சேவையும் மகிழ்ச்சிதராது. நம்மை நாமே ஏமாற்றிகொள்வது அது. நீங்கள் வாழ்வை முழுமையாக வாழுங்கள்.
முழுமை கிடைத்ததும், பிறரை கவனிக்கலாம். :)

புதிதாய் திருமணமான தம்பதிகளுக்கு முக்கியமாய் நான் சொல்வதும் இதுதான். அவளை நீயும், அவனை நீயும் புரிந்துகொள்ளுங்கள். புரிதலில் முழுமை வந்ததும்
பிறப்பதே பிள்ளையாக இருக்கும்.!!, மற்றவை.....  ( இது ஒரு பேச்சுலரின் அட்வைஸ். :))) )

14 comments:

suneel krishnan said...

நேரதுக்கேத்த மாறி முடிவு எடுத்தால் பிரச்சனை இல்லை . நான் ஒரு பொது நல வாதி என்று மத்தவங்க நம்பனும் அப்டின்னு நமக்கு ஒத்து வராத விஷயங்கள விட இந்த நிலைப்பாடு மேல் தான் .நாம முக்கியமான நேரங்களில் இம்மாதிரி பிம்பங்களில் சிக்கி நோ சொல்ல முடியாம மாட்டிக்கிறோம் .

Anonymous said...

//பல சந்தர்பங்களில் நாம் பொதுநலவாதிகளா மாறி நமக்கு நாமே ஆப்புவைத்துகொண்ட
நிகழ்வுகள் எல்லார் வாழ்விலும் நடந்திருக்கும்.//

correct

//இன்னைக்குதான் சுயநலம் என்பது எவ்வளவு அழகானதுன்னு புரிஞ்சிகிட்டேன்.//

எனக்கு இன்னும் அறிவு வரலியே

//இப்படி நாலு நாலு பேருக்கா
தினமும் நன்மை செஞ்சிகிட்டு இருந்தா .நாலு பேரு நம்மை... நாலு நாள் கழிச்சு.. நாலு தெரு தள்ளி இருக்குற இடுகாட்டுக்கு தூக்கிட்டு போகவேண்டியதுதான்.//

தப்பு. பிணத்தை தூக்கக்கூட நாலு பேர் வரமாட்டாங்க. அனாதைப்பிணமாகத்தான் போகணும்.

//நம்மிடமே இல்லாத போது கர்ணபிரபுவாக மாறுவது முட்டாள்தனம்.//

எனக்கு அந்த அவார்டு கொடுத்து காரித்துப்புங்களேன்.

//நம் வறுமையை போக்கிகொள்ள வக்கில்லாமல் இருந்தாலும், பிறருக்காக, பொதுநலனுக்காக செய்கிறேன் பேர்வழி என்று எத்தனையோ பேர் குடும்பத்தை கவிழ்த்திருக்கிறார்கள்//

அந்த லிஸ்ட்லே நான் ஆல்ரெடி சேர்ந்தாச்சுன்னு நினைக்கிறேன்.

//நீங்க நிறைவடையாமல், நீங்கள் முழுமையடையாமல் பிறரை முழுமைப்படுத்த முடியாது.
நீங்கள் எப்போது முழுமையடைகிறீர்களோ அப்போதே அது பொதுநலமாக மாறிவிடும். அது உங்களை மீறி நடந்துவிடும்.//

ஆஹா. கீதையில் கூட கிடைக்காத தத்துவம்.

//நீங்கள் வாழ்வை முழுமையாக வாழுங்கள்.
முழுமை கிடைத்ததும், பிறரை கவனிக்கலாம். :)//

என் அறிவுக்கண்ணை திறந்த நண்பரே. நீங்கள் மகிழ்ச்சியாக வாழுங்கள்.

துளசி கோபால் said...

நமக்கு 'இமேஜ்' ரொம்ப முக்கியம் பாருங்க. அதான்.... இப்படியெல்லாம் மனுசன் நினைச்சு.....

என்னவோ போங்க.

ஆனா சொல்ல வேண்டிய நேரத்தில் சரியாச் சொல்லி இருக்கீங்க.

இனிய பாராட்டுகள்.

ஆனந்தி.. said...

படிக்க சுவாரஸ்யமா இருந்தது..

மருது said...

/////////எப்போதும் சுயநலமாய் இரு என்று சொல்லவரவில்லை. நீங்க நிறைவடையாமல், நீங்கள் முழுமையடையாமல் பிறரை முழுமைப்படுத்த முடியாது. ////////////////////////

நண்பர் திரு.ரங்கன் அவர்களுக்கு வணக்கம். கட்டுரையைப் படித்தேன். உங்களது கட்டுரையின் மொத்த சாராம்சமாக மேலே அடைப்புக்குள் இருக்கிற வரியை எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

சரி .. ’நாம் முழுமையடையாமல்’ என்ற உங்களது வாதத்தில் முழுமை என்பது எதைக் குறிக்கிறது ?..
இந்த முழுமையடைதல் என்பது எந்த ஒரு தனி மனிதனுக்கும் ஒரு போதும் ஏற்பட்டதில்லை. மனித மனம் முழுமை என்பதை தன்னை விட மேலாக இருப்பவனைப் பார்த்து தான் முடிவு செய்யுமே தவிர தனக்கு கீழாக இருப்பவனைப் பார்த்து அல்ல. ஆக உங்கள் கூற்றுப் படி அனைத்து மக்களும் இருந்தால் அனைவரும் தமது ஆயுள் முடியும் வரை சுயநலவாதியாக இருந்து மடிய வேண்டியது தான்.
பொதுநலம் என்பது பிறருக்கு கொடுப்பது மட்டும் அல்ல நமக்கும் பிறருக்கும் தேவையானவற்றைப் பெற ஒருங்கே நின்று போராடுவது. அக்காலத்தில் பெரியார் போன்ற மக்கள் தலைவர்கள் சுயநலம் காத்திருந்தால் இன்று கல்வி நிலையத்தில் நீங்கள் கல்வி கற்றிருக்க முடியுமா என்று தெரியவில்லை (நீங்கள் பி.சி. ,எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினராக இருந்தால்) ?..

பகத்சிங் போன்றோர் அவ்வாறு சுயநலமாக இருந்திருந்தால் இந்திய சுதந்திர வரலாறு எவ்வளவு கேவலமாக இருந்திருக்கும் ?..

எனது எண்ணப்படி நீங்கள் நண்பர்களின் அல்லது உங்கள் உறவினர்களின் கஸ்ட்டகாலத்தில் பணம் தந்து பின்னர் அவர்களால் ஏமாற்றப் பட்டிருக்கலாம். அதனால் இவ்வாறு வெறுத்துப் போய் கூறியிருக்கலாம்.

ஆனால் உண்மையான மகிழ்ச்சியும் முழுமையும் மக்கள் பணியாற்றுவதில் (பகுதி நேரமாவது) தான் கிடைக்குமே (இங்கே மக்கள் பணி என்பது ஆசிரமங்களுக்கு சென்று தானம் செய்தலைக் குறிப்பிடவில்லை) ஒழிய சுயநலத்தில் அல்ல .

புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்

-மருது

Anonymous said...

தகவல் அனுபவத்தில் வந்ததா? ரங்கா நிறைய விஷயம் சரியா சொல்லியிருக்க..ஆனால் ஏதோ ஒரு தேடலுக்கு விடை தெரியாத மாதிரி இருக்கு...எனக்கும் சில தெளிவு கிடைத்தது..

Ungalranga said...

dr. Suneel Krishnan,

ம்ம்..நீங்கள் சொல்வது உண்மைதான். பலரின் அனுபவமும் இப்படித்தான் இருக்கு. பலரின் அறிவும் இப்படி மழுங்கித்தான் இருக்கு..

வருகைக்கு நன்றி,
வாழ்த்துக்கள்

Ungalranga said...

@suthanthira-ilavasa-menporul.com,

இவ்ளோ பெரிய கமெண்டா..ஹாஹாஹா!!

வருகைக்கு நன்றி..!!

Ungalranga said...

@துளசி கோபால்,

உங்க கமெண்டை பார்த்ததிலேயே மகிழ்ச்சி!!

மிக்க நன்றி!!

மீண்டும் வருக!!

Ungalranga said...

@ஆனந்தி,

வருகைக்கு நன்றிம்மா!!

Ungalranga said...

@மருது,

தெளிவுப்படுத்தியமைக்கு நன்றி..!!

இதை பற்றி முழுதாய் பேசும் அளவுக்கு என் உடல்நிலை இல்லாத காரணத்தால்,

இப்போதைக்கு வருகைக்கு நன்றி! :)

Radhakrishnan said...

:) சுயநலமில்லாமல் எந்த உயிரும் வாழ்தல் கடினம். சரிதான்.

Ungalranga said...

@தமிழரசி,

ஹாய்மா!! நீங்க சொல்வது உண்மைதான்.
நான் இன்னும் தேடிகிட்டு தான் இருக்கேன்.

pudugaithendral said...

பட்டதுக்கு அப்புறம்தான் புத்திவரும். :)) அருமையான பதிவு ரங்கா

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.