Thursday, September 24, 2009

யோசித்தேன்.. எழுதிவிட்டேன்..இந்த பதிவில் ஹைக்கூ!!-2

அதிர்ஷடம்

ஒற்றை நாணயம்
தவறி விழுந்தது
பிச்சை பாத்திரத்தில்.

சோகம்

நான் குடை கொடுத்தும்
அழுகிறாள்,
மழை.


நட்சத்திரம்

அவள் வந்து கோலமிட
காத்திருக்கிறதோ,
இந்த வானத்து புள்ளிகள்.


காதல் கயிறு

காசிக்கயிறை பார்க்கிறாள்
அவளின் தாலிக்கயிறை கட்ட
மறுத்த காதலனின் நினைவாக..!!


நினைவு சின்னம்

உன்னை மறந்துவிட சொல்லி
நீ எழுதிய கடிதம்
என்னிடம் ஞாபகமாய் இன்றும்.


மணல் வீடு

கடல் கொண்டு செல்லும்
என்றாலும் நிமிர்ந்தே நிற்கிறது ,
மணல் வீடு.

நிர்வாணம்

ஆடையின்றி நின்றும்
அசிங்கமாய் இல்லை
குழந்தை!!

17 comments:

Sara said...

நச்..... 'நினைவுச்சின்னம்' ரொம்ப அருமை!
வாழ்த்துக்கள்

Joe said...

Nice collection of haiku poems!

Rock on!

நாணல் said...

சோகம், நினைவு சின்னம் - nalla irukku..

ராமலக்ஷ்மி said...

//நான் குடை கொடுத்தும்
அழுகிறாள்,
மழை.//

ரொம்பப் பிடித்தது.

மற்றதும் அருமை!

Anonymous said...

சின்ன சிறகுகள் சுற்றிய வண்ண உலகம்

Ungalranga said...

@ash,

நன்றி .. மீண்டும் வருக..!!

Ungalranga said...

@Joe,

Thanks A lot..!!

Keep Coming..!!

Ungalranga said...

@நாணல்,

நன்றி நாணல்.. மீண்டும் வருக!!

Ungalranga said...

@ராமலக்ஷ்மி,

நன்றி ..உங்கள் ரசனைக்கு..!!

Ungalranga said...

@தமிழரசி,

அம்ஸ்.. நான் கவிதை எழுதினா அதற்கு பதிலாய் நீ கமெண்டிலேயே கவிதை போடுறியா?

ஐ லைக் இட்!!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

கவிதை அழகாகவும் இருக்கு, ஆழமாகவும் இருக்கு. வாழ்த்துக்கள் ரங்கா.

*இயற்கை ராஜி* said...

nice:-)

ப்ரியமுடன் வசந்த் said...

//ஆடையின்றி நின்றும்
அசிங்கமாய் இல்லை
குழந்தை!!//

கலக்கல் ஃபெர்ஃபார்மன்ஸ்

cheena (சீனா) said...

அடடா - குறும்பாக்கள் அத்தனையும் அருமை ரங்கா

நல்வாழ்த்துகள் ரங்கா

மங்களூர் சிவா said...

பதிவு சூப்பர்!

pudugaithendral said...

பதிவு சூப்பர்! //

கன்னாபின்னா ரிப்பீட்டுக்களுடன் தசரா நல் வாழ்த்துக்களும்

Iyappan Krishnan said...

எங்கையோ ஹைக்கூன்னாங்களேன்னு ஓடிவந்தேன் :)

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.