Wednesday, December 9, 2009

யோசித்தேன்..எழுதிவிட்டேன்..இந்த பதிவில் ஹைக்கூ-3

பேருந்து

http://varnajaalam.files.wordpress.com/2007/07/patient_bus.jpg

இறங்கிய போதுதான்
நினைவுக்கு வந்தது
டிக்கெட் எடுக்காதது..!!
*********************************************
சத்தம்

http://www.indolinks.com/websights/diwali/crackers1.jpg

அந்த பட்டாசு சத்தங்களூடே
மறைந்து போனது
ஏழை சிறுவனின் விசும்பல்.!!
*********************************************

குடிநீர்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs137ZygRRf4ILwcQMUu3odywCl4M0D4NuwR5DXqaIBGwepqx45anp6TffibseAPv3Y6OkHdY8tJeKJBxgrTWdmN86iRblzInSFlBAELKfdl0p4ROfHDinetcznI-KK0QbNPpYUUSJqFw/s320/Chennai_water.jpg

காசு கேட்டு அடிவிழுந்தது
தண்ணியடிக்க..
காசு கொடுத்து தண்ணீர் வாங்கினாள்
சோறு சமைக்க..
*********************************************

பணம்

http://www.zananas-martinique.com/_images/immigration-indienne/jamaica-banana-coolies.jpg

வேர்த்த வேர்வையும்
விட்ட கண்ணீரும்
பணமாய் இன்று,
கந்துகாரன் கைகளில்!!
*********************************************

கண்டுபிடிப்பு

http://www.northcoastjournal.com/media/issues/062509/06-25-09-NCJ-Water-on-Moon.jpg

நிலவில் கண்டுபிடித்தது
தண்ணீரில்லை
தோற்ற காதலர்களின் கடைசி
கண்ணீர்..!!
*********************************************

தாய்பால்

http://www.stockphotopro.com/photo-thumbs-2/AWT2TY.jpg

பிள்ளைக்கு
அவள் ரத்தம் பாலானது
ரத்தவங்கி தந்த பணத்தில்..!!
*********************************************

மகிழ்ச்சி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjc9rcu85ZiEZRYir6Nb5sN98YP16aVrDluqYAtr_RUvAl_wd6PflLcAPg5mj7arazBPkDlX1Lb8p4Go28TROGYzQgfevo6D-05gtyIfhBMhifuCWpMfVCCwkLK8Ycpojvm2JbpiOBH_eE/s220/jaipurfoot-zambia1.jpg

அகமகிழ்ந்தாள் அம்மா..
பிள்ளை அழகாய் நடக்கிறான்,
...
செயற்கை கால்களை கொண்டு.
*********************************************

முத்துசரம்


http://www.thepearloutlet.com/buypearls_images/South_Sea_pearl_necklace.jpg
அவர் அணிவித்த சரம்
மகள் கழுத்தில் இன்று
அன்பு சீதனமாய்..!!
*********************************************

தமிழரசி

http://4.bp.blogspot.com/_QyOswGA6pnY/Stqv6Twyn_I/AAAAAAAAAzk/HR6Fx2IU4eY/S220/DETA-127.jpg

பிறந்து பெற்றெடுத்தேன்
பெற்றடுக்காத இந்த தாயை!!

14 comments:

ராமலக்ஷ்மி said...

சிலது வலி.
சிலது சிலிர்ப்பு.
கடைசி நெகிழ்வு.

மொத்தத்தில் அருமை. தொடருங்கள் ரங்கன்.

அன்பேசிவம் said...

நல்லா இருக்கு ரங்கா......
:-)

தாய்ப்பால், பற்றிய கூ அருமை
அவள் என்ன மாற்றாந்தாயா? ஏன் தாய்ப்பால் கொடுக்கவில்லை.
இல்லை ரத்தம் வித்த காசில் சாப்பிட்டு, அதனால் பால் கொடுக்கிறாளா? புரியலையே

வால்பையன் said...

//பிறந்து பெற்றெடுத்தேன்
பெற்றடுக்காத இந்த தாயை!!//

அடடே
ஆச்சர்யகுறி!

pudugaithendral said...

ரசித்தேன், ரசித்தேன், ரசித்தேன்

cheena (சீனா) said...

ஹாய் ரங்கா

நல்லாவே எழுதறீயே

தொடர்ந்து எழுது

நல்வாழ்த்துகள்

RAMYA said...

//
வேர்த்த வேர்வையும்
விட்ட கண்ணீரும்
பணமாய் இன்று,
கந்துகாரன் கைகளில்!!
//

சரியா சொல்லி இருக்கீங்க!

அந்த வியர்வையின் கஷ்டம் கந்து வட்டிகாரனுக்கு எங்கே தெரியப் போகுது :(

RAMYA said...

//
அகமகிழ்ந்தாள் அம்மா..
பிள்ளை அழகாய் நடக்கிறான்,
...
செயற்கை கால்களை கொண்டு.
//

அவனுக்கு மனது முழுக்க வேதனை:(

ஆனால் அன்னைக்கோ வேதனை கலந்த மகிழ்ச்சி :)

சரிதானே நான் சொல்லறது?

RAMYA said...

//
அவர் அணிவித்த சரம்
மகள் கழுத்தில் இன்று
அன்பு சீதனமாய்..!!
//

அருமை அருமை முத்துச் சரத்திற்குதான் எவ்வளவு மகிமை!

RAMYA said...

//
பிறந்து பெற்றெடுத்தேன்
பெற்றடுக்காத இந்த தாயை!!
//

இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்!

RAMYA said...

வாழ்த்துக்கள் ரங்கா அருமையா எழுதி இருக்கீங்க!

Anonymous said...

வார்த்தையில் கோர்த்த முத்துச்சரம் அழகோ அழகு கடைசி கவிதை கண்ணீர் முத்தை சிந்த வைத்ததடா மகனே....இதை கோர்க்காதே தெரித்தோடட்டும் நம் அன்பைப் போல..

நினைவுகளுடன் -நிகே- said...

அத்தனை கவியும் அழகு
குறிப்பாய் தாய்பால் பற்றிய கவி அற்புதம்

விக்னேஷ்வரி said...

தாய்ப்பால், மகிழ்ச்சி - ரெண்டும் ரொம்ப அழகு.

cheena (சீனா) said...

அன்பின் ரங்கா - அனைத்துமே அருமை - சத்தம், பேருந்து, பணம், கண்டுபிடிப்பு, குடிப்பு, தாய்ப்பால், மகிழ்ச்சி, முத்துச்சரம், தமிழரசி அனைத்துத் தலைப்புகளுமே குறுங்கவிதைகளின் கருத்துகளைப் பிரதிபலிக்கின்றன. - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.