Saturday, December 26, 2009

பொம்மை கதை

http://www.carwale.com/images/RoadTests/ChevroletSpark%5CChevrolet%20Spark%20Front%20Dynamic.jpg


என்னங்க..நிஜமாத்தான் சொல்றீங்களா?
லோன் சேங்ஷன் ஆகிடுச்சா?
ஓ..காட்..என்னால நினைச்சுகூட பார்க்க
முடியல..

எப்போ பணம் வருமாம்..?
......
மனைவியின் துள்ளலில் எனக்கு எரிச்சலாய் இருந்தாலும்..
குடும்ப கவுரவம் என்பதற்காக இதை செய்யவேண்டியதாய் போனது.
அதுதான் கார் வாங்குவது.

சுசிக்கு ஏனோ..எதிர்வீட்டுகாரர் காரின் மீது அப்படி ஒரு கண்.
அதே போல நிறம் மட்டும் வேறு நிறத்தில் ஒரு கார் வாங்கியே ஆக வேண்டும்
என்று என்னை நச்சரிக்க ஆரம்பித்தாள்.

இது சகஜம் என்றுதான் இருந்தேன்..ஆனால் என்னையும் குழந்தைகளையும்
பட்டினி போடும் அளவுக்கு அவளுக்கு வெறியேறிவிட்டது.

நண்பனிடம் சொன்னேன்.
போனா போகுது..வாங்கிடேன் என்று தனக்கு தெரிந்த
கார் டீலரை அணுக சொன்னான்.

இப்போது பேங்கில் லோன் போட்டு, பணம் வர இருக்கிறது.
......
ஏங்க..உங்களைத்தான் கேக்குறேன்..எப்போ பணம் வருமாம்?

இன்னும் ரெண்டு நாளில் வந்துடும் சுசி.

..ஓ..நல்லது..அதுக்குள்ள நாம என்ன கார் வாங்குறதுன்னு முடிவு பண்ணிடலாம்..

ம்ம்..சரி..

வார்த்தைகள் முடிப்பதற்குள் வந்து விழுந்தது முத்தம்.


10 நாட்கள் கழித்து..

நன்றி சார்..வரோம்..
தன் புதிய செவ்ரோலெட் ஸ்பார்க்கில் ஏறி அமர்ந்தபோது..
சங்கர் மகிழத்தான் செய்தான்.

சுசிக்கும், குமார்,அனு மூவருக்கும் இருப்பு கொள்ளவில்லை..
வேகம் எடுத்தால் அலறுகிறார்கள்..மிதுவாய் சென்றால் சினுங்கினார்கள்..

இந்தா..நீயாச்சு காராச்சு..என்று சுசி கையில் காரை கொடுத்துவிட்டால் என்ன என்றுகூட
இருந்தது..

ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தோம்.

மாலை கோவிலுக்கு சென்று திரும்பி வந்தோம்.

மகள் அனு அழும் சத்தம் கேட்டது..
”என்னடா ஆச்சு..”என்று எழுந்து ஓடினேன்.

”ம்ம்..வேணும்..அதுதான் வேணும்..” என்று சுசியுடன் சண்டையிட்டு கொண்டிருந்தாள் அனு.

”ஹேய்..அனு என்ன இது அடம் பிடிச்சிகிட்டு..என்ன வேணும் உனக்கு இப்போ? ”

எங்க க்ளாஸ் பொண்ணு ஒருத்தி ஒரு கார் பொம்மை வெச்சிருக்கா..

அதே மாதிரி எனக்கும் வேணும்பா..வாங்கி தர சொல்லுங்கப்பா..

கெஞ்சினாள் அனு.

”சுசி..பொம்மைதானே..வாங்கிகுடு
த்திருக்கலாம்ல..”என்றேன் மனைவியிடம்.

”ஏங்க..நீங்களும் புரியாம பேசுறீங்க..அது விலை 1200 ரூபாய்.

அதில்லாம அதே கலர்ல இருக்க கூடாதாம் வேற கலர்-ல வேணுமாம்.

இந்த வயசில இப்படி அடம்பிடிச்சா எதிர்காலத்துல ரொம்ப சிரமப்படுவா..!!

நீங்கதான் கண்டிக்கறதே இல்லை..அதான் நான் கண்டிச்சேன்.” என்றாள்..

உண்மைதான்..நான் அவளை மட்டுமல்ல..உன்னையும் கண்டிக்க தவறி இருக்கிறேன்.

அன்று இரவு டைரியில் எழுதினேன்:

வாழ்க்கை என்பது எப்போதும் பொம்மை விளையாட்டுதான்.
சிறு வயதில் பொம்மைகள் நம் கைக்குள் அடங்கி இருந்தது.
பெரியவர் ஆனதும் அவை நம்மை கைக்குள் அடக்கிவிடுகிறது.
சில பொம்மைகள் உயிரற்றவை என் புதிய காரை போல,
சில பொம்மைகள் உயிருள்ளவை..
என் சுசியை போல!!!

21 comments:

Iyappan Krishnan said...

நல்ல கதை.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

இராகவன் நைஜிரியா said...

நல்ல கருத்து... குழந்தைகள் வேண்டும் என்று கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்க முடியாது... எது தேவையோ அதைத்தான் வாங்கிக் கொடுக்கணும். கண்டிப்பு தேவையான இடத்தில் அவசியம் கண்டிக்கணும்..

சிம்பிளி சூப்பர்ப் கதை.

ஜோசப் பால்ராஜ் said...

super machi.
nachunnu sollirukka.

Saree is like Noolu
Baby is like Mummy laa.

Ungalranga said...

@ஜீவ்ஸ்,

கரெக்ட் ஜீவ்ஸ்..!!

வாழ்த்துக்கு நன்றிண்ணா..!!

☀நான் ஆதவன்☀ said...

அருமையான கதை ரங்கன். கதையோட கரு ரொம்ப நல்லா இருக்கு. கீப் இட் அப் :)

Ungalranga said...

@ஜோசப் பால்ராஜ்,

வாங்க லா..!! நீங்க சொன்னா கரெக்ட் தான் லா..!!

புத்தாண்டு வாழ்த்துக்கள் லா..!!

Ungalranga said...

@ராகவன்,

பாராட்டுக்கு நன்றி ராகவன்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

cheena (சீனா) said...

ஹாய் ரங்கா

நல்லாவெ இருக்கு - அறிவுரை - கதையும் கூட சூப்பரு

நல்வாழ்த்துகள் ரங்கா

Ungalranga said...

@ஆதவன்,

கண்டிப்பா கீப்பிக்கிறேன்..

புத்தாண்டு வாழ்த்துக்கள் ஆதவன்.

Ungalranga said...

@சீனா,

வாழ்த்துக்கு நன்றி..உங்களுக்கு பிடிச்சிருந்தா சரி.!!

புத்தாண்டு வாழ்த்துக்கள் சீன்ஸ்..!!

பாலகுமார் said...

கதை ரொம்ப நல்லா இருக்கு..

சுசி said...

எளிமையா கதை சொல்ற விதம் நல்லாருக்கு. கதையும் நல்லாருக்கு.

அனுஷ்கா பிடிக்குமோ???

கனிமொழி said...

நல்லா இருக்கு ரங்கா...
கதையும், நடையும்...

Ungalranga said...

@பாலகுமார்,

வாழ்த்துக்கு நன்றி பாலகுமார்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

Ungalranga said...

@சுசி,

அடடா, எதிர்பாராத விதமாய் உங்கள் பெயரை..கதையில்..ஹாஹஹஹ..!!

அனுக்‌ஷாவை அப்போ பிடித்தது..இப்பொ..ரொம்ப பிடிக்கிறது..கிகிகி..

புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

thiyaa said...

அருமையான இடுகை வாழ்த்துகள்

Anonymous said...

பொம்மை என்ற பேரில் ஒரு உயிரோட்டமான கருத்தில் கதை சொல்லியிருக்க ரங்கா .....கடைசி பத்தி அருமை...பாராட்டுக்கள் செல்லம் லேட் கமெண்டுக்கு மன்னிக்கவும்

Ungalranga said...

@தமிழரசி,

நன்றிம்மா..எப்பவோ உன்கிட்ட பேசின விஷயம்தான் இந்த கதையின் கரு.

பொறுமையா கமெண்ட் போட்டு இருக்க..அவ்ளோதான்..இதுக்கு எதுக்கு மன்னிப்பு எல்லாம்?

வினோத் கெளதம் said...

அழகான கருத்தை வலியுறுத்தும் கதை..

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தல..:)

வினோத் கெளதம் said...

அழகான கருத்தை வலியுறுத்தும் கதை..

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தல..:)

*இயற்கை ராஜி* said...

நல்லா இருக்கு கதை:-)

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.