சரி.. வீடியோ பாத்தாச்சா... இப்போ மேட்டருக்கு வருவோம்..1. முதல் சங்கடம் நிச்சயமாக திருப்பி தருவார் என்ற மூடநம்பிக்கையுடனோ, திரும்ப வாங்கி தரவே மாட்டார் என்ற நம்பிக்கையுடனோ தான் பேனாவை கொடுக்க நேரும். இரண்டுமே கொடுப்பவருக்கு நன்மை பயக்கக் கூடியதல்ல.2. இரண்டாம் சங்கடம் பேனாவை இரவல் கொடுத்த ஓரிரு நாட்களில் அந்தப் பேனாவை ஏதாவது குறிப்புக்காகவோ, தகவலுக்காகவோ தேட நேர்கிறது.3.மூன்றாம் சங்கடம் ‘இதோ இரண்டொரு நிமிஷத்தில் எழுதி விடுவேன். குடுங்க. எழுதிட்டு மேக்ஸிமம் ஒரே நிமிஷத்தில் குடுத்துடுவேன்’ – இது இரவல் வாங்கும் எல்லாரும் சொல்லும் வாசகம். ஆனால் கவிஞர். வாலியின் டெம்ப்ளேட் வரிகளைப் போல, இரவல் வாங்குபவர்களுக்கு எப்போதுமே மாதங்கள் வாரங்களாக, யுகங்கள் கணங்களாகத்தான் இருக்கின்றன.4. நான்காம் சங்கடம் இரவல் வாங்கியவர் பெயர் மிஸ்டர்.குப்பன் என்று வைத்துக் கொண்டால், வாங்கிய ஓரிரு வாரங்களுக்குத்தான் அவர் மிஸ்டர்.குப்பன் ஆக இருக்கிறார். அதற்குப் பிறகு அவர் ‘என்கிட்ட அந்த நீலக்கலர்ல எழுதுறப் பேனாவை வாங்கீட்டு போனவர்’ என்றும், இன்னும் கொஞ்ச நாளில் ‘பேனாவை வாங்கீட்டு திருப்பியே தராதவர்’ என்றும்தான் அவர் பற்றிய பிம்பம் மனதில் படிகிறது.5. ஐந்தாம் சங்கடம் நாம் இரவல் கொடுத்த பேனாவை நம்மிடம் இரவல் வாங்கியவரிடம், இன்னொருவர் இரவல் கேட்கும்போது ‘நம்மளே இரவல் வாங்கினதாச்சே.. குடுக்கலாமா வேண்டாமா’ என்ற குழப்பத்திற்கு ஆளாக்குகிறோம். அல்லது அவர்கள் இரவல் குடுத்தால் ‘இரவல் வாங்கியதை இரவல் கொடுத்த’ பாவத்திற்கு அவரை ஆளாக்குகிறோம்.6. ஆறாம் சங்கடம் வாங்கிய பேனாவை வைத்து ஏதாவது பூச்சிகளை குத்துவது, காது குடைவது போன்றவற்றை செய்யும் சுதந்திரம் இல்லாமல் வாங்கியவரை தவிக்க வைக்கிறோம். அல்லது அப்படி அவர் செய்தால் ‘இப்படிப் பட்டவருக்குக் கொடுத்தோமே’ என்ற தவிப்புக்கு நம்மை ஆளாக்கிக் கொள்கிறோம்.7. ஏழாம் சங்கடம் உண்மையாகவே அந்தப் பேனாவை வாங்கியவர் தொலைத்து விட்டால், அவர் அப்படிச் சொல்லும்போது அதை நம்ப முடியாமல் அவரைப் பற்றி நாம் தவறாகப் புரிந்து கொள்ள நேர்கிறது. உண்மையாகவே தொலைக்காமல் அவர் அப்படிச் சொல்வதானால்... (மீண்டும் 6வது சங்கடத்தின் கடைசி வரிகளைப் படிக்க....)8. எட்டாம் சங்கடம் இரவல் குடுத்த பேனா திரும்ப வராத சோகத்தில் நாமிருக்கும்போது, வேறொரு நண்பர் இரவல் கேட்க, சூடு கண்ட பூனையாய் அவருக்கு நாம் இரவல் கொடுக்க மறுக்க, அவர் நம்மைத் தவறாகப் புரிந்து கொள்ள ஏதுவாகிறது.9. ஒன்பதாம் சங்கடம் நண்பனுக்குப் பணம் கொடுத்தால் நட்பு, பணம் இரண்டையும் இழக்க நேரும் என்று பெர்னாட்ஷா சொன்னது போல,(அனுபவசாலி!!!) நண்பனுக்குப் பேனா கொடுத்தால் அந்தப் பேனா, அதற்கான பணம், நட்பு மூன்றையுமே நாம் இழக்க நேர்கிறது.10. பத்தாம் சங்கடம் பேனாவை இரவல் வாங்கினால் உடனே திருப்பித்தர வேண்டும் என்ற நினைப்பு வருவதில்லை. அதே காசு கொடுத்து வாங்கியிருந்தாலாவது, அதன் மதிப்புணர்ந்து நிச்சயமாகத் திருப்பித் தருவார்கள்... (அல்லது அப்படி நாம் நினைத்துக் கொள்கிறோம்!)11. பதினோறாம் சங்கடம் நல்ல பேனா என்பதால்தான் பகிர்ந்து கொள்கிறோம். அந்த நல்ல பேனாவை இரவலாகக் கொடுப்பதால் அவர் பேனா வாங்கும் மனப்பான்மையினை தடுத்து பல பேனா கம்பெனிகளுக்கு அவரால் வரும் லாபத்தினை இழக்க செய்கிறோம். (டிஸ்கி) :- இந்தப் பதிவில் வரும் எதுவும் யாரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ (உள்குத்தோ) குறிப்பிடுவதல்ல என இதன்மூலம் உறுதியளிக்கிறேன்!!!
23 comments:
??????????????
இந்த பதிவை படித்தலிருந்து எனக்கு ஏண்டா இதை படிச்சோம்னு சங்கடமாவே இருக்கு !! :(
சாதாரண பேனாவுக்கு இவ்வளவு சங்கடம் வரும்னா.. எனக்கு இனி பேனாவே வேண்டாம்
ஐயையோ.. .என்னை யாராவது காப்பாத்துங்களேன்.............
ஜூப்பருங்க...
ஆறாவது பாயிண்டை தவிர மற்ற அனைத்தும் அப்படியே இருக்கு தலைவா!
சரி என்ன செய்ய எல்லோருடய எதிர்பதிவும் அப்படி தானே இருக்கு!
//கவிதா | Kavitha said...
சாதாரண பேனாவுக்கு இவ்வளவு சங்கடம் வரும்னா.. எனக்கு இனி பேனாவே வேண்டாம்//
வேணாம்னு சொல்லிட்டு அப்புறம் என்கிட்ட இரவல் கேக்கக்கூடாது..
சொல்லிட்டேன்.
// பரிசல்காரன் said...
ஐயையோ.. .என்னை யாராவது காப்பாத்துங்களேன்.............//
தோ வந்துட்டேன்...!!!
:-)))...
சரி சரி - ரங்கா - எனக்கு உன் பேனா இரவல் வேண்டுமே - ஒரே ஒரு கையெழுத்துப் போட்டுட்டு ஒரு வருசத்துக்குள்ளே திருப்பிக் கொடுத்துடறேன், சரியா
//சரி சரி - ரங்கா - எனக்கு உன் பேனா இரவல் வேண்டுமே - ஒரே ஒரு கையெழுத்துப் போட்டுட்டு ஒரு வருசத்துக்குள்ளே திருப்பிக் கொடுத்துடறேன், சரியா
//
சீனா சார்,
இதுக்கு நேரா எனக்கு பேனா வாங்கி குடுடா அம்பின்னு கேட்டா வாங்கி தந்துட்டு போறேன்..
ஹிஹி...
கிகிகிகி நீங்க பரிசல் அண்ணாவை தானே கிண்டலடிக்கிறிங்க :P
//கிகிகிகி நீங்க பரிசல் அண்ணாவை தானே கிண்டலடிக்கிறிங்க :P //
நோ..நோ..அவரை "வாழ்த்தி"தான் இந்த பதிவு.
Super... super... super.. :)))
//Super... super... super.. :)))//
நன்றி... நன்றி... நன்றி.. :)))
பேனாவை இனி பயன்படுத்தும் எண்ணமே விட்டுப்போச்சிங்க...
//அன்புமணி சொன்னது..
பேனாவை இனி பயன்படுத்தும் எண்ணமே விட்டுப்போச்சிங்க...//
நோ.. நோ.. அப்படியெல்லாம் மனச தளரவிடக்கூடாது.. ஹாஹாஹா...
நண்பரே,
வடமொழியில் ஒரு பழமொழி உண்டு!
'புஸ்தகம் நாரீ பர ஹஸ்தம் கதம் கதம்!' புத்தகமும் பெண்ணும் அந்நியர் கைகளில் (போனால்) கதை முடிந்தது! (பெண்ணியவாதிகள் மன்னிக்கவும்! எந்தக் காலத்திலோ எழுதப்பட்ட பழமொழி இது!)
பேனாவையும் இந்த லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்!
நன்றி!
சினிமா விரும்பி
//Cinema Virumbi சொன்னது...
பேனாவையும் இந்த லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்!//
ஆமாம்.. கண்டிப்பா சேக்கணும்.. எந்த ஒரு புத்தகம் உருவாகவும் பேனாதானே(எழுதுகோல்) காரணம்.
வருகைக்கு நன்றி.. சினிமா விரும்பி
இஃகி !! இஃகி !! நம்ம கடைக்கும் ஒரு நடை வாங்க... அங்க ஒரு எதிர்பதிவு .... இஃகி !!
//Mahesh சொன்னது...
இஃகி !! இஃகி !! நம்ம கடைக்கும் ஒரு நடை வாங்க... அங்க ஒரு எதிர்பதிவு .... இஃகி !! //
தோ வந்துட்டே இருக்கேன்..
அருமையா கோர்த்து இருக்கீங்க...
//நையாண்டி நைனா சொன்னது…
அருமையா கோர்த்து இருக்கீங்க...//
இல்லயே.. டைப் தானே பண்ணி இருக்கேன்..
வருகைக்கு நன்றி..
ரங்கன்
test
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.