அவளின் வளையல்களின் அசைவாய்
காற்றில் மெல்லிய சங்கீதம்..
அவளின் கண்ணசைவின் கிறக்கங்களாய்
பூக்களின் மெல்லிய கவர்ச்சிகள்..
அவளின் மெல்லிய பேச்சுக்களாய்
வண்டுகளின்.. ர்ர்ர்ரிங்ங்ங்ங்காரம்..
அவளின் மேனியின் நறுமணமாய்
மயக்கும் ரோஜாக்களின் வாசம்..
காலால் மிதிக்க மனம் வராத
காதலியின் கன்னம்போன்று புற்கள்...
அவளின் மெல்லிய நடை போல்
சின்ன மானின் அழகிய நடை..
கொஞ்சவந்தால் ஓடுகிறது அவளை போல்
இந்த பல வர்ண பட்டாம்பூச்சி..
அவளின் நீல சுடிதாரின் நிறம் போல்
வானிலும் அதே நீல நிறம்..
இப்படி அத்தனையும் அவளை பற்றிய
அழகினை சொல்லிக் கொண்டிருக்க..
அவள் மட்டும் இன்னும் வராமல்
காத்திருக்க செய்கிறாள் கள்ளி.
இப்படிக்கு-
பார்க் பெஞ்சில் காதலிக்காக காத்திருந்தவன்.
பாட்டு பாஸ்கி : என்னடா..மச்சி.... பதிவு எழுத எதும் மேட்டர் கிடைக்கலியா...?என்கிட்ட கேட்டா நிறைய சொல்லி இருப்பேன்ல.... சரி வுடு.. கவித(ஜ) நல்லாதான் இருக்கு... ஆனா கும்மி உறுதி.. சொல்லிட்டேன்..
18 comments:
மீ 1 :-)
மீ த செகண்டு.. :)
காத்திருந்தது அண்ணா பூங்காவா மாப்பி?
//ஆனா கும்மி உறுதி.. சொல்லிட்டேன்..//
வழிமொழிகிறேன்!
//
பார்க் பெஞ்சில் காதலிக்காக காத்திருந்தவன்.//
அடிங்கொய்யால.. என்னோட காதலிக்காக நீ ஏன்யா பார்க்ல காத்திருக்க!
அம்மா தாயே சீக்கிரமா வந்திருமா. இல்லன்ன ரங்கா இன்னொன்னு எழுதிருவான்.
ஓசை அசைவு வாசம் பேச்சு நறுமணம் நடை உடை வண்ணம் எண்ணம் இப்படி அனைத்திலும் அவளைக் கண்டு அவளுக்கென காத்து இருப்பதோ உன் மனம்....கள்ளி அவளோ வரரமல் போனதை காட்டுகிறது அவள் கல்மனம்.......கவிதயில் நல்ல நறுமணம்...மேலும் வீசட்டும் வாசம் ......
மச்சான் அவ எவன்கூட பிசியோ வேற எதாச்சும் ஒன்னு பிக்கப் பண்ற வழிய பாரு
அன்புடன்
மங்களூரான்
சொம்மா ஜோக்கு கோச்சுக்கப்படாது
பார்க்லயும் பெஞ்ச்சாடே லே ஆப் ஆகிறப்போற சீக்கிரம் எதும் ப்ராஜக்ட்ல கமிட் ஆகீரு!
:)))))))))))))
//தமிழரசி said...
ஓசை அசைவு வாசம் பேச்சு நறுமணம் நடை உடை வண்ணம் எண்ணம் இப்படி அனைத்திலும் அவளைக் கண்டு அவளுக்கென காத்து இருப்பதோ உன் மனம்....கள்ளி அவளோ வரரமல் போனதை காட்டுகிறது அவள் கல்மனம்.......கவிதயில் நல்ல நறுமணம்...மேலும் வீசட்டும் வாசம் ......
//
என்னக் கொடும ரங்கா இது :-)
நான் ஒரு வோட்டு போட்டுட்டேன்ப்பா
ஏன் ரெங்கா, ஏதோ கவுஜ எழுதியிருக்கேன் வாங்கடான்னு கூப்புட்ட இங்க வந்தா ஒன்னியும் காணோம்?
ஆனா ஒன்னு மாப்பி, நீ ஏதோ பொண்ணுக்காக பார்க்ல உக்கார்ந்துஇருந்ததப்ப எழுதுனதுன்னு எழுதியிருந்த உரைநடை நல்லா இருந்துச்சு மாப்பி.
ரெங்கா ஒன்னு சொல்றேன் கேட்டுக்க,
நீ இப்டியே பொண்ணுக்காக பார்க பெஞ்ச்ல காத்திருந்தா ஒன்னியும் சாதிக்க முடியாது.
நீ சாதிச்சுட்டன்னா, பொண்ணுங்க எல்லாம் லைன் கட்டி உனக்காக காத்திருக்கும்.
நீ உக்கார்துருந்தது ஒரு ஓட்ட பெஞ்சுல.
இங்க பதிவுல படம் மட்டும் ஃபாரின் பார்க் பெஞ்சா?
//காத்திருக்க செய்கிறாள் கள்ளி.//
கள்ளி முள்ளாய் குத்துகிறதோ காத்திருப்பு..?( யார்ரா இது எம்பாட்ட்டுக்கு எச பாட்டு பாடரதுன்னு நீங்க கேட்க மாட்டீங்கதானே..?
நாமக்கல் சிபி said...
காத்திருந்தது அண்ணா பூங்காவா மாப்பி?
ஆமாங்க..ஆமாம்..!!
//சென்ஷி said...
//
பார்க் பெஞ்சில் காதலிக்காக காத்திருந்தவன்.//
அடிங்கொய்யால.. என்னோட காதலிக்காக நீ ஏன்யா பார்க்ல காத்திருக்க!//
அடிங்க...
உங்களுக்கு லவ் பண்ண என் ஆளுதான் கிடைச்சாளா?
பிச்சு புடுவேன்..பிச்சு...:)))
எப்பா நீ கவுத(ஜ) கூட எழுதுவியா ... சரி சரி - காதலிக்காகக் காட்த்திருந்தவனெல்லாம் இப்படித்தான் எழுதறாணுங்க- இருந்தாலும் நல்லா இருந்திச்சி - அவளையே நெனிச்சி உருகாதே - பாத்துக்கப்பா
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.