Thursday, April 9, 2009

பட்டாம்பூச்சி சொல்லிதந்தது..!! பாகம்-1.
பட்டாம்பூச்சி.. சொல்லும்போதே அதனுடைய வர்ணஜாலங்கள், பறக்கும் அழகு, அதன் மெல்லிய சிறகுகள் இப்படி பல விஷயங்கள் மனதில் வந்து குவிகிறது.


அப்படி குவியும் விஷயங்களில் சேராத இன்னொரு விஷயம் அதன்
உருமாற்றம். ஒரு சாதாரணமான கையில் தொடவே கூச்சப்படும் புழுவாய் தான் பிறக்கிறது அந்த பட்டாம்பூச்சி. சில வாரங்களுக்கு பிறகு
அது தன்னுடைய இயல்பை அறிந்து தன்னை உறுமாற்றம் செய்ய தயாராகிகொள்கிறது. பிறகு மேலும் சில வாரங்களுக்கு தான் கட்டிய கூட்டிற்குள்ளே தானே அமர்ந்து தவம் செய்கிறது.இது நம்மை போல பணம் கொடு, நிலம் கொடு என்பதற்காக தவமல்ல. இயற்கையிடம் தன்னை முழுமையாக சமர்பித்துக்கொள்ள வேண்டிய தவம் இது. இந்த வாழ்க்கை எனும் பிரபஞ்ச சக்கரத்தில் தன்னையும் சேர்த்துக்கொள்ள வேண்டி செய்கிறது தவம்.
கேட்டதை கேட்டபடி அள்ளி தரவல்லது தானே இயற்கை.அது கேட்டதோ வாழ்க்கை சக்கரத்தில் தனக்கும் ஒரு பாகம். ஆனால் இயற்கை அதனை ஆசிர்வதித்து அதன் அழகை கூட்ட சிறகுகள் தந்து தன் மடியில் அதனை ஏந்தி கொள்கிறது. இப்போது நீங்கள் தொட தயங்கிய புழுதான் இந்த பட்டாம்பூச்சி. இப்போது அதை புழு என்று பட்டாம்பூச்சியை பார்த்து சொன்னால் என்னை முட்டாள் என்பீர்கள். அத்தனை அகழகோடு மறுபிறவி எடுத்து நம்முன் தன் அழகை காட்டி மயக்குகிறது நம் கண்களை.சரி அதான் உருவம் மாறியாயிற்று. கேட்டது கிடைத்துவிட்டது.அப்புறமும் ஏன் நான் இயற்கையோடு இயைந்து இருக்க வேண்டும் என்று எந்த பட்டாம்பூச்சியும் கேள்வி கேட்டதில்லை.
அப்படி கேட்காததாலோ என்னவோ பல்லாயிரம் ஆண்டுகளாகியும் அவைகள் தங்கள் உண்மை அழகோடு ஜொலிக்கின்றன. தங்களின் இனம் பல்கி பெறுகியும் கிளை இனங்களோடும் மகிழ்ந்து திரிகின்றன இந்த பூமியில்.

அவை இன்றும் பிரபஞ்சத்தின் ஒரு முக்கிய அழகான பக்கமாய் திகழ்வதன் காரணம். அவை இயற்கையை ஏற்றுகொண்டது.

நாம். வெறும் ஒரு குரோமோசோம் சேர்ந்து உறுமாற்றம் பெற்றதற்கே
இயற்கை எதிர்த்து போரிடுகிறோம். அவைகள் சிறகுகள் பெற்றாலும்
இயற்கைக்கு என்றும் எதிர்த்து போராடியதில்லை. நமக்கும் சிறகுகள் முளைத்திருந்தால் பக்கத்து நாட்டின் மீது பறந்து பறந்து தாக்கி இருப்போமோ என்னவோ.?!.

ஒரு சின்ன உயிரனத்திற்கு கூட தெரிக்கிறது இயற்கை எதிர்ப்பு என்பது தாயின் கருப்பையை சிதைக்க துடிப்பது போன்று என்று. நாம் அதை உணராது போனது எப்படியோ தெரியவில்லை. இத்தனைக்கும் நமக்கு ஆறறிவு வேறு.நீங்களே சொல்லுங்கள் எந்த பட்டாம்பூச்சியாவது தன் இனத்தை சேர்ந்த இன்னொரு பட்டாம்பூச்சியை கொன்று பார்த்திருக்கிறீர்களா..?

இந்த பட்டாம்பூச்சிகள் எப்போதாவது எதிர் நாட்டின் மீது குண்டு வீசியுள்ளதா?
இந்த பட்டாம்பூச்சிகள் என்றாவது தங்கள் ஆரோக்கியம் கெடும் என தெரிந்தும் உணவை உட்கொண்டு நீங்கள் பார்த்ததுண்டா?

புவிக்கு வெப்பமேற்றி அதன் நிலை தடுமாற வைத்ததுண்டா?

சிந்தியுங்கள்.. சீர்திருத்தி கொள்ளுங்கள்.
என்றாவது ஒரு நாள் அவைகள் பொறாமை படுமளவு நாம் அழகாகி காட்டுவோம்.

சொல்லமுடியாது இயற்கையை ஏற்று நடப்பதால் உங்களுக்கும் சிறகுகள் கிடைக்கலாம்.

29 comments:

தமிழ் பிரியன் said...

அழகு!சூப்பர்!

VIKNESHWARAN said...

அழகான படங்கள்....

படங்களை மட்டும் பார்த்து பின்னூட்டமிடும்,
விக்கி.

ரங்கன் said...

//தமிழ் பிரியன் சொன்னது…

அழகு!சூப்பர்!//

நன்றி தமிழ்ப்ரியன்.

நாமக்கல் சிபி said...

அருமை!

பிரேம்குமார் said...

அழகான படங்கள். அருமையான கட்டுரை. வாழ்த்துகள்

சென்ஷி said...

சூப்பர்

ரங்கன் said...

@விக்கி.. ஏன்.. இப்படியெல்லாம்?

தமிழ் பிரியன் said...

///வந்தது வந்துட்டீங்க.. வாழ்த்திட்டு போங்க.
அது என் வளர்ச்சிக்கு உதவும்.///
வாழ்த்து! இப்ப 5 அடியில் இருந்து 5 அடி நாலு அங்குலமா மாறிடுவீங்களா?

ரங்கன் said...

//தமிழ் பிரியன் சொன்னது…

///வந்தது வந்துட்டீங்க.. வாழ்த்திட்டு போங்க.
அது என் வளர்ச்சிக்கு உதவும்.///
வாழ்த்து! இப்ப 5 அடியில் இருந்து 5 அடி நாலு அங்குலமா மாறிடுவீங்களா?//

வாழ்த்தாம போனீங்கனா.. தினம் 4 அங்குலம் குறைஞ்சிக்கிட்டே போவீங்க.. பரவால்லியா?

ரங்கன் said...

//நாமக்கல் சிபி சொன்னது…

அருமை!//

அது இருக்கட்டும். ஏன் பல வரில கமெண்ட் போட்டா.
பொடாவில் பிடிச்சுட்டா போய்டுவாங்க?

பரிசல்காரன் said...

வாழ்த்துகள்!

பரிசல்காரன் said...

//வந்தது வந்துட்டீங்க.. வாழ்த்திட்டு போங்க.
அது என் வளர்ச்சிக்கு உதவும்.//

இதுக்குதான் அது!

பரிசல்காரன் said...

மூணு கமெண்ட் போட்டா எதுவும் டிஸ்கவுண்ட் உண்டா?

ரங்கன் said...

//பரிசல்காரன் சொன்னது…

வாழ்த்துகள்!//

வாங்க பரிசல்!! வாழ்த்துக்கு நன்றி.

பரிசல்காரன் said...

//பாகம் 1//

இத கவனிக்கல நான்.

பரிசல்காரன் said...

சீரியஸ் பின்னூட்டம்:

நல்ல தொகுப்பு ரங்கா.. பாகம் 1ன்னு எதுக்கு போட்டிருக்கீங்க.. எப்படித் தொடறப் போறீங்கன்னு தெரியல. ஆனா இதே மாதிரி இயற்கைகிட்டேர்ந்து/ஐந்தறிவு ஜீவராசிகள்கிட்டேர்ந்து நாம கத்துக்கவேண்டியதைத் தொகுத்தா நல்லா வரும்.

வாழ்த்துகள்! (இது சீரியஸ்)

ரங்கன் said...

@ பரிசல்,

பாத்துட்டீங்களா.. !! மகிழ்ச்சி.

ரங்கன் said...

//பரிசல்காரன் சொன்னது…

சீரியஸ் பின்னூட்டம்:

நல்ல தொகுப்பு ரங்கா.. பாகம் 1ன்னு எதுக்கு போட்டிருக்கீங்க.. எப்படித் தொடறப் போறீங்கன்னு தெரியல. ஆனா இதே மாதிரி இயற்கைகிட்டேர்ந்து/ஐந்தறிவு ஜீவராசிகள்கிட்டேர்ந்து நாம கத்துக்கவேண்டியதைத் தொகுத்தா நல்லா வரும்.

வாழ்த்துகள்! (இது சீரியஸ்)//

கண்டிப்பாக..அப்படி எழுதுவதற்கான முன்னோட்டம் தான் இது.
கருத்துக்கு நன்றி.

குசும்பன் said...

//சிந்தியுங்கள்.. சீர்திருத்தி கொள்ளுங்கள்.
என்றாவது ஒரு நாள் அவைகள் பொறாமை படுமளவு நாம் அழகாகி காட்டுவோம்.//

இதுக்கு மேலும் நான் அழகானா நாடு தாங்காதுய்யா ரங்கா!

குசும்பன் said...

//இந்த பட்டாம்பூச்சிகள் என்றாவது தங்கள் ஆரோக்கியம் கெடும் என தெரிந்தும் உணவை உட்கொண்டு நீங்கள் பார்த்ததுண்டா?//


இந்த கேள்வியை தலை சிபிக்கு டெடிக்கேட் செய்கிறேன்:)

ரங்கன் said...

//குசும்பன் சொன்னது…

//சிந்தியுங்கள்.. சீர்திருத்தி கொள்ளுங்கள்.
என்றாவது ஒரு நாள் அவைகள் பொறாமை படுமளவு நாம் அழகாகி காட்டுவோம்.//

இதுக்கு மேலும் நான் அழகானா நாடு தாங்காதுய்யா ரங்கா!//

கவலைப்படாதீங்க.. நாட்டை நாங்க பாத்துக்கறோம்.
நீங்க நீங்க பாட்டுக்கு அழகாகும் வழிய பாருங்க.

நன்றி குசும்பரே.!! இது தான் என் வலைப்பூவில் நீங்கள் போடும் முதல் கமெண்ட் என்று நினைக்கிறேன்.

வருகைக்கு மிக்க நன்றி.

ரங்கன் said...

//குசும்பன் சொன்னது…

//இந்த பட்டாம்பூச்சிகள் என்றாவது தங்கள் ஆரோக்கியம் கெடும் என தெரிந்தும் உணவை உட்கொண்டு நீங்கள் பார்த்ததுண்டா?//


இந்த கேள்வியை தலை சிபிக்கு டெடிக்கேட் செய்கிறேன்:)//


நானும் ரிப்பீட்டிக்கிறேன். :))

குசும்பன் said...

//புவிக்கு வெப்பமேற்றி அதன் நிலை தடுமாற வைத்ததுண்டா?//

யோவ் ரங்கா சும்மா என்னவேண்டும் கேட்கலாம் என்று கேட்காதீங்க!!! கேள்வி கேட்பது ஈஸி பதில் சொல்லுவது ரொம்ப கஷ்டம்:)))

சீனா said...

அன்பின் ரங்கா

இயற்கையை நாம் ரசிக்க / மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு எதிராக நடக்கக் கூடாது. நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம் இருக்கிறது.

Suresh said...

vikatan good blogs la unga pathivu vanthu iruku romba alaga iruku .. i am following ur blog as follower from now on

பட்டாம்பூச்சி said...

எவ்வளவு பெரிய மனசுயா உமக்கு!!!
என்னை பத்தி இப்படி எல்லாம் எழுதி இருக்கீங்க...படிச்சிட்டு அப்படியே ஆனந்த கண்ணீர்ல முழுகிட்டேன் போங்க....மேட்டூர் டேம் நிரப்ப போக வேண்டியதுதான் போல :)...எனக்கே தெரியாம எவ்வளவு அழகா படம் புடிச்சிட்டீங்க என்னை சுபேரா இருக்குங்க்னா.....அட்ரா சக்கை அட்ரா சக்கை......

ரங்கன் said...

@பட்டாம்பூச்சி,
உங்களை உங்களுக்கு தெரியாமல் சூட்டிங் பண்ணதுக்கு மன்னிக்கவும்.
அது போல..வெயில் காலத்துக்கு உங்க அழுகாச்சி கண்டிப்பா தேவைப்படும்.. சீக்கிரம் மேட்டூர் வாங்க..!!!

அளவில்லா தாகத்தோடு
ரங்கன்

Anonymous said...

பட்டாம்பூச்சியை வைத்து ஒரு பகுத்தறிவு சொற்பொழிவு கேட்ட நிறைவு ஒரு ஒவிய கண்காட்சி கண்ட குளிர்வு...உங்கள் எண்ணங்கள் கூட வண்ணங்களே.....

ரங்கன் said...

@நன்றி தமிழரசி!

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.