Tuesday, April 7, 2009

ரங்காவிண்ட சமையல் கட்டு.. வாழைப்பழ பேஸ்டு செய்வது எப்படி?

வணக்கம் மக்கள்ஸ்!!

இன்னிக்கு நாம பாக்க போற டிஷ் பேரு... வாழைப்பழ பேஸ்ட்.

என்ன பேர கேட்டதுக்கே அதிருதா.. அதான் ரங்கன்.

நாங்க எப்பவும் டிஃபரண்டாதான் யோசிப்போம்.ஹிஹி..

சரி.. இப்போ மேட்டருக்கு வருவொம்.

தேவையான பொருட்கள்
1. பழுக்காத வாழைப்பழம்-2
2. பழைய டூத்பேஸ்ட் டியூப்
3. கத்தி அல்லது கத்தரிகோல்
4. பெவிக்குயிக் கம்.

முதலில் நல்ல பழுக்காத வாழைப்பழமா வாங்கிகோங்க.. இல்ல வாங்கிட்டு வர சொல்லுங்க.
அது நல்லா பழுக்காம திக்கா இருக்கனும். அடுத்து இப்போ கத்தி.. வைச்சு (வாயால கத்துவது இல்லை). கட் பண்ணிடுங்க.

அடுத்து அந்த பேஸ்ட் டியூப் இருக்கா.. அதை எடுங்க.. அதனுடைய வாய் பகுதிய மட்டும்..
அதாங்க பேஸ்ட் வெளியே வருமே.. அந்த பகுதி.. அதை மட்டும் கட் பண்ணி வெச்சுகங்க.

இப்போ பெவிக்குயிக் கம்மை அதில் பூசுங்க.. உடனடியா அதை வாழைப்பழத்தோட கட் பண்ண பகுதியில் ஒட்டிடுங்க.

20 நிமிடம் கழித்து உங்களுடைய வாழைப்பழ பேஸ்ட் ரெடி.

நான் செய்த வாழைப்பழ பேஸ்ட் கீழ இருக்கு.

எப்படி சூப்பரா இருக்கா..

நீங்களும் இதை முயற்சி பண்ணி பாருங்க.. உங்க கருத்தை சொல்லுங்க.


பாட்டு பாஸ்கி : மச்சி.. இன்று முதல் நீ சமையல் கட்டின் சாதனையாளன் என்று அழைக்கப்படுவாய்..

22 comments:

Jeeves said...

பரமண்டலத்தில் இருக்கும் எல்லா பரமபிதாக்களும் உம்மை மன்ன்னிப்பார்களாக!!


ஆமென்!!

சீனா said...

அய்யொ ரங்கா - அருமையான கண்டு பிடிப்பு - பதிவு பண்ணிடு உடனே - தேசத்தின் உயரிய விருதினிற்கு பரிந்துரைக்கிறேன்

ஆயில்யன் said...

பரமண்டலத்தில் இருக்கும் எல்லா பரமபிதாக்களும் உம்மை மன்ன்னிப்பார்களாக!!


ஆமென்!!

Rangs said...

நம்ம பேர்ல ஒரு ஆளு கலக்கறீங்க போல இருக்குதுங்க...

நல்லா இருங்க...

-ரங்கராஜ்

VIKNESHWARAN said...

//பரமண்டலத்தில் இருக்கும் எல்லா பரமபிதாக்களும் உம்மை மன்ன்னிப்பார்களாக!!


ஆமென்!!//

ரிப்பீட்டு.... அங்ங்ங்ங்

ரங்கன் said...

//சீனா சொன்னது…

அய்யொ ரங்கா - அருமையான கண்டு பிடிப்பு - பதிவு பண்ணிடு உடனே - தேசத்தின் உயரிய விருதினிற்கு பரிந்துரைக்கிறேன்//

பத்ம பூஷ்ன் மட்டும் கொடுத்தா போதும். வேற எதும் பெருசா எதிர்பார்க்கலைங்க..

பரமண்டலத்துக்காரன் said...

மன்னிப்பா.. எதுக்கு.. ?
இதை விட நல்ல கண்டுபிடிப்பு உண்டா... ? இவருக்கு பல லட்சம் பரிசு தர இறைமை செயலகம் முடிவு செய்துள்ளது...ஆங்ங்ங்ங்...

ரங்கன் said...

//Rangs சொன்னது…

நம்ம பேர்ல ஒரு ஆளு கலக்கறீங்க போல இருக்குதுங்க...

நல்லா இருங்க...

-ரங்கராஜ்//

அலோ.. யாருப்பா அது என் பேர வச்சுகிட்டு விளையாட்டு பண்றது.

எனிவே வருகைக்கு நன்றி.. வாழ்த்துக்கள்.

கார்க்கி said...

உங்களையெல்லாம் சஞ்சய் கூட நாலு நாள் தங்க வைக்கனும்..

ரங்கன் said...

//கார்க்கி சொன்னது…

உங்களையெல்லாம் சஞ்சய் கூட நாலு நாள் தங்க வைக்கனும்..//

அய்யோ.. வேணாம்.. நான் இன்னும் சில நாள் தெளிவா வாழ ஆசைப்படுறேன்.. விட்டுடுங்க..அவ்வ்வ்வ்...

இளமாயா said...

நல்ல முயற்ச்சி.,

Anonymous said...

அடப்பாவி ரங்கா

குடுகுடுப்பை said...

//சீனா சொன்னது…

அய்யொ ரங்கா - அருமையான கண்டு பிடிப்பு - பதிவு பண்ணிடு உடனே - தேசத்தின் உயரிய விருதினிற்கு பரிந்துரைக்கிறேன்//

பத்ம பூஷ்ன் மட்டும் கொடுத்தா போதும். வேற எதும் பெருசா எதிர்பார்க்கலைங்க..///

உயரிய விருது பெற வாழ்த்துக்கள்

Deivasuganthi said...

நிஜமாவே ஏதோ சமையல்தானோன்னு தப்பா நினைச்சுட்டு வந்துட்டேன்.
கலக்குங்க

மஞ்சள் ஜட்டி said...

edu seruppa...

Anonymous said...

karunaikolainu solvangaley adhuva idhu.....

ரங்கன் said...

//இளமாயா சொன்னது…

நல்ல முயற்ச்சி.,//

ஆகா.. இதுல எதும் உள்குத்து இல்லையே...அவ்வ்வ்

ரங்கன் said...

//Deivasuganthi சொன்னது…

நிஜமாவே ஏதோ சமையல்தானோன்னு தப்பா நினைச்சுட்டு வந்துட்டேன்.
கலக்குங்க//

கலக்க எதுவும் இல்லை.. எல்லாம் கட்டிங்.. ஒட்டிங் தாங்க..

வருகைக்கு நன்றி தெய்வம்.

"டேய் பாஸ்கி பாத்தியா தெய்வமே நம்ம பதிவுல கமெண்ட் போடுது..!! "

ரங்கன் said...

.//மஞ்சள் ஜட்டி சொன்னது…

edu seruppa...
//
என்ன சைஸ் வேணும்..? செருப்ப கேட்டேன்..

பேர மாத்துபா.. சகிக்கல..மஞ்சள் குட்டி நல்லா இருக்குமே ட்ரை பண்ணி பாரு..

Anonymous said...

குருவை மிஞ்சிய சிஷ்யரு :-)

ரங்கன் said...

//பெயரில்லா சொன்னது…

குருவை மிஞ்சிய சிஷ்யரு :-)
//

என்னங்க பண்றது.. நானா பண்றேன்.. தானா வருது..
அவ்வ்வ்வ்..

ஆனா உங்க பேரு சூப்பரா கீது.
எனக்கு ஒரு காப்பி ரைட் கிடைக்குமா?

ரங்கன் said...

//தமிழரசி சொன்னது…

karunaikolainu solvangaley adhuva idhu.....//

ஓ.. அப்போ இது மொக்கை பதிவா? நான் சமையல் பதிவுன்னு தானே நினைச்சேன்.

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.