Saturday, April 11, 2009

பட்டாம்பூச்சி சொல்லிதந்தது..!! பாகம்-2.



கடந்த பாகத்தில் நம் பட்டாம்பூச்சி உலகிற்கு சொல்லிதந்தது என்னவென்று பார்த்தோம். இந்த பாகத்தில் அது ஒரு தனிமனிதனுக்கு என்ன சொல்லிதருகிறது என்று பார்ப்பொம்.

முதலில் பட்டாம்பூச்சியாக மாறியது யார்?

ஒரு சின்ன புழு.




புழு என்பதால் அது "ஆ.. நான் வெறும் புழுவாக அல்லவா இருக்கிறேன். எனக்கு இப்படி வாழ்வதே பிடிக்கவில்லை" என்று எவையும் தற்கொலை செய்துகொண்டதில்லை. அவைகளுக்குள் இருக்கும் உள்ளுணர்வு அவைகள் சிறந்த பட்டாம்பூச்சியாக மிளிரும் என்று அவைகளிடம் எப்போதும் சொல்லியபடி இருக்கின்றன.

நாம் கீழாய் மதிக்கும் புழுக்கள் கூட தற்கொலைக்கு முயல்வதில்லை.
புழுக்கள் கூட மேலாய் மதிக்கும் மனிதர்களாகிய நாம்...
எத்தனை தற்கொலை முயற்சிகள்.தான் இறந்தால் மட்டும் போதாதென்று தான் அழியும் போது மற்றவரையும் சேர்த்து அழிக்கிறோம்.
இதை பற்றி புழுக்கள் கேள்விப்பட்டால்..
"அட.. இறைவா!! இதற்கு நாங்களே பரவாயில்லை போலிருக்கிறதே" என்று சொல்லக்கூடும்.

தற்கொலை வேண்டாம். அதை இயற்கை அனுமதிப்பதில்லை. நம் உண்மையான முடிவு தானாக நிகழட்டும். நாமாக அதை தேடிப்போக வேண்டாம்.

உள்ளுணர்வு என்கிற ஒன்று நமக்கு இருக்கிறது.ஆம்.. நம்மை போன்ற ஒவ்வொரு உயிரனத்திற்கும் இருக்கிறது. அது நமக்காக மட்டும் தனியாக படைக்கப்பட்டதில்லை. எல்லா உயிரனங்களும் தங்கள் உள்ளுணர்வின் படி மட்டுமே வாழ்கின்றன.சொல்லபோனால் அவைகள் தான் ஒவ்வொரு உயிரனத்தின் டேட்டாபேஸ்.
நாம்..மனிதர்கள் மட்டுமே உள்ளுணர்வை தொலைத்துவிட்டு வாழ்கிறோம். அதன் சத்தம் எப்போதும் இருக்கிறது. நாம் காதுகளுக்கு அதை கேட்க நேரமில்லை. யாரொ சொன்ன வரிகள்தான் ஞாபகம் வருகிறது.. "காது.. அது செல்போன் அடைத்ததால் செத்துவிட்ட ஒன்று" என்று.

வாருங்கள். உங்கள் இயல்பில் சேராத வேலையினை செய்யாதீர்கள். எது உங்கள் இயல்போ அங்கே சேருங்கள். உங்கள் வாழ்க்கை வளமாகவேண்டுமெனில் உங்கள் உள்ளுணர்வின் சொல் படி நடைபோடுங்கள். உலகில் நம்மை ஏமாற்றாத ஒரே குரல்.. உள்ளுணர்வின் குரல் மட்டுமே.

அதை எப்படி கேட்பது...? உள்ளுணர்வின் சத்தம் எனக்கு கேட்கவே இல்லையே. என்கிறீர்களா..அதையும் பட்டாம்பூச்சி சொல்லிதருகிறது.
புழுவாய் இருப்பது எப்படி சிறகுகள் பெற்றது? கேட்டதும் கிடைத்துவிட்டதா ? இல்லை. தன்னை ஒரு கூட்டுக்குள் சுற்றி கொண்டது. அதற்குள் இருள்.. இருள் ..இருள் மட்டுமே. வெளியுலக சத்தங்கள் அதை தொல்லை செய்யாத வண்ணம் தன்னை கூட்டுபுழுவாக்கி கொண்டது. காத்திருந்தது, பொறுமையுடன்.



நான் உங்களை கூடு கட்டி குடிப்புக சொல்லவில்லை. உங்களுக்குள் செல்லுங்கள். "எனக்குள் இருப்பதைபோன்ற அதிசயத்தை வெளியில் நான் கண்டதில்லை" என்கிறார் ஐன்ஸ்டீன். அப்படி கண்டதால்தான் அவரை இன்னும் கொண்டாடுகிறோம்.


உங்களுக்கு நீங்களே புதிதாய் தெரிவீர்கள். அட.. இது நானா..!! என்று உண்மையான உங்களை பார்த்து உங்களுக்கே ஆச்சர்யமாய் இருக்கும்.



அப்படி உங்களை நீங்கள் கண்டறிய முதலில் தனிமையில் இருக்க பழகுங்கள். வாரத்தில் ஒரு நாள். ஒரு மணி நேரம் மட்டும். தனித்து
இருங்கள். மற்றவரை பற்றிய சிந்தனையை நிறுத்தி வைத்துவிட்டு
உங்களிடம் நீங்கள் பேசுங்கள். உங்கள் இயல்பை கண்டறியுங்கள்.

"உள்ளுணர்வின்படி வாழுங்கள்.அதுதான் உங்களின் வாழ்க்கை."

தொடரும்...

12 comments:

சென்ஷி said...

மீ த ஃபர்ஸ்ட்டேய்.........

சென்ஷி said...

//மற்றவரை பற்றிய சிந்தனையை நிறுத்தி வைத்துவிட்டு
உங்களிடம் நீங்கள் பேசுங்கள்.//

ஒரு நாள் இப்படி பேசுனதுக்கு மறுநாள்லேந்து என்னையப்பத்தி எல்லோரும் பேச ஆரம்பிச்சுட்டாங்க :))

Ungalranga said...

//சென்ஷி said...

மீ த ஃபர்ஸ்ட்டேய்.........//

வாங்க.. வாங்க..!!

Ungalranga said...

//சென்ஷி said...

//மற்றவரை பற்றிய சிந்தனையை நிறுத்தி வைத்துவிட்டு
உங்களிடம் நீங்கள் பேசுங்கள்.//

ஒரு நாள் இப்படி பேசுனதுக்கு மறுநாள்லேந்து என்னையப்பத்தி எல்லோரும் பேச ஆரம்பிச்சுட்டாங்க :))//


நான் தனியா பேச சொல்லவில்லையே. தனிமையில் தானே பேச சொல்கிறேன்.

சென்ஷி said...

//வந்தது வந்துட்டீங்க.. வாழ்த்திட்டு போங்க.
அது என் வளர்ச்சிக்கு உதவும்.//

வளர்ச்சிக்கு பின் ஊட்டம் மாத்திரம் பத்தாது தம்பி...

நிறைய்ய காம்ப்ளான் சாப்பிடு. வளர்ச்சிக்கு தேவையான 23 அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.

சென்ஷி said...

//நான் தனியா பேச சொல்லவில்லையே. தனிமையில் தானே பேச சொல்கிறேன்.//

அது எப்படி முடியும். என்னோட தனிமையில மத்தவங்க பார்க்குறத அனுமதிக்காம இருக்குறதுக்கு பின்ன எதுக்கு பேசணும்??

Ungalranga said...

@ சென்ஷி.

ஆகா..!!நான் ஆல்ரெடி,
...........ஆறு அடி.

இதுக்குமேலயும் காம்பிளான் குடிக்கணுமா..?

நாமக்கல் சிபி said...

/என்னோட தனிமையில மத்தவங்க பார்க்குறத அனுமதிக்காம இருக்குறதுக்கு பின்ன எதுக்கு பேசணும்??//

அதானே!

சென்ஷி said...

புழு ஏன் தற்கொலை செஞ்சுக்கறதில்லை தெரியுமா...
.
.
.
.
..
.
.
.
.
.
.
..

.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ரொம்ப யோசிக்காதீங்க. எனக்கும் தெரியல. தெரிஞ்சா சொல்லிட்டு போங்க..

நாமக்கல் சிபி said...

/புழு ஏன் தற்கொலை செஞ்சுக்கறதில்லை தெரியுமா.../
இது தெரியாதா சென்ஷி!

அதுக்கு படிக்கத் தெரியாது!

(படிக்கத் தெரிஞ்சா உங்கள் ரங்கா பதிவையெல்லாம் படிக்கணும்! அப்புறம் தற்கொலை செஞ்சிதான ஆகணும்)

Anonymous said...

வாழ்வியல் சொல்லவில்லை வாழச்சொல்லி தந்திருக்கிறாய்...அழகை கொண்டும் அருவெருக்க தோனும் பல மனிதர்களின் இயல்பு...கூட்டுப்புழுவின் உருவில் பல பண்பட்ட மனிதர்கள்...இரண்டையும் போட்டு குழப்பிக்கொண்டு தானும் வாழாமல் பிறரையும் வாழவிடாமல் இருக்கும் இடைனிலை மனிதர்க்கு இந்த கட்டுரை ஒரு வசந்த வாசல்.....என்னை வியக்க செய்துவிட்டாய்.....

நாமக்கல் சிபி said...

//வாழ்வியல் சொல்லவில்லை வாழச்சொல்லி தந்திருக்கிறாய்...அழகை கொண்டும் அருவெருக்க தோனும் பல மனிதர்களின் இயல்பு...கூட்டுப்புழுவின் உருவில் பல பண்பட்ட மனிதர்கள்...இரண்டையும் போட்டு குழப்பிக்கொண்டு தானும் வாழாமல் பிறரையும் வாழவிடாமல் இருக்கும் இடைனிலை மனிதர்க்கு இந்த கட்டுரை ஒரு வசந்த வாசல்.....என்னை வியக்க செய்துவிட்டாய்.....//

ஸ்ஸப்பா! இதுக்கு ரங்காவோட பதிவே பரவாயில்லை போல! இப்பவே கண்ணாடியைக் கட்டுதே!

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.