Wednesday, March 4, 2009

அனைத்து அம்மாக்களுக்கும்..

என்னை தினம் தினம் பாதிக்கிற விஷயம் இது,
சாலைவிதிகளை சரியா பின்பற்றாமல்
தினம் தினம் பலர் உயிரை விடுகின்றனர் பலர் முடமாகிறார்கள்.
இப்படி இருக்கும் காலத்தில் இன்னொரு கொடுமை நடந்துகொண்டிருக்கிறது..
அதுதான்.. குழந்தைகளுடன் சாலையில் செல்லும் தாய்மார்களின் கவனக்குறைவு.
சாலைகளின் ஓரத்தில் அம்மாக்களும்..
சாலையிலே குழந்தைகளையும் நடத்திச்செல்கிறார்கள்.


இப்படித்தான் சென்றவாரம் எங்களுடைய சிறியத் தெருவில் இப்படி சாலையில்
நடந்துகொண்டிருந்த ஒரு குழந்தை மீது ஒரு பைக்(பல்ஸர்)காரன் மோத இருந்தான்.
அவன் வண்டியில் அதிசயமாக பிரேக் வேலைச்செய்ய ..குழந்தை தப்பித்தது.
ஆனால் அந்த அம்மாவோ.. அந்த பைக்காரனுக்கு ஒரு இரண்டு நிமிடம் "அர்ச்சனை" செய்துவிட்டு
மீண்டும் அந்த குழந்தையை அதேபோல் சாலையில் நடத்திச்சென்றார்கள்..
கொடுமைங்க.. அந்த காட்சியை பார்த்து கத்தியேவிட்டேன்.. எல்லாரும் ஒருமாதிரி பார்த்தார்கள்.

ப்ளீஸ்..
தயவுசெய்து இனிமேவாச்சும் ஜாக்கிறதையா இருங்க..

7 comments:

கவிதா | Kavitha said...

Ranga

கவனகுறைவு மட்டுமே...!! அதை மட்டும் சரி செய்துக்கிட்டா போதும் !!

Ungalranga said...

//கவிதா | Kavitha said...

Ranga

கவனகுறைவு மட்டுமே...!! அதை மட்டும் சரி செய்துக்கிட்டா போதும் !!//

இனிமே சரியா நடந்துகொண்டால் மகிழ்ச்சிதான்..
நன்றி

நாமக்கல் சிபி said...

//இனிமே சரியா நடந்துகொண்டால் மகிழ்ச்சிதான்.. //

இதை நான் வழிமொழிகிறேன்!

நாமக்கல் சிபி said...

இதே டூவீலர்ல குழந்தையை நடுவுல உக்கார வெச்சிகிட்டு வராங்க! குழந்தை நல்லா தூங்கி இந்த பக்கமும் அந்த பக்கமும் சாயறதைப் பார்க்க நமக்கு பக் பக்குன்னு இருக்கும்!

கவிதா | Kavitha said...

//இதே டூவீலர்ல குழந்தையை நடுவுல உக்கார வெச்சிகிட்டு வராங்க! குழந்தை நல்லா தூங்கி இந்த பக்கமும் அந்த பக்கமும் சாயறதைப் பார்க்க நமக்கு பக் பக்குன்னு இருக்கும்!//

எனக்கே அப்படி ஒரு முறை ஆகியிருக்கு. .சைக்கிளில் பின் சீட்டில் நவீனை வைத்துக்கொண்டு நான் பாட்டுக்கும் ஓட்டிக்கொண்டு வர, அவன் தூங்கி விழுந்து இருக்கிறான் போல, பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த ஒருத்தர், என்னை அழைத்து, பின்னாடி குழந்தை தூங்குதுங்க.. நீங்க கவனிக்காம போறிங்க.. என்று சொன்னார்.

அதன் பிறகு அவனை ஒரு கையால் பின்புறமாக பிடித்தபடியே வீடு வரை வந்தேன். முன்னே அவனை அமரவைக்க வசதி இல்லை லேடிஸ் வண்டி.. :(

வல்லிசிம்ஹன் said...

வேற ஒன்றும் செய்ய வேண்டாம்.
அம்மா ரோடு சைடிலியும்,
குழந்தை ப்ளாட்ஃபார்ம் சைடிலயும் நடந்தாக்கூட பரவாயில்லை.
இவங்க இழுத்துட்டுப் போகிற வேகம்....

Unknown said...

//சாலைகளின் ஓரத்தில் அம்மாக்களும்..
சாலையிலே குழந்தைகளையும் நடத்திச்செல்கிறார்கள்.
அம்மாக்கள் மாத்திரம் இல்லைங்க அப்பாக்களும் தான். அதனால் பெற்றோர்கள் என்று சொல்லுங்கள்.
எனக்கும் பயமாகத் தான் இருக்கும். சும்மாவே ஏதாவது தொல்லை வருது... இதுல வேற வாழை இல்லை போட்டு கூப்பிடணுமா?

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.