பாஸ்கர்.
அவன் எனக்கு 2 வருடங்களுக்கு முன் பழக்கம்.நல்லவன்,என்னை பொருத்த வரை.
அவன் பார்ப்பதற்கு பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் போலவே இருப்பான்.
ஆஜானுபாகுவான தேகம்.பாசமான கண்கள். சில நேரம் அவனை பார்க்க எனக்கே பொறாமையாக இருக்கும்.
எங்கள் கல்லூரி நாட்களில் அவன் தான் மாணவிகளின் கனவு நாயகன்.
எங்களிடம் ஒரே ஒற்றுமை.. அவனை போலவே தான் என் சிந்தனையும் இருக்கும்.
இதுதான் எங்களை இணைப்பிரியா நண்பர்களாக்கியது.
அது 2006ஆம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி. மாலை நான்கு மணி. ஒரு ஃபுட் பால் என் தலையில் வந்து அடித்தது.
வலி சுரீரென்றது. வலியுடன் திரும்பி பார்த்தேன். அவன். கோபமே உருவாக நின்றிருந்தான். எனக்கு புரியவில்லை.
இவன் எதுக்கு என் மீது கோவப்பட வேண்டும். நான் அப்படி எந்த விதத்தில் இவனை புண்படுத்தினேன். யோசித்தேன்.
அப்போது வகுப்பு நண்பர்கள் அவனை நோக்கி பாய்ந்தனர். நான் தடுத்து நிறுத்தினேன். அவனை பார்த்தேன். சிரித்தான்.
அட..சிரிக்கிறானே!.. சரி..மரியாதைக்காக நானும் சிரித்தேன்.அடுத்த கணம் கன்னம் சுரீரென்றது. அறைந்தான்.
இதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. அப்படியே அவன் சட்டையை பிடித்து கீழே சாய்த்தேன். கால்களை
சரியாக இடறிவிட்டேன். கீழே விழுந்தான். தலை தரையில் பலமாகவே மோதியது. சத்தம் கேட்டதும் எனக்கு உறைத்தது.
ரத்தம் பார்க்க போகிறான் ரங்கன். அப்போது அவனை தூக்க முயன்றேன். பயனில்லை. மயங்கிவிட்டான். நண்பர்களை அழைத்தேன்.
உள்ளே கொண்டு வந்தோம். வெளியே யாரும் பார்த்ததாக தெரியவில்லை. உள்ளே சென்றேன். தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றனர்.
வேண்டாம் என்றேன்.
அனைவரும் என்னை பார்த்தனர். ஏன். அவனுக்கு தலையில் அடிப்பட்டு இருக்கிறது. முதலில் மருந்து வைத்து கட்டுவோம்.
1 நிமிடம் கூட ஆகாது என்றேன். சரி. இப்போது அவன் மயக்கத்தில் இருந்து எழுந்தான். அவனருகில் அமர்ந்திருந்தேன்.
நேராக அமர்ந்தான்.
நன்றி என்றான்.
வெல்கம் என்றேன். நீ ஓய்வு எடு. நான் வேறு மருந்துகள் வாங்கி வருகிறேன் என்றேன்.
வேண்டாம் என்றான்.
சரி வேறு என்ன வேண்டும் என்றேன்.
உன் நட்பு என்றான் தெளிவாக. நான் ஆச்சரியப்பட்டேன். அதற்கு முன் எனக்கு ஒரு விடை வேண்டும் என்றேன்.
ம்ம் சொல்லு.
எதற்கு என்னை தாக்கினாய்?.
அது நானாக செய்யவில்லை, தூண்டப்பட்டேன்.நீ நன்றாக கவிதை
எழுதுவியாமே .உன்னை ஒரு காதல் கவிதை எழுதி தர சொல்லி கேட்டதற்கு முடியாது என்று சொல்லி என் நண்பர்களை
மிகவும் திட்டினாயாமே. அதனால் வந்த கோபம் தான் .
ம்ம்.. என்னை அவர்கள் திட்டியது பற்றி அவர்கள் சொல்லி இருக்க
மாட்டார்கள். உன் தாயை திட்டினால் நீ கோபப்பட மாட்டாயா?. கொன்றுவிடுவேன்.
அதை நான் செய்துருக்க வேண்டும்.
அப்போது அங்கே ஆசிரியர் வந்துவிட்டார். தப்பித்தனர். பாவம் உன்னை தாக்கி என் கோவத்தை வடித்துகொண்டேன். மன்னித்துவிடு.
அதெல்லாம் ஒன்றுமில்லை.
இனி நான் நண்பர்கள். சரிதானே. ம்ம்..
அடுத்த சில நாட்கள். அமைதியாய் கழிந்தது. கல்லூரி நாளில் என்
கவிதை ஒன்றை அவன் மேடையில் படித்தான். எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். நானும்தான். மெல்ல மெல்ல அவனும் நானும்
நண்பர்களாய் வளர்ந்தோம். அவனின் சிந்தனை அப்படியே என்னுடையதை ஒத்து இருந்தது. படிப்பில் அவனுக்கு ஆர்வம் அதிகம். அவனின் ஆர்வம் என்னையும் பற்றிகொண்டது. மெல்ல மெல்ல
நாங்கள் நட்பின் ஆழத்தை உணர்ந்தோம். அது வெகு சீக்கிரம் முடியப்போவது அறியாமல்.
மரங்களும் நட்பும் ஒன்று. அவை ஆயுளுக்கும் வளர்பவை. தினமும் புதுப்பித்துகொள்பவை.
அன்று மார்ச் 29. மாலை ஆறு மணி. சரி நான் கிளம்புகிறேன் ரங்கா.
ம்ம்.. சரி.
ரங்கா நாளை நான் வருவேனா என்று தெரியவில்லை.
வீட்டில் கொஞ்சம் பிரச்சனையாக இருக்கிறது.
கவலைப்படாதே. சரியாகிவிடும்.
எனக்கு அப்படி தோன்றவில்லை. பயமாக இருக்கிறது.
என் கைகளை பிடித்துகொண்டான். கண்கள் பனித்திருந்தன.
ஹேய். அழாதே. நாங்களெல்லோரும் இருக்கிறோம்.
பயப்படாமல் போய் வா. இரவு மெஸேஜ் பண்ணு.
பொறுமையா போய்டு வா.
சரி நான் கிளம்புகிறேன். சைக்கிளில் கிளம்பினான்.
இரவு அவன் அனுப்பியது ஒரே ஒரு மெஸேஜ்.
"நீயாச்சும் நல்லா தூங்குடா ரங்கா."
காலை 8.30க்குதான் அதை பார்த்தென்.
அலைப்பேசியை கீழே வைக்க போனேன்.
நண்பன் ரமேஷ் அழைத்தான்.
"மச்சி.. பாஸ்கர்....."
"என்னடா..அவனுக்கு என்ன..தெளிவா சொல்லு"
"சைக்கிள்ல வரும்போது மயங்கி விழுந்து.. இறந்துட்டான்டா.."
"டேய்.. என்னடா சொல்ற..எங்கடா இருக்கே.. "
"பழைய பஸ் ஸ்டாண்ட் டா"
அடுத்த முக்கால் மணி நேரம் கழித்து அவனை பார்த்தேன்.
பிணமாய்.
இதற்கு மேல் எழுத முடியவில்லை.
எனக்கு அவன் கடவுள்தான்.
நட்பின் கடவுள்.
பாட்டு பாஸ்கி அவன் தான்.
இன்று அவனின் இரண்டாமாண்டு நினைவஞ்சலி.
பாட்டு பாஸ்கி : மச்சி ஏன் இப்படி..?
சரி.. தெம்பா உனக்கு பிடிச்ச நியுயார்க் நகரம் பாட்டு கேளு.
இனிமே இப்படி ஒப்பாரி வெச்ச..மவனே பேத்துடுவேன்.
12 comments:
இதான் என் முதல் வருகை. நல்லா இருக்கு. ஆமா, இது உண்மையா இல்லை புனைவா?
அனுஜன்யா
:-((
அவருக்கு எனது இதயப்பூர்வமான அஞ்சலிகள்
//மரங்களும் நட்பும் ஒன்று. அவை ஆயுளுக்கும் வளர்பவை. தினமும் புதுப்பித்துகொள்பவை.//
கதையா? அனுபவமா?
கதையா இருந்தா , “நல்லா இருக்கு ரங்கா”
அனுபவமா இருந்தா “ ஆழ்ந்த அனுதாபங்கள்.”
:((
யாரு?
//கதையா? அனுபவமா?
கதையா இருந்தா , “நல்லா இருக்கு ரங்கா”
அனுபவமா இருந்தா “ ஆழ்ந்த அனுதாபங்கள்.”//
இது அனுபவம் வடகரை சார்.
//நாமக்கல் சிபி சொன்னது…
:((
யாரு?//
அது என் காலேஜ் நண்பன்.
:(((
ஆழ்ந்த அனுதாபங்கள்.
அன்பின் ரங்கா
அனுபவமெனில் - இச்சிறு வயதில் தாங்கமுடியாத அனுபவம் தான். பாட்டு பாஸ்கிக்கு அஞ்சலிகள்.
என்னச் சொல்லுவது என்று தெரியவில்லை.
மனது கனக்கின்றது. சிறு வயது நட்பு, அதுவும் ஆழ்ந்த நட்பு என்பது மிக நல்லது.
என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
என் சோகத்தை பகிர்ந்துகொண்ட ராகவன்,சீனா, தமிழ்பிரியன்,மின்னல், நாமக்கல் சிபி, சென்ஷி, வடகரை வேலன், அனுஜன்யா, கவிதா அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
சந்தோசமாக வாசிக்கத்தொடங்கினேன் அண்ணா..
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.