Friday, March 20, 2009

வேகம் .... விவேகமா?ஏன் இந்த அவுதி...?!மெதுவாதான் போறது.
அப்படி என்ன குடியா முழுகி போய்டும்...?
ஏந்தான் இப்படி பறக்குதுங்களோ...
அப்பன் காசு எப்படி பறக்குது பாரு...

இதெல்லாம் சாலைகளில் வேகமாக..நான் சொல்வது 30 கி.மீ வேகத்தில் செல்ல வேண்டிய சாலையில்
45 முதல் 60 கி.மீ வரை செல்பவர்களைப் பற்றி.

நானும் தினமும் 60 நிமிடங்கள் வரை சாலைகளில் செலவிடுகிறேன்.
எனக்கு தெரிந்து அதிகபட்ச இளைஞர்கள் 100சிசிக்கும் மேலான திறன்கொண்ட வண்டிகள்தான் வைத்திருக்கிறார்கள்
சாலைகளில் அதிகப்பட்ச வேகத்தில் செல்வதை இவர்கள் பெறுமையாக நினைக்கிறார்கள்.
பெவிலியனில் ஒரு பெண் இருந்துவிட்டால் போதும்.. தலைக்கால் புரிய மாட்டேங்கிறது நம்ம பசங்களுக்கு..
இப்படி பல குறைப்பாடுகள் கொண்டவராகவே இருக்கிறார்கள் நம் இளைஞர்கள்.

வேகமாய் போவது ஏன் ? என்று எனக்கு தெரிந்த நண்பர்களிடம் கேட்டதில்
கீழே உள்ள காரணங்கள் முக்கியமானவை
1. அப்போதான் நம்மை பலரும் கவனிப்பார்கள் (முக்கியமாக இளம்பெண்கள்/ஆண்கள்)
2. அது ஒரு தனி த்ரில்.
3. ஆமை மாதிரி போறதுக்கா இவ்ளோ பணம் போட்டு 125 சிசி வண்டி வாங்கினது..?
4. அதுதான் பாதுகாப்பு.. சீக்கிரம் போய்சேரலாம்.. ?!( குறிப்பிட்ட இடத்திற்கு )

இது போல ஒவ்வொருக்கும் ஒன்று முதல் பல காரணங்கள்..

இவை எல்லாமே தவிர்க்கக்கூடிய காரணங்கள்தான்.
இந்த காரணங்கள் அத்தனையுமே ஓரளவு தவறான கண்ணோட்டம் உடையவை .
எப்படி?

1.//அப்போதான் நம்மை பலரும் கவனிப்பார்கள் (முக்கியமாக இளம்பெண்கள்/ஆண்கள்)//
அப்படி ஒரு எண்ணமே தேவை இல்லாதது.. பிறரை "இம்ப்ரஸ்"(தமிழில் என்ன?) செய்வதற்கு வேறு பல இடங்கள் உண்டு,
அதை விட்டு இப்படி செய்வது தவறான கண்ணோட்டம்.

2.//அது ஒரு தனி த்ரில்.//
இது முழுக்க முழுக்க சுயநல வாதம்.. உங்கள் சுயநலத்திற்காக சாலைகளை பயன்படுத்துவது தவறான கண்ணோட்டம்.

3.//ஆமை மாதிரி போறதுக்கா இவ்ளோ பணம் போட்டு 125 சிசி வண்டி வாங்கினது..?//
இதையே நான் திருப்பி கேக்கறேன்.. "அடிபட்டு சாகவோ அல்லது கைகால்களை இழக்கவா அந்த 125சிசி-யை வாங்குனீங்க?

4.//அதுதான் பாதுகாப்பு..குறிப்பிட்ட இடத்திற்கு சீக்கிரம் போய்சேரலாம்.//

அப்படியா.. அப்போ நிதானமா போறவங்க எல்லாம் இ.வா.வா? போய்சேரலாம்னு சொல்றீங்களே எங்க எமன்கிட்டயா?
பாதுக்காப்பு என்பது நீங்க போற "ஹைஸ்பீடில்" இல்லை.. நல்ல தெளிவான சீரான வேகத்தில்தான் இருக்கு.

மொத்தத்தில் இவைகளை களைந்தும் நாம் சாலைகளில் சிறப்பாக செல்லமுடியும் என்பது தான் உண்மை.

சாலை விதிகளை மீறாமல்.. மிதமான வேகத்தில் செல்வதுதான்.. உங்களுக்கும் உங்களை சுற்றி உள்ளவர்களுக்கும்
பாதுக்காப்பு.. என்பதை மனதில் கொள்ளுங்கள்.

மறக்காமல் தலைக்கவசம் அணிந்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவைப் பொருத்து இதை தொடர்பதிவாக வெளியிடலாம் என்று முடிவுசெய்துள்ளேன்.

9 comments:

நாமக்கல் சிபி said...

சூப்பர் பதிவு

cheena (சீனா) said...

நல்ல பதிவு - தகவல்கள் - அறிவுரைகள் - ஆதங்கங்கள் - கடைப்பிடிக்க வேண்டிய பதிவு
நல்வாழ்த்துகள்

ரங்கன் said...

//நாமக்கல் சிபி சொன்னது…

சூப்பர் பதிவு//

நன்றி.. தல..

ரங்கன் said...

//cheena (சீனா) சொன்னது…

நல்ல பதிவு - தகவல்கள் - அறிவுரைகள் - ஆதங்கங்கள் - கடைப்பிடிக்க வேண்டிய பதிவு
நல்வாழ்த்துகள்//

நன்றி தலைவா.
~ரங்கன்

ச்சின்னப் பையன் said...

நல்ல பதிவு.

சம்பத் said...

நல்ல பதிவு.. வேகம் விவேகம் அல்ல....

Anonymous said...

it is really good news and tips for the you. Carry on

ramesh said...

அருமையான பதிவு ...பரப்பதர்க்கென்றே படைக்கப்பட்டதுதான் பைக் என்ற எண்ணம் கொண்டே இருந்தேன் முக்கியமான ஒரு விபத்தில் மாட்டும்வரை....முன்ன போகும் வாகனம் மற்றும் எதிரே வரும் வாகனம் ,இரண்டின் வேகத்தை கணித்து சீருவதுதான் எங்கள்(நண்பர்கள்) பொழுது போக்கு.....அதற்க்கேற்றவன்னம் ஹைட்ரபாத் சாலைகளில் சிக்னல்கள் மிகக்குறைவு....ஒரு சிக்னலில் இருந்து கிளம்பினால் குறைந்தது 2 கி.மி கடந்துதான் அடுத்த சிக்னலை அடைய முடியும்....குறிப்பிட்ட தினத்தன்றும் வழக்கம் போல் நண்பர்களுடன் சீரினோம்( 10 பைக்குகள் இருக்கும்) சில நண்பர்கள் முன்சென்ற நிலையில்...சாலையின் ஓரத்தில் இருது ஒரு கார் நேராக சாலையை கடக்க முயன்றது...கட்டுபடுத்த முடியாத வேகத்தில் வந்ததால் முன்சென்ற நண்பன் காரில் மோதினான்...பின் சென்ற நாங்கள் சாலையில் சறுக்கிக் சென்றோம்....காரில் மோதிய நண்பனுக்கு காலில் பட்டை பொருத்தப் பட்டுள்ளது....மற்றனைவருக்கும் நிறைய காயங்கள்...இப்போது நினைத்தாலும் உடல் நடுங்கும் விபத்து அது ......இப்பொழுதெல்லாம் சாலையில் வண்டி ஒட்டுவதர்க்கே பயப்படுகிறேன்....குறிப்பாக சென்னை சாலைகளில்...!

சந்திரா said...

இளைய சமுதாயம் படித்து உணர்ந்து தவறு செய்யாமல் இருப்பது நலம். பட்டு திருந்த நினைத்தால் நஷ்டப்பட்டுதான் அழ முடியும்.

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.