Thursday, March 12, 2009

மகிழ்ச்சியே மருத்துவம்

எனக்கு எந்த கவலையுமே இல்லயே..
அதுதான் எனக்கு கவலையா இருக்கு...!!!
இப்படி பல பேரு நம்ம ஊருல புலம்பிட்டு இருக்காங்க.

அதுவும் பெண்களின் பக்கத்தில் இது கொஞ்சம் அதிகமா இருக்கு.

எங்க அத்தை ஒருத்தங்க அப்படித்தான்..
சாப்பாட்டில் ஒரு முடி விழுந்திட்டாக்கூட
பதறி.. பயந்துபோய் தனக்கு எதுவோ வியாதி இருக்குனு நினைச்சுக்குவாங்க..
அவ்ளோ சென்சிட்டிவ்..

சில பேர் லேசா உடம்பு சுடுதுன்னு யாராச்சும் அல்லது தெர்மாமீட்டர்
சொன்னாக்கூட..போச்சு..
கண்ணு செவந்திருக்கா பாரு..
நாக்கு மஞ்சளா இருக்கா பாருன்னு பத்ரகாளி மாதிரி வாயத் திரப்பாங்க..

அதிகபட்சம் வியாதிகள் நமக்கு வருவதும் போவதுமாய் தான் இருக்கிறது
அதை நாம் அறியாமலே உடல் பார்த்துக்கொள்கிறது.

அப்படி மீறிப்போய் வந்தாலும் அதுக்கு தேவையான மருத்துவம் பார்த்துவிட்டு
அடுத்த வேலையை பார்க்கலாம்.அப்படி தொடர்ந்து வேலையில் இருப்பதால்
உடலை நாம் அதன்போக்கில் நோயுடன் சண்டைப்போட வழிசெய்கிறோம்.
அதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. சீக்கிரமே நோய் தீர்க்கப்படுகிறது.
அதைவிட்டு நோயை நினைத்து புலம்புவதால் அந்த நோயின் தீவிரத்தை அதிகமாக்குகிறோம்.

பல மனோதத்துவ நிபுணர்கள் சொல்வது இதுதான்:
"மனதினை பொருத்தே மருந்துகள் வேலை செய்கின்றன.
ஒருவர் மருந்தை எடுத்துக்கொண்டிருந்தாலும் நோயினைப் பற்றிய நினைவுகளுடனே இருந்தால்
நோயின் தீவரம் அதிகரிக்குமே தவிர குறைவதில்லை.
அதெ நேரம் மனத்தினை நோய் தாக்கியுள்ள நேரங்களிலும் தெளிவாகவும், மகிழ்ச்சியுடனும்
வைத்திருப்பவர்கள்... வெகு வேகமாக குணமடைகிறார்கள்.

அது மட்டும் இல்லங்க..
இன்னும் ஒரு பெரிய தவறை நாம நமக்கு தெரியாம பண்ணிடுறோம்.
அது என்னனு கீழே படியுங்கள்..." பல வகையான நோய் தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் நம் ஜுன்களில் தினசரி பதியப்படுகிறது.
அப்படி பதியப்படும்போதே அது எப்படி தீர்க்கப்பட்டது என்ற தகவலும் அதில் சேரும்
அப்படி மனக்குழப்பத்துடனே தீர்க்கப்பட்ட நோய்கள் பற்றிய தகவல் சரியாக சேர்க்கப்பட முடிவதில்லை.
அதனால் உங்களுடைய சந்ததியில் அந்த நோய்க்கான பாதிப்பு தொடர வாய்ப்புகள் அதிகம். "

என்ன ஷாக் ஆகிட்டீங்களா..?
அப்படியே ஆனாலும் இனிமேலாவது "வருவது வரட்டும் .. எது வந்தாலும் என் சந்தோசத்த பறிச்சுட முடியாதுன்னு
இருங்க"
உங்களுக்கு புத்தி சொல்லும் அளவுக்கு எனக்கு வயசு இல்லை..
எல்லாம் ஒரு வேண்டுகோள்தான்..
எடுத்துக்கறதும் தள்ளுவதும் உங்க விருப்பம்.

வாழ்க மகிழ்ச்சியுடன்,
ரங்கன். :D


பாட்டு பாஸ்கி : இந்த பதிவுக்கு சரியான பாடலை அண்ணன் ரங்காவே சொல்லிட்டார்.

"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்படோம் நடலையல்லோம்;
ஏமாப்போம் பிணி அறுப்போம் பணிவோமல்லோம்,-

இன்பமே ஒரு நாளும் துன்பமில்லை."

21 comments:

நாமக்கல் சிபி said...

Good Post Mappi!

ஆ.ஞானசேகரன் said...

மகிழ்ச்சி

நாமக்கல் சிபி said...

எப்ப மாப்பி எம்.பி.பி.எஸ் முடிச்சே?

கவிதா | Kavitha said...

எப்ப மாப்பி எம்.பி.பி.எஸ் முடிச்சே?//

ரீப்பீட்டு.. அதானே ஏன் நீ சொல்லவே இல்ல..

கவிதா | Kavitha said...

நல்ல பதிவு..

ஆனா இந்த பதிவுக்கு காரணம் என்னுடைய ஜூரம் தானே.. பிரியாணிக்காக வந்த ஜூரத்தை எல்லாம் நீ சீரியஸா எடுத்துக்கிட்ட போல :)

கவிதா | Kavitha said...

"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்படோம் நடலையல்லோம்;
ஏமாப்போம் பிணி அறுப்போம் பணிவோமல்லோம்,-//

என்னை மாதிரி ஆளுங்களுக்கு கொஞ்சம் புரியறமாதிரி நல்ல தமிழ்'ல எழுதி பழகு.. சரியா...

ரங்கன் said...

//நாமக்கல் சிபி சொன்னது…

Good Post Mappi!
//
Thanks Mams.

ரங்கன் said...

//ஆ.ஞானசேகரன் சொன்னது…

மகிழ்ச்சி//
நீங்கள் மகிழ்ச்சியானால் எனக்கும் மகிழ்ச்சிதான்.

நன்றி
~ரங்கன்

Anonymous said...

இம்புட்டு பெரியவரா நீங்க??!!

ரங்கன் said...

//கவிதா | Kavitha சொன்னது…

நல்ல பதிவு..

ஆனா இந்த பதிவுக்கு காரணம் என்னுடைய ஜூரம் தானே.. பிரியாணிக்காக வந்த ஜூரத்தை எல்லாம் நீ சீரியஸா எடுத்துக்கிட்ட போல :)//

உங்க ஜுரம் காரணமில்லை.. அதுக்காக நீங்க போட்டெ சீன் தான் காரணம்.
ஹிஹி...

ரங்கன் said...

//Thooya சொன்னது…

இம்புட்டு பெரியவரா நீங்க??!!
//
அச்சோ.. நான் ஒரு பச்சைக் குழந்தை...
உங்களவிட 10 வயசு கம்மினு வெச்சிக்கலாம்.

என்ன விட சின்ன பெண்ணான கவிதா மேல ப்ராமிஸு.

ரங்கன் said...

//கவிதா | Kavitha சொன்னது…

என்னை மாதிரி ஆளுங்களுக்கு கொஞ்சம் புரியறமாதிரி நல்ல தமிழ்'ல எழுதி பழகு.. சரியா...//

ஓ.. அப்போ அது தமிழ் இல்லையா கவிதா.
சரி அடுத்த முறை.. ஐ.. வில் ரைட் இன் டமில்..
ஓக்கேவா..?

கவிதா | Kavitha said...

//உங்க ஜுரம் காரணமில்லை.. அதுக்காக நீங்க போட்டெ சீன் தான் காரணம்.
ஹிஹி...//

ம்ம் நான் சீன் போட்டதால் தானே இப்படி ஒரு நல்ல பதிவு எழுதி இருக்க... சோ கிரெடிட் டூ மீ.. :)

சுபாஷினி said...

நல்லா எழுதறீங்க..கீப் இட் அப்!

கவிதா | Kavitha said...

அச்சோ.. நான் ஒரு பச்சைக் குழந்தை...
உங்களவிட 10 வயசு கம்மினு வெச்சிக்கலாம்.

என்ன விட சின்ன பெண்ணான கவிதா மேல ப்ராமிஸு.//

இதை இதை இதை தான் உன்கிட்ட இருந்து நான் எதிர்பார்த்தேன்.. சரியா சொல்லிட்ட... அதுக்காக உனக்கு ஒரு ஐஸ் கீரிம் நீ சென்னை வரும்போது உன் காசுல வாங்கிதரேன் ஒகே.. :)

கவிதா | Kavitha said...

சரி அடுத்த முறை.. ஐ.. வில் ரைட் இன் டமில்..
ஓக்கேவா..?//

டபுள் ஒகே...

புதுசு புதுசா..நிறைய பேரு பின்னூட்டம் போடறாங்க.. நீ பெரிய ஆள ஆயிட்டப்பா.. ம்ம் ம்ம்.. நடக்கட்டும்....:)

ரங்கன் said...

//சுபாஷினி சொன்னது…

நல்லா எழுதறீங்க..கீப் இட் அப்!//

நன்றிங்க...
எல்லாம் உங்கள மாதிரி பதிவர்களின் பக்கபலம்தான்..

அமுதா said...

நல்ல விஷயம்

ரங்கன் said...

//கவிதா | Kavitha சொன்னது…

புதுசு புதுசா..நிறைய பேரு பின்னூட்டம் போடறாங்க.. நீ பெரிய ஆள ஆயிட்டப்பா.. ம்ம் ம்ம்.. நடக்கட்டும்....:)//

எல்லாம் உன் ஆசிர்வாதம் தாயே!!!
வேறென்ன நான் சொல்ல...

நான் சிறியவனாய் இருக்கவே ஆசைப்படுகிறேன்.
அப்போதுதான் நிறைய கத்துக்க முடியும்.
பெரியாளகிட்டா அடுத்து பெருமாள் கிட்டதான் போகவேண்டி வரும்.

நாங்க யூத்து.. யூத்து.. யூத்து...

cheena (சீனா) said...

ஓஓஓ இப்படி எல்லாம் தகவல் இருக்கா - இதற்கு என்ன ஆதாரம் - போற போக்கில ஏதாச்சும் சொல்லிட்டுப் போக வேண்டியது ...... ம்ம்ம்ம்ம்ம்ம்

ரங்கன் said...

//cheena (சீனா) சொன்னது…

ஓஓஓ இப்படி எல்லாம் தகவல் இருக்கா - இதற்கு என்ன ஆதாரம் - போற போக்கில ஏதாச்சும் சொல்லிட்டுப் போக வேண்டியது ...... ம்ம்ம்ம்ம்ம்ம்//

வாங்க சீனா சார்..
எனக்கு கிடைச்ச சரியான ஆதாரங்களை வெச்சுதான் பதிவே போட்டேன்.

போறப்போக்கில் ஏதோ சொல்லிட்டு போக நான் இங்கு இல்லை. ஹிஹி..

வருகைக்கு நன்றி
ரங்கன்

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.