Tuesday, March 10, 2009

சந்துருவும்.. புதிய பப்பியும்

சந்துரு..எங்கடா கிளம்பிட்ட..?

மா.. விமல் வீட்டுக்கு போறேன்மா..

நானும் வரட்டுமாடா?

இல்லமா.. அடுத்த தெருதானே.. நானே போயிக்குறேன்..

சரி.. பொறுமையா போ.. கால் வலிக்க போகுது...

ம்ம்ம்... சரிம்மா.. கிளம்பறேன்..டாட்டா..

டாட்டா செல்லம்..

*******************************

சந்துரு படியிறங்கி நடந்தான்..
அப்படியே அவன் தாத்தாவின் மிலிட்டரி நடை..

சற்று நேரத்தில் விமல் வீட்டை அடைந்தான்
ஆனால் வீடு பூட்டி இருந்தது.

திரும்பி வீட்டிற்கே நடந்தான்.
செல்லும் வழியில் ஒரு புதிய கடை ஒன்று வந்திருப்பதை பார்த்தான்.
அருகே சென்று பார்த்தான். அது ஒரு "பெட் ஷாப்".

********************************

சந்துரு "உள்ளே வரலாமா?"

கடை முதலாளி அவனை வரவேற்றார்.

குட்மார்னிங்.. அங்கிள்..

குட்மார்னிங்...

என்னப்பா.. உனக்கு பேர்ட்ஸ் பிடிக்குமா.. அல்லது டாக்ஸ் பிடிக்குமா?

ரெண்டும்தான் அங்கிள், இப்பொ எனக்கு டாக்ஸ் பார்க்கணும்.

சரி வா.. பாத்துடலாம்.

**************************




இங்க பாரு... எல்லாமே அழகழகான பப்பீஸ். நல்லா இருக்கா..?

ஆமாம் அங்கிள்.. அருமையா இருக்கு...
அங்கிள்.. அது என்ன அந்த பப்பி மட்டும் ஏன் நொண்டுது ?
என்ன ஆச்சு அதுக்கு?


அதுவா.. அதுக்கு இடுப்பு எலும்பு அவளோ வலுவா இல்லப்பா.. அதனாலதான் நொண்டுது.

சே.. பாவம் அங்கிள் ... அங்கிள் நான் அந்த பப்பிய வாங்கிக்கறேன்.

தம்பி.. அது எதுக்குப்பா உனக்கு..?
அதானல.. ஓடமுடியாது.. வேகமா நடக்கவே கஷ்டப்படும்..
உன் கூட அது குதிச்சு குதிச்சு விளையாட முடியாது...

இல்ல அங்கிள்.. அதுதான் வேணும்.
எவ்ளோ அங்கிள் பணம் தரணும்?

இல்லப்பா அதுக்கு பணம் ஏதும் வேண்டாம்..
சும்மாவே தரேன்.. வச்சுக்கோ..

சந்துரு கோபமாக..
அங்கிள்.. அதெப்படி.. மத்த பப்பி மாதிரி தானே இதுவும்
இதுக்கு மட்டும் ஏன் விலை இல்லை..?


இல்லப்பா... வேணாம்.. நீயே எடுத்துக்கோ..
பணம் வேண்டாம்.

நோ.. அங்கிள்.. முடியாது..
சரி அந்த பப்பிக்கு என்ன விலை..?
சந்துரு வேறொரு பப்பியை காட்டினான்.

அது.. 1500 ரூபா..ப்பா.

ம்ம்.. இருங்க..
தன் பாக்கெட்டில் இருந்து.. 20 ரூபாயை எடுத்தான்.

இந்தாங்க... இப்போதைக்கு இத வெச்சிகங்க..
மாசாமாசம்.. பணம் அனுப்பிடுறேன்...
சரியா? என்று அவரின் கண்களை பார்த்தான்

அவருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

சரிப்பா.. பணம் வாங்கிக்கறேன்.
ஆனால் ஒரு சந்தேகம், ஏன் அந்த பப்பி மேல அவ்ளோ விருப்பம்?

அவன் புன்னகைத்தான்.
அவனுடைய ஃபேண்டை உயர்த்திக்காட்டினான் சந்துரு.

அவனுடைய வலது கால் மிகவும் மெலிந்து,
இரும்பு தகடுகள் பொருத்தப்பட்டிருந்தது.

அந்த பப்பியோட வலி எனக்குதான் புரியும் அங்கிள்.. அதான் நான் கேட்டேன்..
அங்கிள் குறை இருக்கறதனால எந்த உயிரும் குறைஞ்சி போய்டாது..
வரேன் அங்கிள்.

மலைத்துபோய் நின்றார் கடைக்காரர்.

சந்துரு."பப்பீ.. உனக்கு என்ன பேரு வெக்கலாம்..?"


பாட்டு பாஸ்கி : இதுக்கு சரியா பாட்டு
குறையொன்றுமில்லை.. மறைமூர்த்தி கண்ணா.. !
குறையொன்றுமில்லை கண்ணா...!!
குறையொன்றுமில்லை கோவிந்தா...!!!

(பி.கு) என்றோ படித்த ஆங்கில கதை இது ... நன்றி

14 comments:

நாமக்கல் சிபி said...

நெகிழ வைக்கும் கதை மாப்பி!

சூப்பர்!

ஆயில்யன் said...

//குறை இருக்கறதனால எந்த உயிரும் குறைஞ்சி போய்டாது..
வரேன் அங்கிள்.//

அதானே!

பாட்டு பாஸ்கி கரீக்டா பாட்டு செலக்ட்டியிருக்காரு :)

நட்புடன் ஜமால் said...

மிகவும் அருமை.

நெகிழ வைத்தது.

Ungalranga said...

//நாமக்கல் சிபி said...

நெகிழ வைக்கும் கதை மாப்பி!

சூப்பர்!
//
தாங்க்ஸ் தல
மிக்க நன்னி.

Ungalranga said...

ஆயில்யன் said...

// பாட்டு பாஸ்கி கரீக்டா பாட்டு செலக்ட்டியிருக்காரு :)
//
அதுக்குத்தானே அவர் வந்திருக்காரு..

Ungalranga said...

//நட்புடன் ஜமால் said...

மிகவும் அருமை.

நெகிழ வைத்தது.//

அப்படியா.. சந்தோசம்.

செ.முததமிழ்செல்வன் said...

அருமையான, அவசியமான பதிவு...

//ஊனம்.. ஊனம்...ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ... உட்ம்பில் உள்ள குறைகள் எல்லம் ஊனம் இல்லீங்கோ!..// என்ற படல் வரி நினைவுக்கு வருகிறது.

//குறை இருக்கறதனால எந்த உயிரும் குறைஞ்சி போய்டாது..
வரேன் அங்கிள்.//- அனைவரும் உணரவேண்டிய உண்மை.

-செ.முத்தமிழ்செல்வன்

சந்தனமுல்லை said...

நல்ல நடை..ஏதோ ஃபார்வர்டு மெயில்லே படிச்சது..நீங்க நல்லா தமிழ்படுத்தியிருக்கீங்க! வாழ்த்துகள்!

cheena (சீனா) said...

நல்ல கதை - ஏற்கனவே படிச்சது தான் - நெகிழும் நெஞ்சமுடையவன் சந்துரு

Ungalranga said...

//சந்தனமுல்லை said...

நல்ல நடை..ஏதோ ஃபார்வர்டு மெயில்லே படிச்சது..நீங்க நல்லா தமிழ்படுத்தியிருக்கீங்க! வாழ்த்துகள்!//

நன்றி அம்மா...
மிக்க நன்றி..
எல்லாம் உங்க ஆசீர்வாதம்.

ஜோசப் பால்ராஜ் said...

அடடே, ரொம்ப நன்னா இருக்கே கதை.
ஏற்கனவே படிச்சதுன்னாலும், இந்த நடையும், மொழிபெயர்பும் ரொம்ப நன்னாருக்கு அம்பி.

கவிதா | Kavitha said...

நன்றி அம்மா...
மிக்க நன்றி..
எல்லாம் உங்க ஆசீர்வாதம்.//

என்னது அம்மாவா??

ஏன் ஒருத்தரையும் நீ விட்டு வைக்க மாட்டியா.. அவங்க பப்புவுக்கு இப்ப 3 வயசாச்சு..உனக்கு..? அவங்களை போயி அம்மா ன்னு சொல்ற....

சந்தனமுல்லை said...

//
நன்றி அம்மா...
மிக்க நன்றி..
எல்லாம் உங்க ஆசீர்வாதம்.//

நன்றிக்கு அம்மாவுக்கும் நடுவுல பப்பு விட்டுட்டீங்க போல! இனிமே மிஸ் பண்ணாதீங்க ப்ளீஸ்! :-)

*இயற்கை ராஜி* said...

Fantastic

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.