Tuesday, July 14, 2009

மகிழ்ச்சி என்றால் என்ன?-1

என் வாழ்க்கையோட இந்த பகுதிக்கு பேரு..வறுமை.

”...ஹலோ.. யாருங்க உள்ள..

ஹெல்லோ.. யாருப்பா அது..

ஹேய்..வெளிய வாய்யா.. ச்சை..”

............

அவங்க கூப்பிடுறது என்னைத்தான்.
என் பேரு நாதன் சண்முகவேல்.
இங்க பேரிஸில் இருக்கேன்.

சொந்த ஊரு எதுன்னு தெரியாது.
எங்க அம்மா அப்பா சொன்னதே இல்லை.

நான் இப்போ ஒரு பப்ளிக் பாத்ரூமில் உள்தாழ்ப்பாள் போட்டுகிட்டு தரையில் சாய்ந்தபடி இருக்கேன்.

..ஓ.. சொல்ல மறந்துட்டேன். இது என்....என்...ப்ச்..என் மகன்..

பேரு..கிரிஸ்டோபர் நாதன்.

இவங்க அம்மா நேத்து இவனை என்னோட விட்டுட்டு கிளம்பி போய்ட்டாங்க.

அவங்களுக்கு என் நன்றிய சொல்லிக்கிறேன்.

இன்னிக்கு ராத்திரி முழுக்க இங்க தான் இருக்க போறோம்.

ஏன்னா எங்களுக்கு வீடு கிடையாது.

வேலைக்கு அப்ளை பண்ணி இருக்கேன்.

ரிசசன் காரணமா என் வேலை போய்டுச்சு.

இந்தியா திரும்ப காசும் இல்லை.

வாடகை குடுக்க முடியாததால் வீட்டை விட்டு வந்துட்டோம்.

இன்னிக்கு ஒரு நாளைக்கு மட்டும் இந்த பாத்ரூம்தான் எனக்கும் என் பையனுக்கும் வீடு.

.. பரவாயில்ல..இந்த வீட்ல தண்ணி வசதிக்கு பஞ்சமில்லை...ஹாஹாஹா..

சரிங்க ..நானும் தூங்க போறேன். குட் நைட்.

அடுத்த பதிவில் சந்திப்போம்..

10 comments:

cheena (சீனா) said...

ஹல்லோ ரங்கா

மகிழ்ச்சி என்பது எது வேண்டுமானாலும் இருக்கலாம்- ஆளாளுக்கு வேறு படும். நல்ல ஆரம்பம்

தொடர்க - நல்வாழ்த்துகள்

Anonymous said...

pursuit of the happiness padam partherkala

Ungalranga said...

அனானி அவர்களுக்கு.

அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை..
இதோட ட்ராக் வேற..

நன்றி.

நட்புடன் ஜமால் said...

துவக்கம் அந்த படத்தை ஞாபக படுத்தினாலும், மேலும் வரும் பதிவுகளில் பார்ப்போம் ...

ஜோசப் பால்ராஜ் said...

துவக்கம் ரொம்ப அருமையா இருக்கு.
அடுத்தடுத்த பகுதிகள் எழுதும் போது இது மாதிரி சின்னதா முடிக்காம கொஞ்சம் அதிகமா எழுது. அப்பதான் படிக்க இன்ட்ரஸ்ட்டா இருக்கும்.

தொடரை வெற்றிகரமாக தொடர வாழ்த்துக்கள்.

Thamira said...

எந்த இம்பாக்டையும் ஏற்படுத்தவில்லை. இதே கேரக்டர்களை வைத்துதான் தொடரப்போகிறீர்களா? அப்படியானால் இப்படியா துவக்குவது? தொடரின் ஒரு பகுதிக்கு தேவையான விஷயங்கள் இருப்பதாகப் படவில்லை.

(இன்னொரு செய்தி : பொதுவாக தொடர்களை பதிவுலகம் ஆதரிப்பதாக தெரியவில்லை. ஒரே இடுகையில் சொல்லவிரும்புவதை சொல்லிவிடுவது பெட்டர்)

Thamira said...

முந்தைய பின்னூட்டம் இந்தப்பதிவை மட்டுமே கருத்தில் கொண்டு சொல்லப்பட்டது. உங்கள் முந்தைய பதிவுகளையும், சிறப்புகளையும் நான் அறியாதவன் என்பதை கருத்தில் கொள்ளுங்கள். தவறாக இருப்பின் மன்னிக்கவும். வாழ்த்துகள்.!

Ungalranga said...

@ஆதிமூலகிருஷ்ணன்,

நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன்.
என் நன்மைக்காகத்தான் சொல்கிறீர்கள் என்றே படுகிறது. பார்ப்போம்.

வருகைக்கு நன்றி

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

கதை நன்றாகத் தொடங்குகிறது. பாரிஸ் என்று சொல்கிறீர்கள். அப்புறம் ' வாப்பா வெளிய ' என்று தமிழில் கூப்பிடுவார்களா அங்கு.?....

Ungalranga said...

@ஜெஸ்வந்தி,

ஆமாங்க.. பிரெஞ்சில் பேசினதை இங்க தமிழில் போடுறேங்க..

நல்லா கேக்குறாங்கய்யா கொஸ்டீனு..ஹாஹாஹா..!!!

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.