கடவுளும் மரமும் :
தன்னை திட்டுபவனுக்கும்
அருள் தருகிறது கடவுள்,
தன்னை வெட்டுபவனுக்கும்
நிழல் தருகிறது மரம்.
ஆம்புலன்ஸ் :
அப்பாவுக்கு நெஞ்சுவலி
எங்களோடு சேர்ந்து தானும்
கதறுகிறது சைரனோடு.
பயணச் சீட்டு :
சீட்டு இருக்கு கண்டக்டர்
ஆனால் சீட்டு தான் இல்லை
கால்வலியோடும் காமெடி செய்கிறார்
அந்த 82வயது முதியவர்.
காவ(லி)ல் நிலையம் :
எப்போதும் இருவர் கையில் ஆயுதங்களுடன் காவலில்
பாதுக்காப்பாய் தான் இருக்கிறது காவல் நிலையம்.
கடவுள் தெரிகிறார்! :
பத்து ரூபாய் சேர்த்து கொடுத்தேன்
இப்போது பக்கத்தில் தெரிகிறார் கடவுள்.
மறதி :
குடை மறந்த நாள் ஒன்றில்
மறக்காமல் வந்து சேர்ந்தது
மழை.
நீங்களுமா..? :
ஆத்திரத்தில் மனைவியை அடிக்கபோகிறார்
அந்த “லாஃபிங் தெரபி டாக்டர்”.
அட! :
"உடம்பு சரியில்லைங்க
ஆபரேஷன் நாளைக்கு வெச்சிகலாம்."
அலுப்புடன் போனை வைத்தார் டாக்டர்.
36 comments:
மறதி-நிதர்சனம்
வாவ்
நல்லா இருக்கு ரங்கா
//குடை மறந்த நாள் ஒன்றில்
மறக்காமல் வந்து சேர்ந்தது
மழை.//
நேத்து ஈரமாயிருக்குன்னு காயப்போட்ட ரெயின் கோட்ட இன்னைக்கு மறந்துட்டு வந்துட்டேன். மழை வந்தா நாளைக்கு லீவு தான்.
ரெங்க,
நக்கலுக்கு சொல்லலை . உண்மையிலயே ரொம்ப நல்லாருக்கு.
குறிப்பா அந்த பேருந்து...
சமூக கருத்துக்கள் கூட சர்வ சாதரணமா வந்துருக்கு உன் கவிதையில.
எஙகயோ போயிட்ட டே மாப்பி.
கடவுள் சூபர் பன்ச்...மழை வெகு நேர்த்தி..காவல் நிலயம் பாதுகாப்பாய்..மரம் மனசோடு...
Super thala
@ஆபிரகாம்,
நன்றி ஆபிரகாம்.
@கார்க்கி said,
வாவ்.
ஆமா எங்க வரணும்?
@S.A. நவாஸுதீன்,
நன்றி நவாஸுதீன். மீண்டும் வருக..!!
ரசிச்சேன்,
அதுவும் பஸ் மற்றும் டாக்டர் ஹைக்கூ சூப்பர்.
தொடர்ந்து இது மாதிரி பதிவுகள் வேண்டும்..
@ஜோசப் பால்ராஜ்,
போன் பண்ணி கேட்டேன்.. நீ வீட்டுக்கு போய் சேரும் வரை மழை வராதாம்..
முடிஞ்சா "மழை" ஸ்ரேயா வர வாய்ப்பு இருக்காம்..!!
நம்ம இடி அமீனின் தகவல் இது.
ரங்கா அண்ணே ரொம்ப நல்லா இருக்கு!
இதோ என் பங்கு டானிக்
ஹைகூ அத்தனை HIGH கூ தான்.
பத்து ரூபாய் சேர்த்து கொடுத்தேன்
இப்போது பக்கத்தில் தெரிகிறார் கடவுள்.
கடவுளை நெஞ்சுக்குள் வைக்காதவரை இப்படித்தான் பத்து பத்தாய் பறக்கும்
//ஜோசப் பால்ராஜ் said...
ரெங்க,
நக்கலுக்கு சொல்லலை . உண்மையிலயே ரொம்ப நல்லாருக்கு.
குறிப்பா அந்த பேருந்து...
சமூக கருத்துக்கள் கூட சர்வ சாதரணமா வந்துருக்கு உன் கவிதையில.
எஙகயோ போயிட்ட டே மாப்பி.//
எங்கயும் போகலை ராசா..உங்க கூடவேதான்.. தோ..பக்கத்தில தான் இருக்கேன்..!!
//தன்னை திட்டுபவனுக்கும்
அருள் தருகிறது கடவுள்,
தன்னை வெட்டுபவனுக்கும்
நிழல் தருகிறது மரம்.
//
இயற்கை மரங்களைக் கொண்டு
பசுமைக் கவிதை எழுதியது
மனிதன் மரங்களை அழித்து
தாளில் கவிதை எழுதினான்
இயற்கையில் வெற்றிடமும்
தாள்களின் எண்ணிக்கையும்
அதிகரித்துக் கொண்டே இருக்கிறது
//
சீட்டு இருக்கு கண்டக்டர்
ஆனால் சீட்டு தான் இல்லை
கால்வலியோடும் காமெடி செய்கிறார்
அந்த 82வயது முதியவர்.//
தள்ளாத வயதிலும் எனை வெளித்
தள்ளாமல் வந்ததே பெரிசு
என்றாரோ அந்தப் பெரிசு?
நல்லாருக்கு ரங்கா... தொடருங்கள்.
super. ஹைக்கூ மின்னல் ஒளியில் தெரிக்கும் காட்சியைப் போல சட்டென்று ஒரு பிம்பத்தை மனதில் எழுப்ப வேண்டும் என்பார்கள். அருமையாய் வந்திருக்கிறது.
சிலது அந்த வகையில் வந்திருக்கிறது. மென் மேலும் தொடருங்கள் பாஸ்...
ஆத்திரத்தில் மனைவியை அடிக்கபோகிறார்
அந்த “லாஃபிங் தெரபி டாக்டர்”.
super super
@நிஜமா நல்லவன்,
நன்றி நிஜமா நல்லவன்.
@தமிழரசி,
அத்தனைக்கும் மேல் உங்கள் கமெண்ட் எனக்கு ரொம்ப பிடிச்ச கவிதை.
வருகைக்கு நன்றி.
ரசிக்க சுருக்க நல்லாருக்க ரங்ஸ்...
தொடரவும்...
@புதுகை தென்றல்,
நன்றி நிச்சயம் தொடருவேன்.
அட்ரா சக்க, அட்ரா சக்க, அட்ராஆஆஆஆஆஅ சக்க. நண்பா, அட்டகாசம்
”குடை மறந்த நாள் ஒன்றில்
மறக்காமல் வந்து சேர்ந்தது
மழை.” மட்ரும் ”காவலில் நிலையம்” அருமை
விகடன் Good Blogs மூலமாக வந்தேன்.
எதைச் சொல்ல எதை விட.
எல்லாமே அருமை.
என் வாழ்த்துக்கள்!
//தன்னை திட்டுபவனுக்கும்
அருள் தருகிறது கடவுள்//
கவிதைகள் சூப்பர்! தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்..ஐந்து அறிவு உயிர்கள்/பொருட்கள் இவைகளைத்தான் "அது/இது" என்று குறிப்பிடுவது வழக்கம். கடவுள் மனிதனின் படைப்பாய் கருதினாலும், மனிதனை போல் பகுத்து அறியும் ஜீவனாய் சித்தரிப்பதால் ... ஆறறிவுக்கு கொடுக்கும் மதிப்பை கொடுக்கலாமே ...
//
பத்து ரூபாய் சேர்த்து கொடுத்தேன்
இப்போது பக்கத்தில் தெரிகிறார் கடவுள்.//
Vaazthukkal. Rombha nalla eluthareenga Ranga.
அப்பாவுக்கு நெஞ்சுவலி
எங்களோடு சேர்ந்து தானும்
கதறுகிறது சைரனோடு.]]
இது மிக டாப்பு ...
nalla irukku
ரொம்ப நலாருக்கு துளிப்பாக்கள் ரங்கா
ஆம்புலன்ஸ் பஸ் கடவுள் மற்றும் பல - அனைத்தும் அருமை ரங்கா - நல்லாருடே
@ஜீவ்ஸ்..
ரொம்ப நன்றி ஜீவ்ஸ்.
நன்றி biskothupayal,
நன்றி கும்க்கி,
நன்றி முரளிக்குமார்,
நன்றி ராமலஷ்மி,
நன்றி நெல்லை.எல்.ஏ. சரவணக்குமார்,
நன்றி சுபா,
நன்றி ஜமால்,
நன்றி அனானீஸ்,
நன்றி சீனா மாமா,
நன்றி ரங்கன்...ஓ..அது நான் போட்ட கமெண்டா.. !!!
golden hikoos
அருமை நண்பரே
வாழ்த்துகள்
மேன்மேலும் எழுத வேண்டுகிறேன்
அனைத்தும் அருமை.
ஹை, நல்லா இருக்குங்களே கவிதைகள், குட்டி குட்டியா, நச்சு நச்சுன்னு !!
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.