-”டேய்.. சொன்னா கேளுடா.. ஏண்டா இப்படி பண்ற.”
-”மா. சும்மா இரும்மா..பேசும்போது நொய் நொய்னு. பேசிட்டு இருக்கோம்ல.”
-”டேய்.. மனோ. வேண்டாம்.. இப்போ நிறுத்த போறியா இல்லியா?”
- “.. ம்ம்..ஆமாடா.. அம்மாதான்... சும்மா அட்வைஸ் பண்ணிகிட்டு.. டென்ஷன் ஆகுதுடா.”
- “..என்னவொ போடா..நீ சொன்னா கேக்க மாட்டா.. அப்படியே அப்பன் புத்தி..ம்ஹீம்.”
-“ஹேய்..ஒண்ணு குடேன்.. ப்ளீஸ்டா.. என் செல்லம்ல..”
- “இப்படியே எத்தனை நாளைக்கு கொஞ்சிட்டு இருக்க போற?
ஒழுங்கா கலியாணம் பண்ணிக்கிற வழிய பாரு.. மனோ.”
- “ஹேய்.. அம்மா கட்டிக்க சொல்றாங்கடா . கட்டிக்கவா?
தோடா..வெக்கமா.. ம்ம்... அப்புறம்..”
...கீங்..கீங்..கீங்...
அம்மா, “என்னடா போன் கட்டா?”
மனோ, “ஆமாம்மா..பேலன்ஸ் காலி.”
செல்போனை பார்த்தபடி மனோ பைக்கின் ஆக்ஸிலேட்டரை திருக..
..சில பல.. பலமான சத்தங்களுக்கு பின்.
.
.
.
”அம்மா.. என்ன மன்னிச்சுடு.. நீ சொன்னது சரிதான்.. வண்டி ஓட்டும் போது போன் பேசி இருக்க கூடாது.”
தன் பிணத்தின் முன்னால் கதறும் தாயின் பின்னால் நின்றபடி மனோ சொல்லிகொண்டான்.
(பி.கு)..
நேற்று மட்டும் சேலத்தில் இருவர் சாலைவிபத்துகளில் பலி. இருவருமே சாலையில் டூவிலரில் செல்லும்போது செல்லில் பேசியபடி சென்றுள்ளனர்!!!
"வண்டியில் செல்லும்போது செல்லை தொடாதீர்கள்.
அழைப்பது எமனாகவும் இருக்கலாம்."
15 comments:
நல்ல மெசேஜ்!
ரொம்ப நல்ல மெசேஜ்!
@நாமக்கல் சிபி,
அலோ.. இது சிறுகதைப்பா..!!
REALLY HEART TOUCHING STORY ன்னு சொல்ல முடியலை ஏன்னா உயிரின் விலை பாராட்டு அல்ல
அம்மா கனவுக் கன்னிகளே காதலில் அழவைப்பது போதாதா? கல்லறைக்கும் நீங்களே அனுப்பனுமா? காதல் இளவரசர்களே நீங்கள் இந்தியாவை வல்லரசாக்காமல் போனாலும் பரவாயில்லி ஈன்றவளை வலிக்கச் செய்யாமல் இருங்கள்...
@ தமிழரசி,
கனவுகாணுங்கள் என்று சொன்னதற்காக.. சாலையிலும் அதை பின்பற்றினால்..
விளைவுகள் பயங்கராமாய் இருக்கும்.
வண்டி ஓட்டும் போது போன் பேசி இருக்க கூடாது.\\
நல்ல தகவல் ...
அருமை ரங்கா....
@ நட்புடன் ஜமால்,
வருகைக்கு நன்றி ஜமால்.
@சக்தி,
நன்றி சக்தி.
சூப்பர் மெசெஜ். யூத் விகடனுக்கு அனுப்புங்க
@புதுகை தென்றல்,
சரிங்க.. அனுப்பிடுறேன்.
கருத்துள்ள 'நச்' & 'ட்ச்' கதை!!
@ஷஃபிக்ஸ்,
நன்றி நண்பரே!!
உங்க பேரு 'நச்' & 'டச்'.
என்ன அர்த்தமென சொல்ல முடியுமா?
கதை ரொம்ப நல்லாருக்கு மாப்பி. மெசேஜ் ரொம்ப சூப்பர்.
போன்ல பேசிக்கிட்டே வண்டி ஓட்றவன் எல்லாம் விவரம் தெரியாமலா அப்டி செய்யிறான்? எல்லாருக்கும் தெரியும், ஆனாலும் ஒரு தெணாவெட்டு. ங்கொய்யாலே அப்டி தெணாவெட்டுல பேசுறவன் எல்லாம் பொழைச்சுக்கிடந்து தான் இந்தியா வல்லரசாகனும்னு இல்லடே. போயி தொலையட்டும் விடு.
தனக்கா புத்தி வரணும். இவனுங்கள எல்லாம் என்ன செய்ய முடியுங்கிற? ப்ரீயா விடு மாப்பி.
//நன்றி நண்பரே!!
உங்க பேரு 'நச்' & 'டச்'.
என்ன அர்த்தமென சொல்ல முடியுமா? //
என்னோட பேரு 'ஷஃபி' பக்கத்தில் 'க்ஸ்' சேர்த்து SUFFIX மாதிரி இருக்கட்டுமேன்னு தோனுச்சு. அர்த்தம் "பரிந்துரைப்பவர்". நன்றி ரங்கன் உங்கள் ஆர்வத்திர்க்கு.
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.