Thursday, July 2, 2009

ஒரு கவிஞனின் விதி...!!!


அப்போது எனக்கு வயது 16..

அன்றொரு நாள்..

..
ஆசையோடு நான்
சில புதுக் கவிதை
எழுதி வந்தேன்;

”ஏண்டா இப்படி பேப்பரா வீண் பண்ற?!” என்றாள் தங்கை.

“ஹோம்வர்க் செய்யறதை விட்டுட்டு,கவிதை கேக்குதா கழுதை” இது அப்பா

“பையன் போற போக்கே சரியில்ல சாந்தி, கொஞ்சம் அடக்கி வை” இது பாட்டி

...

ம்ம்.. அம்மாவும் திட்ட போகிறாள் என்று நினைத்தேன்.


ஆனால் தனியே என்னை அழைத்து..

“லூஸ்.. இதெல்லாம் தனியா என்கிட்ட காட்டி இருக்கலாம்ல.”

கவிதையை பார்த்துவிட்டு

”பரவாயில்லையே.. கவிதை எல்லாம் சூப்பர்.. ம்ம்.. அடுத்த வாலி நீதான்.”

நான் கேட்டேன்..

”வாலா.. வாலியா?”

அழகாய் சிரித்துவிட்டு சொன்னாள்.

“வாலிடா கண்ணா. அவர் ஒரு பெரிய கவிஞர்”. என்று சொல்லி என் தலை வருடினார்.

அப்போது அம்மாவை அப்பா முறைத்தார்.

மாலை..
அப்பா.
“ஏண்டி.. உன் புள்ளைதான் லூஸுன்னு பார்த்தா நீயுமா?”

அம்மா.
“ஏங்க..என்ன ஆச்சு இப்போ?”

அப்பா.
“பின்ன என்ன? அவன் கவிதை எழுதிட்டு வரான். நீ அவனை ரொம்ப புகழ்ற.”

அம்மா.
“ஆமா. புகழ்ந்தேன். அதுக்கென்ன இப்பொ?”

அப்பா.
“இப்படி ஆரம்பிச்சா. அவன் எப்படி ப்ராக்டிகல் வாழ்க்கையில் வாழ முடியும்?,,
எப்ப பார்த்தாலும் கவிதை, கற்பனைன்னே இருந்துட்டா.. சுத்தி நடக்குறது என்னனு தெரியாமலே போய்டும்.
அவன் மட்டும் இந்த உலகத்துக்கு அந்நியமா போய்டுவான். அவனை நீ என்கெரேஜ் பண்ணாதே”

அம்மா.
“அது எனக்கு தெரியாதாங்க. முதலில் என்கெரேஜ் பண்ற மாதிரி பண்ணுவேன். அப்புறம் போக போக, அது சரியில்லை
இது சரியில்லைன்னு சொல்லி. அவனை கவிதை எழுதுவது மேல ஒரு வெறுப்பு வர வெச்சுடுறேன். அப்புறம் அவன்
நம்ம வழிக்கு வந்து தானே ஆகணும். “

அப்பா.
“அட.. நல்லா தான் யோசிச்சுருக்க. குட். அவனை கவிஞனா பாக்க எனக்கு மனசு வரலை. அவன் பெரிய பிசினஸ் மேனா வரணும்.
அது தான் என் ஆசை.”

அம்மா
“என் ஆசையும் அதுதான்.”

..........

ஒரு மெல்லிய விசும்பலோடு.. அவைகளை கேட்டுகொண்டிருந்தேன் நான்.

முதன்முறையாக.. என் தாயே எனக்கு ஒரு எதிரியாக தெரிந்தார்.

என்ன செய்வது.. அவர்களின் தேடல் வேறு. என் தேடல் வேறு.


இறுதியாக...

ஒரு “ரகசிய வாழ்க்கை”யை துவங்குவது பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்.

இனி உலகுக்கு நான் பிஸினஸ் மேன். எனக்குள் ஒரு மகா கவி.

அன்று முடிவு செய்தேன்:

சுயத்தை இழந்து தானே வாழக்கூடாது. சுயத்தோடு வாழ்ந்துகொண்டே, உலகத்தோடும் வாழ்ந்து காட்டுகிறேன்.


பாட்டு பாஸ்கி : ஐ யம் பேக்.. !!

ஆஹா.. இது என்னடா அந்நியன் படம் பார்த்த எஃபெக்ட்டா இருக்குது.

ஆனா, அந்த பையன் பேர கடைசி வரை சொல்லவே இல்லியே நீ...?

12 comments:

முரளிகுமார் பத்மநாபன் said...

rANgaaa......

கார்க்கி said...

ஸப்பா.... மொக்கைல இருக்கு உங்களுக்கு கச்சேரி

ரங்கன் said...

@முரளிகுமார் பத்மநாபன்

என்னப்பா கமெண்ட் கேட்டா கத்துறீங்க?

முரளிகுமார் பத்மநாபன் said...

சாரிப்பா, நல்லா இருக்கு, இதுக்கு கதை என்பதர்க்கு பதிலாக என் சுயசரிதம் என்று வைத்திருக்கலாம்

சுபா said...

//முரளிகுமார் பத்மநாபன், கதை என்பதர்க்கு பதிலாக என் சுயசரிதம் என்று வைத்திருக்கலாம்// முழுமையா ஆதரிக்கிறேன். உண்மை சம்பவமா ரங்கா ? :

ரங்கன் said...

@சுபா.

ம்ம்.. ஊமையாகி போன ஒரு கவிஞரின் உண்மை சம்பவம் தான் இது.

ஆனால் அவர் நம்மிடையே தான் இருக்கிறார் என்பது சமீபத்திய தகவல்.

நாமக்கல் சிபி said...

இப்படி நான் ஒரு கவிதை எழுதப் போய்தான் யாருக்கோ லவ் லெட்டர் எழுதிட்டேன்னு நினைச்சி எங்க வூட்டுல என்னை உதைச்சாங்க! அப்ப எனக்கு 17தான் ஆச்சு!

ரங்கன் said...

@நாமக்கல் சிபி

காதலும், கவிதையும் சேர்ந்தே வரும்னு அவங்க எண்ணம். பாவம் நீங்க.

அனுஜன்யா said...

ஏம்பா எல்லாரும் இப்படி கும்முறீங்க. இன்னும் கொஞ்சம் செதுக்கி, கொஞ்சம் விரிவா எழுதியிருக்கலாம். எனக்குப் பிடிச்சிருக்கு ரங்கா.

அனுஜன்யா

வெ.இராதாகிருஷ்ணன் said...

எழுத்தாளருக்கு எப்படி சோறு கிடைக்கும் என்றிருந்த நிலை என்பதை விட எழுத நினைப்பவரெல்லாம் கவிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகிக்கொண்டிருக்கும் காலமிது. மேலும் எழுத்துக்கள் பிரபலமாகாதவரை என்ன எழுதினாலும் அந்த எழுத்துக்கள் தனது அங்கீகாரத்தைப் பெறுவதில்லை. அதற்கான முயற்சி இருந்தால் கைகூடும் என்பதை மறுப்பதற்குமில்லை.

பல எழுத்தாளர்களின் கற்பனையே இன்றைய விஞ்ஞானத்திற்கு அடிப்படை எனவும் கொள்ளலாம்.
தொழில் அதிபர் தனது கவிதைகள் எல்லாம் புத்தகமா போட மாட்டாரு போல!

Anonymous said...

கனவு ஊற்றுக்கள் இப்படித் தான் கை நழுவிப் போய்விடும் எதற்காகவும் நாம் நம்மை விட்டுத் தரக்கூடாது....வாழ்க்கை சம்பாதிக்க மட்டுமல்ல சந்தோஷிக்கவும்.. நல்லாய்ருக்கு ரங்கா...

cheena (சீனா) said...

அன்பின் ரங்கா

அருமை அருமை

சுயத்தை இழக்காமல் - உலகத்தையும் இழக்காமல் வாழ்வதே மேல்

நல்ல சிந்த்னை - இயல்பான நடை

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.