குழந்தை தொழில்!! :
இந்தா கொழந்தெ நேரா பாரு...
ஆங்..,,இப்போ லேசா தலைய சாயி..
அட..எரும மாடே.. எதுக்கு இப்போ அதை கீழே போட்டே..!!
கைத்தவறி விழுந்திடுச்சு சாமி... அழுதாள் பானு.
பளாரென அறைந்தார் முதுகில்..மீண்டும் ஒரு அடி.
செங்கல் சட்டியை மீண்டும் தலையில் ஏற்றினார்.
ம்ம்.. இப்போ ஒழுங்கா பிடி..
நேரா பாரு..
நட..
ம்ம்.. சரி...போதும்..போய் காச வாங்கிக்க..
கிளம்பினார் ராமு.
குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம் பற்றிய விளம்பரத்திற்கு
படங்கள் தயார் செய்துவிட்டார்.
பானு மதிய உணவுக்கு காசு சேர்த்துவிட்டாள்.
-----------------------
நேரம் சரியில்லை!! :
அப்பா..ப்ளீஸ் பா..
என்னடா குமார்?
அப்பா..வாங்கி குடுங்கப்பா..
ம்ம்..பார்க்கலாம்..
பா..ப்ளீஸ்ப்பா.. இன்னிக்கே வேணும்..
என் ஃப்ரெண்ட்ஸ் எல்லார்கிட்டயும் இருக்கு.
எனக்கும் ஒண்ணு வேணும்பா..
சரிடா.. அதான் வாங்கிதரேன்னு சொல்றேன்ல..
இதுக்கு மேல பேசினா அடிதான் விழும்..
நீ அடிச்சாலும் பரவால்ல..வாங்கி தரேன்னு சொன்னாதான்
விடுவேன்..
ஏய்..சொல்லிட்டே இருக்கேன்..
குமார் , அம்மாஆஆஆ....!!
குமாரை லேசாக தள்ள ..தள்ளிய வேகத்தில் அவன் கீழே படிகளில் சரிந்து விழுகிறான்.
ச்சை..இதெல்லாம் ஒரு புள்ளை.. ஒரே நச்சரிப்பு..
நீயும் உன் புள்ளையும்...
அடிப்பட்ட மகனை கவனிக்காமல் ஆபிஸ் கிளம்பி போகிறார்.
அவரை கண்ணீரோடு முறைக்கிறாள் சிவகாமி.
...
ஆபீஸில் வேலையே ஓடவில்லை.
எதோ பெரிய தவறு செய்ததாய் உணர்கிறார்.
..
மாலை..
டேய்.. குமார்.. இங்க பாரு.
அப்பா என்ன வாங்கி வந்துருக்கேன் பாரு..
நீ கேட்ட ரிஸ்ட் வாச்..
..எங்கடா இருக்க..குமார்..குமார்..
குரல் கேட்டு வெளியே சிவகாமி வர..
ஏய்..குமார் எங்கடி?
உள்ளதான் இருக்கான் போங்க..
புன்னகையோடு உள்ளே போகிறார்..
குமார்..இந்தா நீ கேட்ட ரிஸ்ட் வாட்ச்..
அப்படியே அதிர்ந்து போனார்...கண் கலங்கினார்.
குமாரின் இடது கையில் பெரிய கட்டு.
வலது கையில் மணிக்கட்டு வரை சிராய்ப்புகள்.
(பி.கு).
குழந்தைகள் நம் நாட்டின் வீட்டின் எதிர்கால தூண்கள்.
நாம் இந்த பூமிக்கு வந்தோம் என்பதற்கு அவர்கள் தான் சாட்சி.
உங்களால் முடிந்தால் ஒரு குழந்தைகான கல்வி செலவை ஏற்றுகொள்ளுங்கள்.
வலிமை இல்லாதவர்களிடமும், குழந்தைகளிடமும் தன் வலிமையை கோபத்தை காட்டுபவன் மிருகமாக கருதப்படுவான்- திருக்குறள்.
20 comments:
அருமை ரங்கா..
கதைகள் ரெண்டும் நல்லா வந்திருக்கு
ரங்காஜி, இதை உங்களோட அனுமதியோட பேரண்ட்ஸ் கிளப்ல குறள் கதைகள் செக்ஷன்ல சேர்த்துக்கிடலாமா ?
குறள் வைத்து நல்லா குரல் கொடுத்து இருக்கீங்க ரங்கா
ரெண்டுமே அருமையான கதைகள்
குழந்தைத் தொழிலாளர்கள் - கதையும் - ரிஸ்ட்வாட்ச் கதையும் மிக மிக அருமை
நல்வாழ்த்துகள்
முதல் கதையே ஒரு ஹைக்கூ.
அடுத்த கதை ஒகே.
ஆனா மாப்பி நான் உங்கிட்ட இருந்து இன்னும் நிறையா எதிர்பார்கிறேன். நல்லா ஃபீல் பண்ணி எழுது.
ம்ம்ம்...நல்லாருக்கு! பூங்கொத்து!
ரொம்ப நுணுக்கமாப் பார்க்கிறீங்க. உதாரணம்: குழந்தைகள் தாங்கள் எதிர்பார்க்கும் பதில் வரும்வரை பெரும்பாலும் கேட்ட கேள்வியையே கேட்பாங்க.
அருமை.
@புதுகை தென்றல்,
ரொம்ப நன்றிங்க.
@jeeves,
சேர்த்துக்கோங்க..
மிக்க மகிழ்ச்சி.
@நட்புடன் ஜமால்,
குரலில் குறளும் சேர்ந்து வந்துடுச்சிங்க..!!
நன்றி ஜமால்
@ சீனா,
ரொம்ப நன்றி மாம்ஸ்.
@ ஜோசப் பால்ராஜ்,
உங்கள் கருத்துக்கு நன்றி ஜோ.
இன்னும் ஃபீலிங்கா? அப்புறம் அழுதுகிட்டே தான் எழுதணும்.
அவ்வ்வ்!!
@ அன்புடன் அருணா,
ரொம்ப நன்றி அருணா.
உங்கள் வருகை எனக்கு மிக்க மகிழ்ச்சி.
@சங்கா,
நுணுக்கமான பார்வைன்னு சொல்லி இருக்கீங்க.
ஆனால் நான் சிறு வயதில் நடந்து கொண்டதை நினைத்து பார்த்து எழுதியது தான் இந்த இரண்டாம் கதை.
நன்றி சங்கா.
உங்கள் வருகை எனக்கு மிக்க மகிழ்ச்சிங்க!!
நல்ல கருத்தை அழகாக வலியுறுத்தி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
அருமையா இருக்கு ரங்கா!
ரெண்டு கதையுமே அருமையா இருக்குங்க ரங்கா
அருமை
அருமை ரங்கா. நெகிழவைத்த பதிவு.
மழைத்துளிகள் அருமை!
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.