Friday, July 17, 2009
உங்கள் பதிவுலக நண்பருக்கு ஒரு விருது!
நெடு நாட்களாக இந்த ஆசை மனதை நெருடிக்கொண்டே இருந்தது.
இன்று அதற்கான சிறப்பான வழி ஒன்று கிடைத்துவிட்டது.
ஆம்.. அதுதான் இந்த பதிவர் என் சிறந்த நண்பர் விருது!
(This Blogger is My Best Friend!) விருது.
இதை ஏற்படுத்த காரணம் உண்டு.
முதல் காரணம்: என்னால் இந்த பதிவுலகத்திற்கு எதாவது நல்லது செய்ய முடியுமா என்கிற ஏக்கம்.
இரண்டாவது காரணம்: நீங்கள் நான் எல்லாருமே இனி இந்த விருதை பார்க்கும்போது ஒரு நட்புணர்வும்,நம்பிக்கையும் வருமே
அதற்காக தான்.
மூன்றாவது காரணம் : பதிவுலத்தில் நிலவும் நம்பகமற்ற தன்மையை விலக்கவே இந்த விருது.
இந்த காரணங்களை முன்னிட்டே இந்த விருது உருவாக்கப்பட்டது.
இந்த விருதுக்கு சில கண்டிஷன்கள் உண்டு :
1. நீங்கள் இதை எத்தனை பேருக்கு வேண்டுமானால் தரலாம்.
2. கிஃப்ட் எதும் தருவதாக இருந்தாலும் தரலாம்.
3. அவர்களிடம் உங்களுக்கு பிடிச்ச விஷயம், ஏன் அவருக்கு தருகிறீர்கள் என்பதை ஒரு வரியில் சொல்லிவிட வேண்டும்.
4. எக்காரணம் கொண்டும் விருது நீக்கப்பட கூடாது.
அப்படி நீக்கப்பட்டால் அதற்கான காரணத்தை உங்கள் நண்பருக்கு தெரிவிக்கவும்.
எனக்கு பிடித்த பன்னிரெண்டு பேர் :
1. நாமக்கல் சிபி
(நம்மை இந்த பதிவுலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர், தல)
2. தமிழரசி
(ரெண்டாவது அம்மா, இதுக்குமேல சொல்ல ஆரம்பிச்சேன் ஒரு வரி பத்தாது)
3. புதுகைத் தென்றல்
(நல்ல தோழி, இவங்க பதிவில் இல்லாத நல்ல விஷயங்களே இல்லை எனலாம்)
4. குசும்பர்
(இவர் பதிவு பக்கம் போனாலே என்னை வீட்டில் ஒரு மாதிரி பாக்குறாங்க..அப்பூடி சிரிப்போம்ல!!)
5. வடகரை வேலன்
(சார்.. சிம்பிளி சூப்பர் சார், எழுத்தில் எளிமை அத்தனை எழுத்துக்களும் அருமை)
6. தூயா
( ஒரு பெண் பூ..ஒரு பெண் போராளி, இவங்க கிச்சன் எனக்கு உசுரு)
7. ஜீவ்ஸ்| jeeves
(நல்ல நண்பர்...புகைப்படங்களில் பேசுவார், இவரிடம் பேச ஆரம்பிச்சேன்... நாள் போறதே தெரியாது, ஒரு மனித லைப்ரரி)
8. ஜெஸ்வந்தி
(கவிதையிலும் கதையிலும் என்னை சிந்திக்க வைத்தவர்)
9. நட்புடன் ஜமால்
(இவர் நம்ம ஆளு!, கமெண்ட் அடிச்சே நண்பர்கள் சேர்த்தவர், நல்ல மனிதர்)
10. ரம்யா
(இவங்களோட பயணக் கட்டுரைக்கும், குட்டீஸ் கதைகளுக்கும் நான் ரசிகன்)
11. மயாதி
(இவரின் கொஞ்சும் கவிதைகள் என் மனதை கொஞ்சும்)
12. சுரேஷ் குமார்
(இவரின் எழுத்து நடை என்னை மிகவும் கவர்ந்த ஒன்று!)
இன்னும் பலர் இருக்காங்க..ஆனால்.. என் விதிய நானே மீறக்கூடாது .. அதனால் மத்தவங்க கோச்சிக்காதீங்க..
(டிஸ்கி)
ஆமா..இந்த விருதை எனக்கு யார் தர போறீங்க?
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
மிக்க சந்தோசம் ரங்கா! தாங்கள் நண்பன் என்பதில் எனக்கு மிகவும் சந்தோசம்!
அப்புறம் தூயா பற்றி சொல்லி இருக்கும் பொழுது வாக்கியம் முடிவு அடையவில்லை
//இவங்க கிச்சன் எனக்கு உசுரு// ”போற இடம்” என்று முடியனும்:)
:-))) விருதுகளைக் காட்டுறதுக்கெண்டே தனி ப்ளாக் ஆரமபிக்கணும் போல இருக்கே...
அன்பின் ரங்கா,
விருதுக்கும் உன் அன்பிற்கும் நன்றி.
நன்றி ரங்கன், என்ன இப்படி எல்லாரும் சேர்ந்து எனக்கு அதிர்ச்சி கொடுத்துக் கொண்டே இருக்கிறீங்க.உங்கள் நண்பி என்று விருது போடுவதில் மகிழ்ச்சி.அதைவிட என் கதைகள் உங்களைச் சிந்திக்க வைத்தது என்று சொன்னீர்கள் பாருங்க ,அது அதைவிட மகிழ்ச்சி.
என் நல்ல நண்பர்களையும் நீங்கள் தெரிந்து கொண்டு விட்டீர்கள். உடனே பதிவு போடாவிட்டால் எனக்கு யாருமே மீதியிருக்க மாட்டார்கள் போல் தோன்றுகிறது.
நல்ல விஷயம்தான். வாழ்த்துக்கள் நண்பர்களே
Ranga, you made my day! TXXX
சரவணண்ணா, எப்படி கொஞ்ச உடாங் சம்பல் அனுப்பவா??
ஆஹா! விருதுகள் வாரமா!
மிக்க நன்றிப்பா என்னையும் உங்கள் வட்டத்தில் இனைத்தமைக்கு.
ரங்கா,உங்களுக்கு நான் குடுக்கிறேன். காரணம் வேணுமா? அறிமுகமில்லாத என்னுடைய இடுகையைப் படிச்சுட்டு உளமாறப் பாராட்டிப் பின்னூட்டம் போட்டீங்களே, அது ஒண்ணு போதுமே!
அன்புடன்
சங்கா
நன்றி ரங்கா.
நட்பு என்று எனக்கு கிடைத்திருக்கும் விருது சந்தோஷத்தை தருது.
அன்பின் ரங்கா
நல்ல நண்பர்களை - சக பதிவர்களை கவுரவிக்கும் பொருட்டு நீ வடிவமைத்து வழங்கிய விருது அருமையாக இருக்கிறது நன்று நன்று நல்வாழ்த்துகள்
மாம்ஸ்...
நன்றி சொல்லி அந்நியப் படுத்திக்க விரும்பல... பதிவு வரும் சீக்கிறம்
குசும்பன்,
மதுவதனன்,
ஜெஸ்வந்தி,
வடகரை வேலன்,
நவாஸுதீன்,
தூயா,
நட்புடன் ஜமால்,
சங்கா,
புதுகைத் தென்றல்,
சீனா மாமா,
ஜீவ்ஸ்..
இந்த விருதை ஏற்றுகொண்ட அனைவருக்கும்,
அதை வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!!
விருதுக்கு நன்றி ரங்கா..
அதுவும் உங்களின் நண்பன் என்றுகொண்டு விருதளித்தமைக்கு நன்றி நண்பா..
நண்பனின் நண்பன் தனக்கும் நண்பன் என்பதுபோல் நம் இருவருக்கும் இடையில் பாலமாய் அமைந்திட்ட தமிழுக்கும் நன்றிகள்..
எப்போதும் நமது நட்பு சிறந்து விளங்க வாழ்த்துக்கள்..
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.