Thursday, July 23, 2009

இரண்டாவது மணநாளில்!!


இன்று பார்கவனுக்கும், ஹேமாவுக்கும் இரண்டாவது கலியாண நாள்

என்னங்க.. ஸேரி நல்லா இருக்கா?

ம்ம்.. சூப்பர்.. அழகா இருக்குடா.

தேங்க் யூ டா தடியா!!

ஹேய்..என்ன கொழுப்பா? அடிங்க!

ஹாஹா..சும்மா . கண்ணடித்தாள் ஹேமா.


ஏங்க..அத்தைக்கு முந்திரி பக்கோடா, மாமாவுக்கு மெதுவடையும், முறுக்கும் பண்ணி இருக்கேன்.

பாவம் மாமா அத்தை இதெல்லாம் சாப்பிட வாய்ப்பே இல்லாம போச்சு.

பார்கவன் நெகிழ்ந்தான்.

ம்ம்.. உண்மைதான் ஹேமா.

உன் அக்கறை என்னை சிலிர்க்க வெக்கிது.

தோ..நான் கூட அப்பாவுக்கு பிடிச்ச மாதிரி டிரஸ் பண்ணி இருக்கேன்.

ம்ம்..கலக்குறீங்க.

சரி..சீக்கிரம் வாங்க அவங்க வெயிட் பண்ணிட்டு இருக்க போறாங்க!!

வீட்டு கதவை பூட்டிவிட்டு கிளம்பினார்கள் இருவரும்.

முதியோர் இல்லத்திற்கு!!



29 comments:

Rangs said...

பீலிங்கா இருக்கு ரங்கா.. இம்ப்ரூவ்மென்ட் தெரியுது..பர்பெக்சன் பக்கம்தான். சீக்கிரம் கை கூடிரும்

நாமக்கல் சிபி said...

ம்! என்னத்தைச் சொல்ல!

Ungalranga said...

@Rangs,

ரொம்ப நன்றி ரங்க்ஸ்,

கதைய சொல்ல வர கருத்தை பற்றி எதுவும் சொல்லலியே ஏனோ?

ஜோசப் பால்ராஜ் said...

இன்னைக்கு பெற்றோர் தினமாம் மாப்பி. கலக்கலா கதை எழுதியிருக்கடே. உன் சமூக அக்கறை எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு.

Ungalranga said...

@ஜோசப் பால்ராஜ்,

என் சமூகத்து மேல நான் அக்கறை படாம வேற யாரு படப்போறா?

மனுஷங்க மாற மனசும், மனுஷங்களும் இருந்தா போதும்.

நன்றி ஜோ!!

மின்னுது மின்னல் said...

டக்கராகிது ’சிறு’ கதை

கதையை படிச்சிட்டு தலைப்ப பார்த்தால்
தலைப்பே நிறைய மேட்டர் சொல்லுது தல !!!

Anonymous said...

திருத்தினால் சரி.. இப்படி இன்னும் சீர்திருத்த கதைகளை எழுதுங்க....

தராசு said...

புடவை நல்லாருக்கான்னு கேக்கற பொண்ணு சுடிதார்ல நிக்குது,

ஹி, ஹி, பாட்டெழுதி பேர்வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்ன்னு நீங்க சொல்றது கேக்குது, இருந்தாலும் கருத்து சொல்லும்போது நாங்க கொஞ்சம்..........

மங்களூர் சிவா said...

சிறுகதைன்னு என்னமோ சொன்னியே அது எங்க??

Ungalranga said...

@தராசு,

மன்னிச்சுடுங்க.. வேற பிக்சர் சரியா அமையலை,

எக்ஸ்பிரஷனை பார்த்து டிரஸிங்கை கவனிக்கலை.

அடுத்த முறை இந்த தவறு நடக்காது!

SK said...

இரண்டாவது மன நாள் என்பதிலேயே சூட்சமம் இருக்கு.. :)

நல்லா இருந்தது.

Do you have any problem with template or is it giving problem for me ?? :( Comments cannot be seen properly.

Ungalranga said...

@SK,
உங்கள் பிரவுசரில் எதும் பிரச்சனையாக இருக்க கூடும்.
டெம்பிளேட்டில் பிரச்சனை இருக்க வாய்ப்பு இல்லை.

உங்கள் வருகைக்கு நன்றி.

நட்புடன் ஜமால் said...

ரொம்ப எளிமையாக சொல்லிட்டீங்க

ராமலக்ஷ்மி said...

இரண்டாவது மணநாளுக்குள் பெற்றவர்கள் முதியவர் இல்லத்தில்...:(! 'நறுக்'கெனச் சொல்லியிருக்கிறீர்கள்!

Iyappan Krishnan said...

நல்ல சிறுகதை. முகத்தில் அறையும் உண்மை.

கும்மாச்சி said...

சிறிய சிறுகதை, நறுக்குன்னு சொல்லியிருக்கிங்க.

सुREஷ் कुMAர் said...

//
இன்று பார்கவனுக்கும், ஹேமாவுக்கும் இரண்டாவது கலியாண நாள்
//
மொதோ கலியாணம் யார் யார்கூட பண்ணிகிட்டாங்கனு சொல்லவே இல்லை..

jothi said...

கதையல்ல நிஜம்,.
நிஜமாய் இருக்ககூடாத கதை

सुREஷ் कुMAர் said...

சொல்லவந்த கருத்தை மிகஎளிமையா, நல்லா சொல்லிட்டிங்க..
நல்லா இருந்தது ரங்கா..
வாழ்த்துக்கள்..

ப்ரியமுடன் வசந்த் said...

feelings............. தொடர்ந்து எதிர் பார்க்கிறோம் இது மாதிரி

Kumky said...

இதன் தொடரா பெற்றோர் தரப்பு கதையும் எழுதலாமே...?

cheena (சீனா) said...

ஆகா ஆகா ரங்க கலக்குறிய

கடஹ் நல்லா டச்சிங்கா இருக்கு

திருப்பம் எதிர் பாத்தது தான்

நல்வாழ்த்துகள்

Radhakrishnan said...

அது சரி, பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விடும் பிள்ளைகளை கண்டிக்கிறீங்கபோது, இப்படி முதியோர் இல்லத்தை வசதி படைத்தோர்க்கும் தங்க இடம் இருப்போர்க்கும் ஏற்படுத்திய மனிதர்களை ஏன் கண்டிக்க மறுக்கிறோம்?!

பெற்றவர்களைத் தெருவில் விட எந்த மனமும் தான் சம்மதிக்குமா? முதியோர் இல்லம் இருக்கு எனக்கு என்ன கவலை என செல்லத்துடிக்கும் பெற்றோர்களின் மனதும்தான் சம்மதம் தருமா?

வாய்ப்புகளும் வசதிகளும் பெருகிட பல விசயங்கள் கேலிக்கூத்தாகிப் போனது என்னவோ உண்மை.

எழுதியது நன்றாக இருந்தது. நன்றி

அன்பேசிவம் said...

நல்லா இருக்கு ரங்கா, இன்னும் எதிர்பார்க்கிறேன்.:-)

S.A. நவாஸுதீன் said...

முதியோர் இல்லம், சமூகத்தின் சாபக்கேடு. நறுக்குன்னு சொல்லிட்டீங்க ரங்கா

துபாய் ராஜா said...

அருமை அருமை.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அருமையான கருத்தை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் ரங்கன்.

Ungalranga said...

@ராமலஷ்மி,
@நட்புடன் ஜமால்,
@ஜீவ்ஸ்,
@கும்மாச்சி,
@சுரேஷ் குமார்,
@ஜோதி,
@பிரியமுடன் வசந்த்,
@சீனா,
@கும்க்கி,
@வெ. ராதாகிருஷ்ணன்,
@முரளிகுமார்,
@நவாஸுதீன்,
@துபாய் ராஜா,
@ஜெஸ்வந்தி,

வாழ்த்திய அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்!!

Unknown said...

சிறந்த சிந்தனை..

செல்ல வந்த கருத்தை மிகவம் அழகாக செல்லிட்டீங்க..

அருமையா.. அருமை...

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.