Tuesday, July 7, 2009
எவரும் எழுதலாம் கவிதை!!
கவிதை எழுவது என்பது.. காதலிப்பதை போல.
ஆனால் சிலர்..
- "இப்போது எல்லாம் கவிதை என்கிற பேரில் கிறுக்க ஆரம்பித்துவிட்டனர் பலரும். ஒரு பத்து கவிதை எழுதுகிறார். கவிஞராகி விடுகிறார். "
என்று கவிதை வராத பலர் உளறிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் விஷயம் அப்படியல்ல. கவிதை எழுவது என்பது.. காதலிப்பதை போல. கவிதை என்றால் வாலியும், வைரமுத்துவும், கண்ணதாசனும், வண்ணதானும், பா.விஜயும், பழனிபாரதியும்
மட்டுமே எழுத வேண்டும் என்றில்லை. அது ஒரு காதல். காதலுக்கு பேதங்கள் இல்லை. இவர்தான் காதலிக்க வேண்டும் என்று எவரையும் தனியே குறிப்பிட முடியாது. அது எல்லாருக்கும் பொது. அது போல் தான் கவிதையும்.
அது பூவுக்குள்ளும் இருக்கும். நேற்று பார்த்த அவளின் கண்ணுக்குள்ளும் இருக்கும்.
அது எல்லாருக்கும் பொதுவானது. அது காற்றை போல.
சரி விஷயத்திற்கு வருகிறேன்.
கவிதை.. ஆஹா.. சொல்லும்போதே இனிமையான.. மகிழ்ச்சியான.. மற்றும் பல எண்ணங்களை ஏற்படுத்திகொடுக்கிற ஒரு வார்த்தை.
வார்த்தை என்று சொல்வதை விட.. அதை ஒரு மையம் என்று சொல்லலாம். ஆம் கவிதை தான் எழுத முயல்கிறோம். ஆனால் கவிதை நம்மிடம் இருந்து பிறந்து நம்மையே எழுதிவிடுகிறது.
நம் எண்ணங்களை அள்ளி தன்னகத்தே கொண்டு.. ஆங்கே ஓர் இணைவை உருவாக்கிவிடுகிறது.
இப்படிப்பட்ட கவிதைகளை எழுத ஏன் நாம் தயங்குகிறோம்.. ஏன்?
வார்த்தைகள் வந்து விழ வேண்டுமே .. வருவதில்லையே.
என்னை பொருத்த வரை வார்த்தைகள் ஒரு பொருட்டே அல்ல. எப்படி?
ஒரு குழந்தை பார்த்து அதன் அருகில் சென்றதும் என்ன செய்கிறோம்.. ஆஆஅ.. ச்ச்சூசு.. என அதற்கு புரிந்த மொழிக்கு நம் மனம் தாவிவிடுகிறது.
அதே போல் தான் கவிதையும். உங்களுக்கு வர வேண்டிய வார்த்தைகள் தானாய் வந்து விழும்.. நீங்கள் வழிவிட்டால் மட்டும் போதும்.
ஓஷோ சொல்வார்.
“நீ உன் கதவை திறந்து மட்டும் வை. வரும் காற்றை வா.. வா. என்று அழைத்துகொண்டு இருக்க வேண்டியதில்லை. அது உனக்கானது நிச்சயமாக. அது உனக்கு வந்தே தீரும். நீ செய்ய வேண்டியதெல்லாம் உன்னை நீ திறந்து வைத்திரு. எதையும் போட்டு குழப்பிகொள்ளாமல் தயாராய் மட்டும் இரு.”
அவ்வளவுதான்.
நீங்கள் கவிதை எழுத முடிவு எடுத்து பேனாவோடு அமர்ந்துகொண்டு ..கவிதையே வா.. என்று கூவினால் வரப்போவதில்லை.மிஞ்சி போனால்.. அடுத்த
அரை மணி நேரத்தில் நீங்கள் அடுத்த வேலையில் இருப்பீர்கள் ..அல்லது தூங்கிகொண்டு இருப்பீர்கள். அவ்வளவே..
பின்ன எப்படி தான் வரும் கவிதை ?
கவிதை.. அது வந்து போகும் ஒரு பொருளோ. எண்ணமோ அல்ல. அது எப்போதும் இருக்கிறது.
நீங்கள் காய்கறி வாங்கும் போதும், பல் துலக்கும்போதும்,
நடக்கும்போதும் அது எப்போதும் இருக்கிறது.
நீங்கள் செய்ய வேண்டியது அதை உணர வேண்டியது மட்டுமே. அந்த போதை வஸ்து உங்களுக்குள்ளேயே
ஊறி கிடக்கிறது.
நீங்கள் போதையை(கவிதையை) உணர நீங்கள் தான் இடைஞ்சல். அதை புரிந்து கொள்ளுங்கள்.
சரி எப்படித்தான் உணர்வது?
கடவுளையும் கவிதையையும் .. அதன் உணர்வையும் எந்த மொழியாலும் சொல்ல முடிந்ததில்லை. அதற்கு வார்த்தைகளே இல்லை.
எனக்கு தெரிந்த ஒரே வழியை சொல்கிறேன்.
நல்ல ஒரு பாடலை கேளுங்கள். அதன் வரிகளை ரசியுங்கள். முடிந்தால் ஆடுங்கள். பாடுங்கள். அனுபவியுங்கள்.
உங்களுக்குள் ஒரு சிலிர்ப்பு பரவும். அருவியின் சாரல் பட்டால் உடல் சிலிர்க்குமே அந்த சிலிர்ப்பு வரும்.
அப்போது எடுங்கள் பேனாவை.
அடுத்த பத்து நிமிடங்களில் நீங்கள் ஒரு அழகான அற்புதமான வரிகள் கொண்டு ஒரு கவிதையை புனைந்திருக்கிறீர்கள்.
முயன்று பாருங்கள்.
உங்களுக்குள் பரவசத்தை கொண்டு வரும் வழி எது என்று கண்டுபிடியுங்கள்.
பிறகு நீங்களும் ஒரு மகாகவி.
Labels:
கட்டுரைத்தல்,
கவிதை,
சமூகம்,
சிந்தனை,
புதுமை
Subscribe to:
Post Comments (Atom)
32 comments:
unga pakam super ya...
உண்மை தான்
எழுதும்போது நானும் உணர்கின்றேன்.
வலைப்பதிவின்
வடிவமைப்பு நன்றாக இருக்கிறது.
@முரளி ஐயங்கார்,
நன்றி முரளி.
பக்கத்தை ரசிச்சுட்டு விஷயங்களை விட்டுடாதீங்க. தொடர்ந்து படிங்க.
@திகழ்மிளிர்,
வருகைக்கு நன்றி திகழ்மிளிர்.
உணர்ந்து எழுதும் போதுதான் எழுத்தும் கவிதையாகிறது.
வித்தியாசமான பெயர்.. வாழ்த்துக்கள்!!
கதை சூப்பர்! வாழ்த்துக்கள்.
லிங்க் குடுத்ததுக்கு ரொம்ப நன்றி சென்ஷி!
@மங்களூர் சிவா.
ஆரம்பிச்சுட்டீங்களா.. !!
ஆண்டவா...காப்பாத்து சிவாவை.
டெம்ப்லெட் சூப்பர்.
இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும் என்னையும் கவிஞன் ஆக்காதே
இந்த பதிவ படிக்கும் போது இந்த பாட்டு வரி தான் ஏனோ ஞாபாகத்துல வருது தல
எல்லாஞ் சரிப்பூ..!
கவுஜை எங்க..? ஒரே வசனமாத்தான கீது..?!!!
எவரும் கவிதை எழுதலாம் - உண்மை தான் , அதான் நீ கூட எழுதிட்டல்ல.
அருமையான மற்றும் எதிர்பாராத திருப்பம்.
சீட் நுனியிலமர வைக்கிறது.
@உண்மைத் தமிழன்(15270788164745573644),
மதிப்பிற்குரிய அய்யா.. இது ஒரு கட்டுரை வடிவில் எழுதப்பட்டது.
நீங்கள் அய்யங்கார் ஆத்துல சிக்கன் கேட்டா எப்படி?
அபச்சாரம்..அபச்சாரம்.
@வேலன்,
சார்.. நீங்களுமா?
அவ்வ்வ்வ்வ்வ் :|
ரங்ஸ்,
இந்த டி.ராஜேந்தர் பாட்டு கேட்டா, இல்லாட்டி வம்பு சாரி சிம்பு பாட்டு அல்லது எஸ் ஜே சூயா பாட்டு கேட்டா பரவால்லியா?
எனக்கென்னமோ கவித வரல கொலை செய்யும் ஆசைதான் அதிகமா வருது.
அன்பின் ரங்கா
கொள்வதானலும் சரி - கொல்வதானாலும் சரி - கவுஜ எழுதப் போறேன். ஆமா - வருதா இல்லையானு பாத்துடறேன்
அய்யங்கார் ஆத்துல சிக்கன் இருந்தா அது லவ் மேரேஜ்னு தெரிஞ்சுக்கோ
கவிதை என்றால் ஒரு கட்டுக்குள் அல்லது ஒரு இலக்கணத்தில் இருக்க வேண்டுமா? அது ஒரு உணர்வு இல்லையா? எதையும் ரசித்தால் வரும் உணர்வுதான கவிதை?!அப்ப நான் எழுதிக்கிட்டிருக்கிறதெல்லாம் கவித கவித!
@சங்கா,
உண்மைதான். ஆனால் நீங்கள் எழுதுவதை கட்டுக்குள் கொண்டு வரவும் முயற்சியையும் செய்து பாருங்கள்.
உங்கள் கவிதை இன்னும் அழகானதாய் இருக்கும்.
வாழ்த்துக்கள்!!
வருகைக்கு நன்றி.
உங்களுக்குள் பரவசத்தை கொண்டு வரும் வழி எது என்று கண்டுபிடியுங்கள்.
பிறகு நீங்களும் ஒரு மகாகவி.\\
சரிதான் ரங்கா ...
மகா-கவி ஆகிடலாம் எளிதில், மகாகவி ம்ம்ம் ...
அய்யங்கார் ஆத்துல சிக்கன் இருந்தா அது லவ் மேரேஜ்னு தெரிஞ்சுக்கோ \\
ஹா ஹா ஹா
சீனா சார் ......................
இவர்தான் காதலிக்க வேண்டும் என்று எவரையும் தனியே குறிப்பிட முடியாது. அது எல்லாருக்கும் பொது. அது போல் தான் கவிதையும்.\\
சிலருக்கு காதலை எளிதில் வெளிப்படுத்த தெரியும்
பலருக்கு ...
அதுபோல கவிதையும்
பல சந்தர்ப்பங்களில் நாமும் வானவில்லை இரசித்து இருப்போம் பூக்களை கண்டு உள்ளம் மலர்ந்து இருப்போம், பனித்துளி அதிலே உருளக்கண்டு நம் மனதிலும் உற்சாக ஊற்று ...
(போதும்ட்டா ...)
யப்பா சாமி இதை எப்பவோ சொல்லியிருந்தால் நானும் கவிதை எழுதியிருப்பேனே இதைச் சொல்ல ஏன் இத்தனை நாள்.. நீங்கள் சொன்ன அத்தனை வழிகளிலும் இனி முயல்கிறேன் தம்பி.... பதிவு நிஜமாவே யோசிக்கவைக்கிறது.... நல்லாயிருக்கு ரங்கா...
@தமிழரசி,
அம்மா, தாயே.
நீங்க இந்த பதிவுக்கு விதிவிலக்கு.
ஏனெனில் நீங்களே ஒரு கவிதை தொழிற்சாலை.
உங்களுக்கு தனியா வழிகள் வேற சொல்லித்தரணுமா?
என்ன காமெடி பண்றீங்களா என்கிட்ட..
ஆஹா! சூப்பர்!
டெம்ப்ளேட் அருமையாக இருக்கிறது!
@ நாமக்கல் சிபி,
இருக்கட்டும். நாமக்கல் பகவதி அம்மன் கோவில் தெரு தானே.. வந்து வெச்சிக்கிறேன். ங்கொ..
anehamaaha oshovin ellaa puthagangalayum padithiruppeergal ena ninaikkiren..
ungal eluthukkalil oshovin thakkam athigam ullathu...
ingu koorappattirukkum anaithum mihachariyaanathe!!!
//உங்களுக்கு வர வேண்டிய வார்த்தைகள் தானாய் வந்து விழும்.. நீங்கள் வழிவிட்டால் மட்டும் போதும்//-ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க.
பெண்ணை காதலி தானாக கவிதை வரும்.
romba super
நேசிப்பு மட்டுமே கவிதைக்கான நேர்த்தி கடன்...
nice said...
naanum ezhudha ninaikiren
SUPER
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.