”அய்யயொ.. இன்னிக்கும் அம்மா வீட்டில் இல்லையா?”
வருத்தத்துடன் ராமன் விலாஸுக்குள் நுழைந்தாள் கனகா.
அவள் அந்த வீட்டு வேலைக்காரி.
”கனகா, நல்லா இருக்கியா?” என்றார் ராமன்.
வயது 60-ஐ தொட்டிருக்கும்.
பகீர் என்றது கனகாவிற்கு.
“ம்ம்..இருக்கேன் ஐயா”
என்றாள்.
அடடா இன்னிக்கு இவர் மட்டும் தான் வீட்டில் இருக்கார் போல.
போன முறை இதே போல் சிக்கிகொண்டு நான் பட்ட பாடு.
அப்பப்பா எந்த பெண்ணுக்கும் அப்படி ஒரு நிலைமை வரகூடாது.
ஆனால் இன்று மீண்டும் அதே நிலைமை எனக்கு வந்துவிட்டதே..
மனதுக்குள் கலங்கினாள்.
பாத்திரங்களை சீக்கிரம் விளக்கி வைத்துவிட்டு முடிந்தால் சொல்லாமலே ஓடிவிட வேண்டும்.
இவரிடம் சிக்கினால் இன்று அதோகதிதான்.
கடவுளே காப்பாத்து என்று வேண்டிக்கொண்டாள்.
*******
ஒருவழியாக பாத்திரங்களை விளக்கி முடித்தாயிற்று.
கிளம்பிடலாம் என்று எழுந்த போது பின்னால் யாரோ நிற்பதை உணரமுடிந்தது.
திரும்பி பார்த்ததும் திடுக்கிட்டாள்.
ராமன்.
முகத்தில் புன்னகையோடும், கண்களில் ஆசையோடும் நிற்கிறார்.
”அம்மாடி கனகா, எனக்கு கால் வலி , கொஞ்ச நேரம் கால் அமுக்கி விடேன்”.
மறுக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் விதியை நொந்தபடி அவர் அறைக்கு நடந்தாள்.
நாற்காலியில் அவர் அமர இவள் கீழே அமர்ந்து கொண்டு கால் அமுக்க ஆரம்பித்தாள்.
ராமன் கனகாவின் அருகில் நெருங்கி பேச ஆரம்பித்தார்.
“இப்ப நாடு நிலைமையே சரியில்ல கனகா, நாங்க 1948-ல லக்னோவில் இருந்தபோது........”
.
.
.கனகா மனதுக்குள் கதறினாள்.
”போன வாரமும் இதே போல் 2 மணி நேரம் வரலாறு பேசி அறுத்து தள்ளிச்சு கிழம்.இந்த வாரம் தப்பித்துவிடலாம் என்று பார்த்தால் இந்த வாரமும் சிக்கிவிட்டேன்.
ஹூம்ம்.. விதி வலியது!!”.
8 comments:
Hi, it's a very great blog.
I could tell how much efforts you've taken on it.
Keep doing!
கத நல்லா இருக்கு - முடிவு எதிர் பாத்ததுதான் - நல்லாப் போகுது - நல்வாழ்த்துகள்
ஓ.கே...,
நன்று. ஆனால் அவர் வயதை 80 என்று கதையை மாற்ற வேண்டும். அல்லது படத்தை மாற்ற வேண்டும் என்று தோன்றுகிறது நண்பரே.
சீனா ஐயா! சொன்னதையே நானும் சொல்லிக்கிறேன்.
இந்த முகம் ‘ரோஜா’ படத்தில் வருபவர் போல் உள்ளது.
முடிவை உத்தேசிக்க முடிந்தாலும் கதை நன்றாக இருக்கிறது நண்பா.
Udambhu sari illaya.....
முடிவு முன்பே தெரிந்தது
என்ன பண்றது ரங்கா நம்ம தாத்தா பாட்டிகளின் சொந்த கதைகளை கூட நம்மவர்கள் கேட்பதில்லை அவர்கள் கூறும் வரலாறையா கேட்க்கப்போகிறார்கள்....
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.