Wednesday, July 15, 2009

"சக்தி"ய கொன்னுட்டாங்க!!

இந்த கதைக்கும்.. நமது சக்தி எனும் பெயர் கொண்ட பதிவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவித்துகொள்கிறேன்.








இல்லீங்க நான் வரலை..

ஏண்டி திமிரா.. சொல்லிட்டே இருக்கேன் வரலைன்னா என்ன அர்த்தம்?
தேவை இல்லாம என் தங்கச்சி முன்னாடி அவமான பட சொல்றியா..?ஒழுங்கா கிளம்பு.

இல்லீங்க..எனக்கு நிஜமா ஒடம்புக்கு முடியலை..கை கால் எல்லாம் ஒரே வலி..நீங்க போய்ட்டு வாங்க..

ஹேய்..சொல்லிட்டே இருக்கேன்..

“பளார்”..

ச்சி.. நீயெல்லாம் ஒரு ஜென்மம்.. சுத்த நோஞ்சானை எனக்கு கட்டி வெச்சு..வாழ்க்கையையே வீண் பண்ணிட்டாங்க..

நானே போறேன்.. நீ இங்கயே கிட..

பஸ் ஏறினார் சந்திரன்.

தன் தங்கை வீட்டு கறி விருந்திற்கு.



ம்ம்..வாங்க அண்ணே!!

ம்ம்..வரேன் மா.. நல்லா இருக்கியா ?

நல்லா இருக்கேன் அண்ணே!! அண்ணி வரலையா ?

அவளுக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியலையாம்..அதான் வரலைம்மா..!!

என்னமோ..சரி அண்ணே!!

ஆமா.. இந்த அருண் பையன் எங்க போனான்?
மாமான்னு ஓடி வந்து கட்டிப்பான்.. இப்போ எங்க போனான்?

உள்ளதான் அண்ணே இருக்கான்.. டேய் அருண்!! மாமா பாருடா..!!

அருண்,ம்ம்.. போம்மா.. நான் மாட்டேன்.!!

சரி..விடுமா.. நானே பாத்துக்குறேன் அந்த வாலை!!

..அறைக்குள் செல்கிறார் சந்திரன்.

டேய்.. கண்ணா..!!

ம்ம்..

என்னடா, என்ன இப்படி உக்காந்து இருக்க.. என்ன ஆச்சு அருணுக்கு?

அருண் விசும்ப ஆரம்பிக்குறான்.

அடுத்த சில கணங்களில் கண்களில் நீர் தேங்க ,அழ ஆரம்பிக்கிறான்.

டேய்..கண்ணா!! என்னடா என்ன ஆச்சு?

ஹேய்..ஏன் அழற? அட..மாமா இருக்கேண்டா சொல்லுப்பா என்ன ஆச்சு..!!

சந்திரனின் மார்பில் விழுந்து அழ ஆரம்பிக்குறான்.

என்னடா ஆச்சு..? சொல்லுப்பா..

ம்ம்...சக்திய.. சக்திய கொன்னுட்டாங்க மாமா!!!

டேய்.. யாருடா சக்தி..? உன் ஸ்கூல் ஃபிரண்டா..?

தெரிஞ்ச பொண்ணாடா?


.. இல்லை மாமா.. அது நம்ம வீட்டு ஆடு..என் சக்தி ..!

அதை இன்னிக்கு கழுத்த அறுத்து கொன்னுட்டாங்க மாமா..!!

நம்மை நம்பி வந்த ஒரு உயிரை இப்படி சித்திரவதை பண்ணி கொல்றது எவ்ளோ பெரிய பாவம். அது நம்மை எதிர்கிறது இல்லைங்குறதுக்காக
அதை கொலை பண்றது எவ்ளோ கொடூரம்.. இத அம்மாகிட்ட சொன்னா என்னை திட்டுறாங்க.


..அவருக்கு மனதிற்குள் சுருக் என்றது.

அவர் கண்களிலும் கண்ணீர்..

ஆமாம்பா..அது தப்புதான்.

இனி அது நடக்காம பாத்துக்கறேண்டா கண்ணா..நீ அழாதே மா!!

32 comments:

நட்புடன் ஜமால் said...

ஆட்டின் மீது உங்களின் அன்பு அருமை.


[[உயிர் என்பது ஆட்டுக்கு மட்டும் தானா

பச்சிளைகளுக்கு, காய்கறிகளுக்கு கிடையாதா ...]]

மற்றபடி எழுத்தாக்காம் நன்றாக இருந்தது.

Ungalranga said...

@நட்புடன் ஜமால்,

அண்ணே,
கதையில் சொல்ல வரது வேற..நீங்க கேக்குறது வேற..

நம்பி வந்த உயிரை நாசம் பண்ணாதேன்னு தான் சொல்ல வரேன்.

நல்ல கேள்வி.. வாழ்த்துக்கள்!!


[[உயிர் என்பது ஆட்டுக்கு மட்டும் தானா

பச்சிளைகளுக்கு, காய்கறிகளுக்கு கிடையாதா ...]]

Anonymous said...

பாராட்டுக்குரிய கருத்து.

வாழ்த்துக்கள்!!

SUFFIX said...

நல்ல கற்பனைத்திறன் ரங்கன்.

நட்புடன் ஜமால் said...

நம்பி வந்த உயிரை நாசம் பண்ணாதேன்னு தான் சொல்ல வரேன்.\\

உண்மை தானுங்கோ --- அந்த அளவுக்கு எனக்கு விளங்கயில்லை ...

நட்புடன் ஜமால் said...

அது நம்மை எதிர்கிறது இல்லைங்குறதுக்காக
அதை கொலை பண்றது எவ்ளோ கொடூரம்.]]

இங்கிருக்கா மேட்டரு - இப்போ புரிஞ்சிக்கினேப்பா

Ungalranga said...

@நட்புடன் ஜமால்,

இப்போ விளங்கிடுச்சுல்ல ஜமால்.. அது போதும் எனக்கு..

விளக்கி விளக்கியே டயர்டாகிட்டேன் போங்க..!!!

Anonymous said...

கண்கலங்க வச்சிட்டது..சின்ன குழந்தைக்கு இருக்கும் மனசு நமக்கு ஏனில்லை...வலியோடு வெளியேறுகிறேன்...

Ungalranga said...

@நட்புடன் ஜமால்,

புரிஞ்சா ரைட்டு பா..புரியலைன்னா லெஃப்டுப்பா..!!

Ungalranga said...

@தமிழரசி,

அட.. எதுக்கு கண்ணீரெல்லாம்..பாருங்க.. பக்கமே நனைஞ்சு போச்சு..!!

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உங்கள் சிந்தனைக் கதை அபாரம். இப்படி எழுதுவதை விட வேறு என்னதான் பண்ண முடியும்?

Ungalranga said...

@ஜெஸ்வந்தி,

மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதற்கே இந்த கதை.

மாற்றமும் மாறுதல்களும் நம் முயற்சியால் வருவதுதானே!!

முயன்று பாருங்கள்..வெற்றி நிச்சயம்..

ஓவரா பேசிட்டனோ?

எனிஹவ்.. நல்லதாய் நாளை மலர வாழ்த்துக்கள்.

வருகைக்கு நன்றி ஜெஸ்வந்தி.

sakthi said...

நம்மை நம்பி வந்த ஒரு உயிரை இப்படி சித்திரவதை பண்ணி கொல்றது எவ்ளோ பெரிய பாவம். அது நம்மை எதிர்கிறது இல்லைங்குறதுக்காக
அதை கொலை பண்றது எவ்ளோ கொடூரம்.

நிஜம் தான்

அருமையான கதை ரங்கா

Ungalranga said...

@sakthi,
நன்றி சக்தி..

வருகைக்கு நன்றி.

கானா பிரபா said...

அருமையா இருக்கு

Ungalranga said...

@கானா பிரபா,

நன்றி கானா பிரபா.

உங்கள் பதிவுகளின் ரசிகன் நான்.

*இயற்கை ராஜி* said...

nalla karuthtu

सुREஷ் कुMAர் said...

//
@நட்புடன் ஜமால்,

அண்ணே,
கதையில் சொல்ல வரது வேற..நீங்க கேக்குறது வேற..

நம்பி வந்த உயிரை நாசம் பண்ணாதேன்னு தான் சொல்ல வரேன்.

நல்ல கேள்வி.. வாழ்த்துக்கள்!!
//
ஹையா.. நான் சரியாதான் புரிஞ்சுகிட்டேன்..

ஜமால் அண்ணா பின்னூட்டத்தபாத்துதான் கொஞ்சம் கொழம்பிட்டேன்..

நம்பி வந்தவங்கள துன்புருத்தாதேன்ற கருத்து என்னமோ சரிதான்.. ஆனாலும் ஆட்டையும் அவங்களையும் கம்பேர் பண்ணிருக்கின்களே நியாயமா..

"உழவன்" "Uzhavan" said...

உடலின் எடை வேறுபடலாம். ஆனால் உயிரின் எடை ஒன்றுதான்.

ALIF AHAMED said...

நல்ல கதை..(?)

Ungalranga said...

@இயற்கை,

நன்றி இயற்கை!!

ALIF AHAMED said...

ஆடு’னா புல்ல திங்கனும் இப்படி பூவை திங்க கூடாது :)

Ungalranga said...

@சுரேஷ்,

உங்க ஹிந்தி அறிவை ஏன் பேரில் காட்டிகிட்டு..தமிழுக்கு வாப்பா.
//நம்பி வந்தவங்கள துன்புருத்தாதேன்ற கருத்து என்னமோ சரிதான்.. ஆனாலும் ஆட்டையும் அவங்களையும் கம்பேர் பண்ணிருக்கின்களே நியாயமா..//

எனக்கு கேள்விதான் கேக்க தெரியும் பதில் சொல்ல தெரியாது..அக்காங்க்..

ஆனாலும் நன்றி நல்லா சொல்லுவேன்.

வருகைக்கு நன்றி சுரேஷ்.

நல்ல கேள்வி சுரேஷ் நன்றி.

Ungalranga said...

@மின்னுது மின்னல்,

புல்லில் பூவும் ஒட்டிகிச்சு..சிம்பிள்

ஆட்டுக்கே அட்வைஸ் செய்த மின்னுது மின்னல் வாழ்க!!

வருகைக்கு நன்றிங்க!!

pudugaithendral said...

கொன்னா பாவம் தின்னா போச்சுன்னு பெரியவங்க சொல்லலான். பிள்ளைங்க மனசு வேற...

அரு்மையா இருக்கு. மாமன் மருமகன் உறவும் அருமை

கும்க்கி said...

ஹி...ஹி..ஹி.

(லேசா தலய சொறிஞ்சும் பார்க்கிறேன்..அப்படியும் புரியல...)

Ungalranga said...

@கும்க்கி,

அண்ணே..!! புரிய வேண்டிய அவசியமே இல்லை..

ரசிக்க ஆரம்பிச்சா போதும்..எந்த விஷயமும் தானா புரியும்..

வருகைக்கு நன்றி அண்ணே!!

cheena (சீனா) said...

அன்பின் ரங்கா

கதை நல்லாத்தான் இருக்கு - சத்தியக் கொண்ணாத்தான் சந்திரனுக்கு பொண்டாட்டி நெனப்பு வருமாக்கும் . ம்ம்ம்ம்ம்ம்

நல்லாருடே

ப்ரியமுடன் வசந்த் said...

எனக்கு சாப்புடுற ஆட்டுக்கறிகொழம்பு.ஆட்டுக்கால் சூப்பும் இனி சாப்பிடும்போது இந்த சக்தி ஞாபகம் வராமலிருக்க ஆண்டவன கேட்டுக்கிறேன்....

सुREஷ் कुMAர் said...

//
ரங்கன் said... July 15, 2009 5:37 PM
@சுரேஷ்,

உங்க ஹிந்தி அறிவை ஏன் பேரில் காட்டிகிட்டு..தமிழுக்கு வாப்பா.
//
இது இந்தி அறிவை காட்டுவதற்கு அல்ல..
ஏற்கனவே பல சுரேஷ் குமார்'கள் இங்க சுத்திட்டு இருக்காங்க..
பலபேர் யாரோ போட்ட பின்னூட்டத்த நான் போட்டதா நெனச்சுகிட்டு என்கிட்ட கேக்குறாங்க..

அதான்.. தேவை இல்லாத குழப்பத்தை தீர்க்கத்தான் இந்த ஏற்பாடு..

நான்கு நாட்களுக்கு முன்புவரை தமிழில்தான் பெயரை போட்டுவந்தேன்..

குழப்பங்கள் அதிகரிக்கவே இப்படிஒரு மாற்றுஎபாடு அவசியமாய் போய்விட்டது..

பெயர்குலப்பத்தை தவிர்க்க வேறு நல்லவழி இருந்தால் கூறுங்கள்.. பெயரை மாற்றிக்கொள்ளச்சொல்லி எல்லாம் ஐடியா கொடுக்ககூடாதாக்கும்..

Ungalranga said...

@புதுகைத் தென்றல்,

வருகைக்கு நன்றி.

@ப்ரியமுடன்...வசந்த்,

கண்டிப்பா வரணும்.என் வேண்டுதல்கள்!!

@சுரேஷ் குமார்,

சு.ரேஷ் குமார் ,

சுரேஷ் என்கிற நான்,

இப்படி முயற்சி பண்ணலாமே!!

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.